அளவு எடுத்து செதுக்கன சிலை மாரி இருக்காங்க! ரோட்ல சர்வ சாதாரணமா நடந்து வந்து கோடி ரூபா கார்ல ஏறி போனது அவங்களா
இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 75.90 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 76.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1 கோடி ரூபாய் வரும். விலை உயர்ந்த கார் என்பதால், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி திகழ்கிறது. குறிப்பாக திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரை வைத்துள்ளனர்.

தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்பட நடிகை சோனாலி குல்கர்னி (Sonali Kulkarni) கூட, சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரை வாங்கியிருந்தார். அத்துடன் நடிகைகள் இஷா தல்வார் (Isha Talwar), ஜாஷ்மின் பாஸின் (Jasmin Bhasin) மற்றும் மிதிலா பால்கர் (Mithila Palkar) ஆகியோரிடமும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார் உள்ளது.
இந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகையான நிதிடா டட்டாவும் (Nikita Dutta), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரை வைத்துள்ளார். அவர் இந்த காரில் ஏறி பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. மும்பையின் பந்த்ரா பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து, சாலையில் நின்று கொண்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில், நிகிடா டட்டா ஏறி செல்வதை காணலாம். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம்தான், நிகிடா டட்டா இந்த காரை வாங்கினார். இந்த காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 258 பிஎஸ் பவர்/400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும்.
மற்றொன்று, 197 பிஎஸ் பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
வசதிகளை பொறுத்தவரையில், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், ட்யூயல் ஸோன் ஏசி, 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் MBUX டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
பாதுகாப்பை பொறுத்தவரையில், வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்க கூடிய அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு எஸ்யூவி காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை நிகிடா டட்டா பயன்படுத்தி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கார், ஆடி க்யூ5 (Audi Q5), பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) மற்றும் வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








