காருக்குள் ஸ்டேரிங்கை பிடித்து இருந்தவரை பார்த்ததும் எல்லாரும் ஷாக்! ஒரே இந்திய நடிகையாய் மதுரை பெண்!

வலிமையான அமெரிக்கன் கார் என்றாலே பணக்காரர்கள் மட்டுமே அதை வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே நம்மில் பலரிடம் உள்ளது. அதுவும், அத்தகைய அமெரிக்கன் கார்களை வைத்திருக்கும் பணக்காரர்களை எல்லாம் பார்த்தால், காருக்கு இணையாக அவர்களது உடலும் நன்கு கட்டுக்கோப்பாக இருக்கும். ஆனால் சற்று விசித்திரமாக, தமிழ் நடிகை ஒருவர் அமெரிக்கன்-ஸ்டைல் டாட்ஜ் சேலஞ்சர் ஸ்போர்ட்ஸ் காரை வைத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா...!!

அவர் வேறு யாருமில்லை... விரைவில் திருமணம் நடைபெற உள்ள இளம் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆவார். இந்திய நடிகைகளிலேயே இவர்தான் கிளாசிக்கான வலிமைமிக்க காரை வைத்திருக்கும் ஒரே நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பந்தய மற்றும் ட்ரிஃப்ட் கார் ஓட்டுநரும் ஆவார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

actress nivetha pethuraj spotted in dodge challenger sports car

இந்த நிலையில் சமீபத்தில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது டாட்ஜ் சேலஞ்சர் காரை ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரோஹன் ராபர்ட் என்ற இன்ஃப்ளூயன்சர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், தான் ஒரு டாட்ஜ் சேலஞ்சர் காரை துபாயில் பார்த்ததாகவும், அதை ஒரு இந்திய நடிகை ஓட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அந்த காரின் ஸ்டீயரிங் சக்கரத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் இருப்பதை வீடியோ காட்டுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையான நிவேதா, தமிழில் பல ஹிட் படங்களில் நடித்தது மட்டுமின்றி, 'அலா வைகுண்டபுரம்லூ' போன்ற தெலுங்கு வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

actress nivetha pethuraj spotted in dodge challenger sports car

துபாயில் டாட்ஜ் சேலஞ்சர் காரை வாங்கிய இரண்டாவது பெண் நிவேதா பெத்துராஜ் என அந்த இன்ஃப்ளூயன்சர் குறிப்பிடுகிறார். இதற்காக அவரை பாராட்டி, எப்போது இந்த காரை வாங்கினீர் என்று யூ-டியூபர் கேட்க, அதற்கு அவர் 2014-ல் வாங்கியதாகப் பதிலளித்துள்ளார். பின்னர், டாட்ஜ் காரில் என்னை வைத்து ஒரு ரவுண்ட் அடிக்க முடியுமா என அவர் கேட்க, நிவேதாவும் ஒப்புக்கொள்கிறார்.

அவர் காரை ஓட்டத் தொடங்கியதும், "நீங்கள் வேகமான டிரைவரா அல்லது மெதுவான டிரைவரா?" என்ற கேள்விக்கு சூசமாக காரின் வேகத்தை அதிகரித்து நடிகை நிவேதா பெத்துராஜ் பதிலளித்துள்ளார். டாட்ஜ் சேலஞ்சர் வைத்திருப்பதைத் தாண்டி, ஏற்கனவே கூறியதுபோல் நிவேதா பெத்துராஜ் கார் பந்தயத்திலும், ட்ரிஃப்டிங்கிலும் ஆர்வம் கொண்டவர். எந்த அளவிற்கு என்றால், ஃபார்முலா ரேஸ் கார் பயிற்சியின் முதல் நிலையை அவர் முடித்துள்ளார்.

actress nivetha pethuraj spotted in dodge challenger sports car

2021ஆம் ஆண்டில் ஃபார்முலா 1 ரேசிங் டிரைவராகவும் தகுதி பெற்றவர். எஃப்.எம்.எஸ்.சி.ஐ (Federation of Motor Sports Clubs of India) மூலம் லெவல் 2 ஃபார்முலா ரேஸராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், நிவேதா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், பல தொழில்முறை ட்ரிஃப்ட் ரேஸர்களுடன் சேர்ந்து அவர் தனது தனிப்பயனாக்கப்பட்ட ட்ரிஃப்ட் ரேஸ் காரை ட்ராக்கில் ஓட்டுவதைக் காண முடிந்தது.

நடிகை நிவேதா பெத்துராஜ் வைத்திருக்கும் பழமையான அமெரிக்க ஸ்போர்ட்ஸ் காரான டாட்ஜ் சேலஞ்சர் 3.6 லிட்டர் வி6 என்ஜினை கொண்டது. இது 305 பிஎச்பி ஆற்றலையும் 364 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த சக்தி காரின் பின் சக்கரங்களுக்குச் செலுத்தப்படுவதால், டாட்ஜ் சேலஞ்சர் ஓட்டுவதற்கு சவாலானதாகவும், அதே சமயம் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

actress nivetha pethuraj spotted in dodge challenger sports car

வேகம் மற்றும் ஸ்டைலை விரும்பும் நடிகைகளைப் பற்றி பேசுகையில், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஒரு லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா காரை வைத்துள்ளார். சிவப்பு நிறத்தில் உள்ள அவரது லம்போர்கினி 5.2 லிட்டர் வி10 என்ஜினைக் கொண்டுள்ளது. இது 640 பிஎஸ் ஆற்றலையும், 565 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இதன் விலை ரூ.4.5 கோடி முதல் தொடங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமாவில் பலருக்கு கார் பந்தயங்களின் மீது ஆர்வம் உள்ளது. உதாரணத்திற்கு நடிகர் அஜித்குமாரை சொல்லலாம். அதே வரிசையில் வந்தவர்தான், நடிகை நிவேதா பெத்துராஜும் ஆவார். ஆரம்பத்தில் பொருளாதார காரணங்களுக்காகவும், வேறு சில காரணங்களினாலும் சினிமாவுக்கு வருபவர்கள், பின்னர் சினிமாவில் ஓரளவிற்கு வருவாயை ஈட்டிய பின்பு தங்களது விருப்பமான பாதையை தேர்வு செய்துக் கொள்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 19, 2025, 12:36 [IST]
English summary
Actress nivetha pethuraj spotted with her classic dodge challenger sports car in dubai
மேலும்... #celebrity cars #classic cars #dubai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X