தேவதை மாதிரி காரில் இருந்து இறங்கி வந்தது இவ்வளவு பெரிய நடிகையா? 42 வயதிலும் அந்த கம்பீரம் குறையவில்லை!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), சொகுசு கார்களை (Luxury Car) உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் உலகளவில் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. இதன் காரணமாகவே, பல சினிமா நடிகர், நடிகைகளிடம் குறைந்தது ஒரு பென்ஸ் காராவது உள்ளது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை (Bollywood Actress) ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (S-Class) காரை வாங்கியுள்ளார். யார் அந்த நடிகை என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள எஸ்-கிளாஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
பொதுவாகவே பாலிவுட் சினிமாக்காரர்கள் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை வாங்கியிருக்கும் பாலிவுட் நடிகை, நிம்ரத் கவுர் (Nimrat Kaur) ஆவார். ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் பிலானி என்கிற பகுதியில் பிறந்தவர்.

2013ஆம் ஆண்டில் டேரி மில்க் சில்க் (Dairy Milk Silk) விளம்பரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை நிம்ரத் கவுர், அதன்பின் 2016இல் நடிகர் அக்ஷய் குமார் (Akshay Kumar) உடன் 'ஏர்லிஃப்ட்' திரைப்படத்தில் நடித்தார். கடந்த 2022ஆம் ஆண்டில் பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் (Abhishek Bachchan)-இன் 'தாஸ்வி' திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பாலிவுட்டில் மேலும் பிரபலமாகினார்.
தாஸ்வி திரைப்படத்தில் நடித்ததன் காரணமாகவே, இவருக்கும் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கிசுகிசுகள் உலாவி வருகிறது. கடந்த 2023இல் 'சாஜினி ஷிண்டே கா வைரல் வீடியோ' என்கிற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நிம்ரத் கவுருக்கு 42 வயதாகிறது. ஆனால், இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் புத்தம் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை வாங்கியுள்ளார். இந்த புதிய பென்ஸ் காரில் இருந்து இறங்கி மும்பை விமான நிலையத்திற்குள் (Mumbai Airport) நடிகை நிம்ரத் கவுர் செல்லும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. காரின் பின் கதவு வழியாக வெளியே வந்து விமான நிலையத்திற்குள் நிம்ரத் கவுர் செல்கிறார். அதாவது, அவர் கார் ஓட்டவில்லை.
நடிகை நிம்ரத் கவுர் சமீபத்தில்தான் ரூ.3 கோடி மதிப்பிலான புத்தம்-புதிய நியூ-ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை வாங்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.77 கோடியாக உள்ளது. நடிகை நிம்ரத் கவுர் வாங்கியிருப்பது எஸ்-கிளாஸ் காரின் எஸ்450 4மேட்டிக் (S450 4MATIC) வேரியண்ட் ஆகும்.

இது ஒரு ஹைப்ரீட் வேரியண்ட் (Hybrid Variant) ஆகும். அதாவது, பெட்ரோல் அல்லது எலக்ட்ரிக்கில் இந்த காரை இயக்கலாம். இதனாலேயே இதன் விலை சற்று அதிகமாக உள்ளது. எஸ்450 4மேட்டிக் வேரியண்ட்டின் மும்பை ஆன்-ரோடு விலை தற்சமயம் ரூ.2.09 கோடியாக உள்ளது. இந்த வேரியண்ட் மட்டுமின்றி, எஸ்350டி (S350d) என்கிற டீசல் வேரியண்ட்டிலும் இந்த கார் கிடைக்கிறது. அதன் மும்பை ஆன்-ரோடு விலை ரூ.2.01 கோடி ஆகும்.
நடிகை நிம்ரத் கவுர் தேர்வு செய்திருக்கும் எஸ்450 4மேட்டிக் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 375 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜினின் இயக்க ஆற்றல்கள் 4மேட்டிக் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக காரின் அனைத்து 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் ஆனது இந்தியர்கள் மத்தியில் பிரபலமான காராக விளங்குகிறது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் (Superstar) ஷாரூக்கான் (Shahrukh Khan) மற்றும் நடிகை கரீனா கபூர் (Kareena Kapoor) உள்ளிட்டோரிடமும் உள்ள இந்த பென்ஸ் கார் ஆனது அதன் சொகுசு வசதிகளுக்காக பிரபலமானதாக உள்ளது. ஆதலால், இத்தகைய காரை நடிகை நிம்ரத் கவுர் வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications









