அவரை பார்ப்பதா அல்லது புதிய காரை பார்ப்பதா என்றே தெரியல!! லக்சரி மெர்சிடிஸ் காரை வாங்கியிருப்பது இந்த நடிகையா!

நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் தனது புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் காருடன் போஸ் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், ரகுல் பிரீத் சிங் வாங்கியுள்ள மெர்சிடிஸ் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இதன் மூலம் இந்தி மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். புகைப்படங்கள் மூலமாகவும், சிறந்த நடிப்பு திறனின் மூலமாகவும் நடிகை ரகுல் பிரீத் சிங் அவ்வப்போது இணையத்திலும், செய்திகளிலும் கவனத்தை பெறுபவர். ஆனால் சமீபத்தில், ரகுல் பிரீத் சிங் பற்றிய வித்தியாசமான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

rakul preet buys new mercedes

அதாவது, நடிகை ரகுல் பிரீத் சிங் புத்தம் புதிய மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 காரை வாங்கியுள்ளதாக, அதனுடன் அவர் நிற்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரகுல் பிரீத் சிங்கின் வீட்டில் கார் டெலிவிரி செய்யப்பட்ட போது காட்சிப்படுத்தப்பட்ட வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம்.

மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ்600 காரை வாங்கும் முதல் சினிமா பிரபலம் நிச்சயமாக ரகுல் பிரீத் சிங் கிடையாது. ஏனெனில், இந்த மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ளதாக நமது செய்தித்தளத்திலேயே பல்வேறு நடிகர், நடிகைகளை பற்றி பார்த்துள்ளோம். நாம் பார்க்காமல் போனது எவ்வளவு இருக்கிறதோ! அந்த அளவிற்கு சினிமா நட்சத்திரங்களை இந்த மாடர்ன் லக்சரி மெர்சிடிஸ் கார் கவர்ந்துள்ளது. குறிப்பாக, பாலிவுட் சினிமா துறையினரின் சமீப கால காராக மேபக் ஜிஎல்எஸ்600-ஐ சொல்லலாம்.

rakul preet buys new mercedes

நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் உள்ள கார்கள் கலெக்‌ஷனை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனால், அவை எல்லாவற்றையும் விட புதிய ஜிஎல்எஸ்600 தோற்றத்தில் ஜொலிப்பதை சொல்லியே ஆக வேண்டும். அப்சிடியன் கருப்பு நிறத்தில் பிரீத் சிங் தனது புதிய ஜிஎல்எஸ்600 காரை வாங்கியுள்ளார். தோற்றத்தில் ஜொலிப்பதற்கு முக்கிய காரணமே, இந்த காரில் பல்வேறு பகுதிகளில் க்ரோம் வழங்கப்படுவது ஆகும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காரின் முன்பக்கத்தில் உள்ள அளவில் பெரியதான கிரில், B-பில்லர் மற்றும் D-பில்லரில் பொருத்தப்படும் மேபக் லோகோவில் க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், பெரிய அளவிலான க்ரோம் மல்டிஸ்போக் அலாய் சக்கரங்களும் இந்த காரில் பொருத்தப்படுகிறது. ஜிஎல்எஸ்600 காரை 4-இருக்கை அல்லது 5-இருக்கை ஆப்ஷன்களில் வாங்கலாம்.

rakul preet buys new mercedes

இதில் 4-இருக்கை ஆப்ஷனில் முன் இருக்கைகளுக்கு இடையில் நகர்த்த முடியாத மைய கன்சோல் பகுதி குளிர்சாதன பெட்டி உடன் வழங்கப்படுகிறது. மேபக் ஜிஎல்எஸ்600 காரில் வழங்கப்படும் மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், எலக்ட்ரானிக் பனோராமிக் ஸ்லைடிங் சன்ரூஃப், வெண்டிலேட்டட் மஸாஜிங் சீட்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம். இந்த காரில் பின் இருக்கைகள் கூட சாய்க்கும் வசதிகளுடன் வழங்கப்படுகின்றன.

இந்த லக்சரி எஸ்யூவி காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஹைப்ரீட் சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை தேவைப்பட்டால் வழங்கும். இந்த இயக்க ஆற்றல்கள் அனைத்தும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட்டில் நிலைக்க வேண்டுமெனில், பாலிவுட் சினிமா துறையினர் செய்யும் டிரெண்டியான விஷயங்களை புதியதாக நுழைபவர்களும் செய்ய வேண்டும். அப்போதுதான், அங்கு ஓரளவிற்கு கவனத்தை பெற்று, மார்க்கெட்டில் நிலைக்க முடியும். இதைதான் நடிகை ரகுல் பிரீத் சிங் செய்துள்ளார். அல்லது ஒருவேளை இந்த மெர்சிடிஸ் மேபக் கார் நிஜமாகவே அவருக்கு பிடித்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 11:19 [IST]
English summary
Actress rahul preet singh buys new mercedes maybach gls600
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X