இவங்க பெண் அஜித்தா இருப்பாங்களோ! கார் ஓட்டுறத பாக்கும் போதே பதறுது.. இவங்க தமிழ் படத்துல நடிச்சிருக்காங்களா!!
இந்தியாவில் உள்ள நடிகர்கள் பெரும்பாலானோர் மிகப் பெரிய கார் காதலர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அஜித்தை போல தீவிர வாகன வெறியர்களை இவர்களில் காண்பது மிகவும் கடினம். நடிப்பில் மட்டுமல்ல வாகனங்களை ஓட்டுவதிலும் கை தேர்ந்தவரே நடிகர் அஜித் குமார். தன்னுடைய படங்களில் வரும் பெரும்பாலான வாகன ஸ்டண்ட் காட்சிகளில் டூப்பே போடாமல் நடிக்கும் வழக்கத்தை அவர் கொண்டிருக்கின்றார். இதற்கு சான்றாக பல திரைப்படங்கள் உள்ளன. இவரை போலவே ஓர் பெண் நடிகர் வாகனங்களை ஓட்டுவதில் கை தேர்ந்தவராக இருக்கின்றார் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த பெண் நடிகர் கார் ஸ்டண்டில் ஈடுபடும் வீடியோக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நஷ்ரத் பரூச்சா, இவரே கார் ஸ்டண்டில் ஈடுபட்டு நடிகை ஆவார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

இந்தி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் இவர் ஒரே ஒரு படம் மட்டுமே நடித்திருக்கின்றார். மறைந்த நடிகர் சேது மற்றும் சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரைப்படம் 'வாலிபராஜா'. இந்த படத்தில் 'ஸ்வீட்டி' எனும் ரோலில் நடித்தவர் இவரே ஆவார். இதைப் போலவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ரோல்களில் அவர் நடித்து வருகின்றார்.
இந்த நடிகை சமீபத்திலேயே மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான தார் எஸ்யூவி கார் மாடலை வாங்கினார். இந்த காரில் அவர் ஏற்கனவே வலம் வர தொடங்கிவிட்டார். ஆஃப்-ரோடு மற்றும் வழக்கமான சாலைகளில் பயன்படுத்துவதற்கு உகந்த கார் மாடலே இதுவாகும். இந்த கார் மாடலிலேயே அவர் ஸ்டண்ட் செய்திருக்கின்றார்.
அதுகுறித்த வீடியோவையே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நடிகை தற்போது பகிர்ந்திருக்கின்றார். இந்த வீடியோ ஓர் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைத்து எடுக்கப்பட்டதாக நடிகை கூறி இருக்கின்றார். பொதுவெளியில் இதுபோன்று வாகன ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். அதேவேளையில், நஷ்ரத் பரூச்சா பயன்படுத்தி இருக்கும் அந்த பகுதியானது வாகன ஸ்டண்ட் செய்கைகளுக்கு என்றே தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட இடம் ஆகும்.
சுமார் 65 ஏக்கர் பரப்பளவுக் கொண்டதே அந்த தனியார் இடமாகும். ஆஃப்-ரோடு பயணங்களுக்காக பிரத்யேக பயிற்சிகள் அங்கு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். இதற்காக பராமரிக்கப்பட்டு வந்த மைதானத்திலேயே நஷ்ரத் தன்னுடைய தனி திறமையைக் காண்பித்து இருக்கின்றனர். அவரின் இந்த துணிச்சலான செயல் பார்ப்போரை ஒரு நொடி அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

மேலும், ஒரு வேளை இவங்க பெண் அஜித்தாக இருப்பாங்களோ என்றும் நம்மை நினைக்க செய்துள்ளார். அந்த அளவிற்கு நடிகர் அஜித்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு வாகன ஸ்டண்டை அவர் செய்திருக்கின்றார். இதுமாதிரியான பயணங்களுக்கு உகந்த வாகனமே தார் எஸ்யூவி ஆகும். ஆஃப்-ரோடை சமாளிப்பதற்காக ஏகப்பட்ட வசதிகளை இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
அதேவேளையில், குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏதுவான வாகனமாகவும் இதனை மஹிந்திரா தயார் செய்துள்ளது. இதுமட்டுமின்றி, தார் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இந்த சிறப்புகளே அந்த காரின் பக்கம் மக்களையும், பிரபலங்களையும் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கின்றது.
இந்த காரில் 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு வெவ்வேறு விதமான ஆஃப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனிலேயே தார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரைவில் இந்த கார் மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷன் விற்பனைக்குக் களமிறக்கப்பட உள்ளது. அடுத்த மாதமே அதன் அரங்கேற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








