கால்ல செருப்பு கூட போடாம கோயிலுக்கு வந்தது இவ்ளோ பெரிய ஆளா! அதுவும் இவ்ளோ சாதாரணமான ஒரு கார்ல!

இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக தொலைக்காட்சி சீரியல்கள் இருந்து வருகின்றன. தமிழ்நாடு என்றில்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு, இல்லத்தரசிகள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படி ஹிந்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்வேதா திவாரி (Shweta Tiwari). இவர் இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவராக அறியப்படுகிறார்.

ஸ்வேதா திவாரியை போலவே, அவரது மகள் பலக் திவாரியும் (Palak Tiwari) தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பலக் திவாரி நடித்து வருகிறார். சுமார் 25 வயது மட்டுமே நிரம்பிய இவர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக அறியப்படுகிறார்.

Palak Tiwari Spotted In MG Hector

இதை நிரூபிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. ஆம், மஹா சிவராத்திரியை (Maha Shivaratri) முன்னிட்டு, சிவன் கோயிலுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட பலக் திவாரியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், சிகப்பு நிற கார் ஒன்றில் இருந்து இறங்கி, காலில் செருப்பு அணியாமல், பலக் திவாரி கோயிலுக்கு செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. பலக் திவாரிக்கு சிகப்பு நிறம் என்றால், மிகவும் பிடிக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் சிகப்பு நிற காரை பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

MG Hector

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பலக் திவாரி சிகப்பு நிற உடையில் வந்து சென்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது ஒரு பக்கம் இருக்க, பலக் திவாரி பயன்படுத்தியது எம்ஜி ஹெக்டர் (MG Hector) கார் ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த, மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர் காரின் ஆரம்ப விலை 14 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 22.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700) உள்ளிட்ட கார்களுடன் எம்ஜி ஹெக்டர் போட்டியிட்டு வருகிறது.

எம்ஜி ஹெக்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். எம்ஜி ஹெக்டர் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) சற்றும் பஞ்சம் இல்லை.

இதில், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பொதுவாக நடிகைகள் என்றால், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். ஆனால் பலக் திவாரி எம்ஜி ஹெக்டர் காரில் பயணம் செய்து வருகிறார். நடிகைகளை பொறுத்தவரையில், எம்ஜி ஹெக்டர் ஒரு எளிமையான கார்தான் என நம்மால் சொல்ல முடியும்.

அனேகமாக இந்த எம்ஜி ஹெக்டர், பலக் திவாரிக்கு மிகவும் பிடித்தமான கார்களில் ஒன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் அவர் இதற்கு முன்பாக பல முறை இதே எம்ஜி ஹெக்டர் காரில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ததை கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 18:09 [IST]
English summary
Actress palak tiwari spotted in mg hector suv viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+