அவரை போலவே அழகான காரை வாங்கிய நடிகை! மெர்சிடிஸ் கார்களை தான் எல்லாரும் வாங்கி போடுறாங்க!

இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை நியா ஷர்மா, புதிதாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சிஎல்இ53 கூபே காரை வாங்கியுள்ளார். தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஸ்ட்ராப்லெஸ் லெஹங்கா உடையில் வந்த நியா ஷர்மா, தனது புதிய கண்கவர் மஞ்சள் நிறத்திலான மெர்சிடிஸ் காரையும் அறிமுகப்படுத்தினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பையில் முதல் மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்இ53 காரை மஞ்சள் நிறத்தில் வேறு எந்த சினிமாக்காரர்களிடமும் பார்த்தது இல்லை. இந்த புதிய காரை டெலிவரி எடுக்கும் படங்களை, நடிகை நியா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

actress nia sharma buys mercedes-amg cle53

பொதுவாகவே நடிகைகள் ஃபேஷனில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்; இந்த விஷயத்தில் நியா ஷர்மா தேர்வு செய்யும் பொருட்கள் யாவும் மிகவும் ஃபேஷன் ஆனவைகளாக உள்ளன. அதேநேரம், சினிமா கதாபாத்திரத்திற்காக தனது தலையை மொட்டையடித்த முதல் இந்திய தொலைக்காட்சி நடிகைகளில் இவரும் ஒருவர். அவரது ஸ்டைல், கவர்ச்சி மற்றும் சமூக ஊடக ஈடுப்பாடுகளும் அவரை தொலைக்காட்சி திரைக்கு அப்பாலும் பிரபலமாக்கியுள்ளது.

நடிகை நியா ஷர்மாவின் கேரேஜில் வால்வோ எக்ஸ்சி90, ஆடி க்யூ7, ஆடி ஏ4 போன்ற சொகுசு கார்கள் ஏற்கனவே உள்ளன. அவற்றோடு இந்த புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்இ53 காரும் இணைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, நியா ஷர்மாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.70 முதல் ரூ.75 கோடி வரை இருக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

actress nia sharma buys mercedes-amg cle53

தற்போது, ரூ.1.35 கோடி செலவில் இந்த புதிய காரை வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அதன் உயர் ரக செயல்திறன் கொண்ட சொகுசு கார்கள் பிரிவை விரிவுபடுத்துவதற்காக, மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்இ53 காரை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இது பிராண்டின் பத்தாவது ஏஎம்ஜி கார் ஆகும்.

ஏஎம்ஜி கார்களுக்கே உண்டான கிரில் மற்றும் மஸ்குலார் பவர் டோம்ஸ் வடிவமைப்பு, இந்த காருக்கு கவர்ச்சியான தோற்றத்தை அளிக்கின்றன. சிவப்பு நிறத்தில் பிரேக் காலிப்பர்கள், ஃபிரேம்லெஸ் கதவுகள் மற்றும் 21-இன்ச் அலாய் சக்கரங்கள், காரின் பக்கவாட்டு தோற்றத்தை மேலும் அழகாக்குகின்றன.

actress nia sharma buys mercedes-amg cle53

CLE 53 கூபேயின் பின்பகுதியில் தனித்துவமான செவ்வக வடிவில் ராப் அரவுண்ட் டெயில் விளக்குகளும், குவாட் எக்ஸாஸ்ட் குழாய்களும் மற்ற மெர்சிடிஸ் கார்களில் இருந்து இதனை வேறுபடுத்துகின்றன. காரின் உட்புறத்தில் 11.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை டேஸ்போர்டில் உள்ளன.

ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுக்கான வயர்லெஸ் இணைப்பு வசதி, 64-வண்ண விளக்குகள் சிஸ்டம், பர்மிஸ்டர் ஆடியோ சிஸ்டம், மெமரி செயல்பாடுகளுடன் கூடிய பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிரைவரின் தலைக்கு மேலே ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

actress nia sharma buys mercedes-amg cle53

இந்த காரில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு ஸ்ட்ரெய்ட்-சிக்ஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 449 பிஹெச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓவர்பூஸ்ட் செயல்பாடு மூலம் கூடுதலாக 40 என்எம் டார்க் கிடைக்கிறது.

மேலும், 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 4மேட்டிக்+ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டமும் ஏஎம்ஜி சிஎல்இ53 காரில் உள்ளது. இந்த கூபே-ஸ்டைல் கார் வெறும் 4.2 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும் என மெர்சிடிஸ் தெரிவிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பமான ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸ் பேக்கேஜைப் பயன்படுத்தி மணிக்கு 270கிமீ வேகத்தை அடையவும் வாய்ப்பு உள்ளது.

actress nia sharma buys mercedes-amg cle53

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஞ்சள் நிறத்தில் கார்களை பார்ப்பது கொஞ்சம் குறைவுதான். இதில் இருந்து நடிகை நியா ஷர்மாவின் ஃபேஷன் இரசனையை அறிய முடிகிறது. தீபாவளி நல்ல நாளில் கார் வாங்கிய ராசி இந்த நடிகைக்கு கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என மூன்று விதமான கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனை செய்துவரும் நிலையில், இதில் ஏஎம்ஜி கார்கள் செயல்திறன்மிக்கவை ஆக விளங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, October 19, 2025, 23:59 [IST]
English summary
Actress nia sharma buys mercedes amg cle53 ahead of diwali check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X