காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். இதற்கு எந்தவொரு திரையுலகை சேர்ந்தவர்களும் விதிவிலக்கு அல்ல. குறைவான பட்ஜெட் திரைப்படங்களை அதிகளவில் உருவாக்கும் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளும் விலை உயர்ந்த கார்களில்தான் பயணம் செய்கின்றனர்.
இந்த வரிசையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகைகளில் ஒருவரான பிரியா மோகன் (Priya Mohan) தற்போது மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 46.05 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனையாகி கொண்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் (Shah Rukh Khan) கூட, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 72.6 kWh பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.
இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும். இந்த பேட்டரி, சூப்பர்ஃபாஸ்ட் 800V சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆகும். இதன் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்தால், வெறும் 18 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரம்பி விடும்.

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக இருப்பதால், அதிநவீன வசதிகளுக்கு பஞ்சமில்லை. 12.3 இன்ச் அளவுடைய 2 திரைகள் இந்த காரின் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாகும். இதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும், மற்றொன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும் செயல்படும். இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற அதிநவீன வசதிகளும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. கியா இவி6 (Kia EV6) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், ஹூண்டாய் ஐயோனிக் 5 போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை பிரியா மோகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சௌகரியமான பயணத்தை வழங்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதில், ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) மிகவும் முக்கியமானதாகும். இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த கார், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். வரும் 2025ம் ஆண்டு, ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து வரவுள்ள இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








