39 வயதில் பிரபல நடிகை வாங்கியிருக்கும் விலையுயர்ந்த பென்ஸ் கார்!! கணவர் உடன் நேரா ஷோரூமுக்கு வந்துவிட்டார்!

பிரியா மணி (Priya Mani), முன்னணி திரைப்பட நடிகை. சமீபத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் உடன் ஜவான் படத்தில் நடித்திருந்த இவர், புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரை வாங்கி உள்ளார். ரூ.74 லட்சத்தில் நடிகை பிரியா மணி வாங்கியுள்ள இந்த புதிய பென்ஸ் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

கேரளாவை சேர்ந்த நடிகை பிரியா மணி ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்பின், தமிழில் அவர் நடித்த பருத்திவீரன் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமிழிலும் பிரியா மணி நிறைய படங்களில் நடித்தார். அத்துடன், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

actress priyamani buys mercedes-benz glc

சமீப ஆண்டுகளாக பெரியதாக பட வாய்ப்புகள் இல்லாமல், தொலைக்காட்சி ரியால்டி ஷோக்களில் நடுவராக திரையில் தோன்றிவந்த நடிகை பிரியா மணி, சில மாதங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உடன் ஜவான் திரைப்படத்தில் நடித்தார். கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் இந்தியா முழுவதும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகை பிரியாமணி புதியதாக நியூ ஜென்ரேஷன் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி காரை வாங்கி உள்ளார். போலார் வெள்ளை என்கிற பளிச்சிடும் வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரை ஷோரூம் ஒன்றில் நடிகை பிரியாமணி தனது குடும்பத்தாருடன் டெலிவிரி எடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளன.

actress priyamani buys mercedes-benz glc

இந்தியாவின் நம்பர் ஒன் லக்சரி பிராண்டான மெர்சிடிஸ்-பென்ஸில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் லக்சரி எஸ்யூவி கார்களுள் ஒன்றாக மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி விளங்குகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்தியாவில் தற்சமயம் ரூ.74.20 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. நடிகை பிரியா மணி வாங்கியிருக்கும் நியூ-ஜென்ரேஷன் ஜிஎல்சி கார் கடந்த 2023ஆம் ஆண்டில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரின் 2வது ஜென்ரேஷன் மாடலாக இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நிறைய அப்டேட்கள் ஜிஎல்சி காரில் கொண்டுவரப்பட்டன. காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் க்ரில், ரீடிசைனில் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் மெல்லியதான எல்இடி டெயில்லைட்ஸ் வழங்கப்படுகின்றன. காரின் பின்பக்கத்தில் டெயில்லைட்ஸை இணைக்கும் வகையில் டெயில்கேட்டில் கருப்பு நிறத்திலான பார் கொடுக்கப்படுகிறது.

actress priyamani buys mercedes-benz glc

அத்துடன், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜிஎல்சி காரின் உள்ளேயும் 11.9-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஏர்கிராஃப்ட்-ஸ்டைலில் ஏசி காற்றுக்கான துளைகள் உள்ளிட்ட புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டன. இவை மட்டுமின்றி, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி வசதிகளும், 64-வண்ண விளக்குகளும் புதிய ஜிஎல்சி காரில் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் ஜிஎல்சி300, ஜிஎல்சி220டி என இரு விதமான வேரியண்ட்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஜிஎல்சி300 வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும், ஜிஎல்சி220டி காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்படுகின்றன. இந்த இரு என்ஜின்களுடனும் 48-வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரின் அழகே அதன் போலார் வெள்ளை நிற பெயிண்ட் ஆகும். அதனை அறிந்து, சரியாக இந்த வெள்ளை நிறத்தில் நடிகை பிரியா மணி இந்த காரை வாங்கி உள்ளார். இந்த விலையுயர்ந்த காரை நடிகை பிரியா மணி தான் பயன்படுத்த உள்ளாரா அல்லது அவரது கணவர் பயன்படுத்த உள்ளாரா என்பது தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, February 23, 2024, 18:59 [IST]
English summary
Actress priyamani takes delivery of mercedes benz glc luxury suv car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X