தீரன் படத்துல போலீஸ்காரன் பொண்டாட்டியா நடிச்ச நடிகையா இவங்க? காஸ்ட்லியான கார்ல வந்து இறங்குறாங்களே!

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் இவர் ஹிந்தி சினிமாவில் தான் மிக பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் மும்பை விமானநிலையத்திற்கு காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர் இவர் வந்திறங்கிய கார் குறித்து அதிகம் பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம். நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவர் வட மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடிக்கும் சம்பவம் தான் கதை. இது ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது.

mercedes maybach gls

இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தில் போலீஸ்காரராக நடித்திருப்பார். அவரது மனைவியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருப்பார். இவர் தமிழ் சினிமாவில் அந்த திரைப்படத்தில் நடித்து தான் பலரது கவனத்தை ஈர்த்தார். பலர் இவர் க்யூட்டான நடிப்பிற்கு ரசிகராக விட்டனர். முதல் திரைப்படத்திலேயே அந்த அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது தான் என்றாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வெளியூர் செல்வதற்காக வந்திறங்கினார். இவர் தனது காஸ்ட்லியான மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரில் வந்திறங்கினார். இந்த வீடியோ வைரலாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிம்பிளான லுக்கில் இவர் வந்திறங்கினாலும் இவரது கார் கிராண்டாக இருந்தால் பலர் இவரது காரை பற்றி பேசி வருகிறன்றனர்.

mercedes maybach gls

மெர்சிடீஸ் மேபேக் ஜிஎல்எஸ் காரை பொருத்தவரை மொத்தம் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. 600 4 மேட்டிக் மற்றும் நைட் சிரீஸ் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகி வருகிறது. இது முறையே ரூ3.90 கோடி மற்றும் ரூ4.27 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 3982 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

Take a Poll

இந்த இன்ஜினை பொருத்தவரை 550பிஎச்பி பவரும் 770 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். அதிகபட்ச வேகமாக 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 10 கி.மீ மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.

mercedes maybach gls

இந்த காரின் சிறப்பம்சமே இந்த காரின் சொகுசு வசதி தான். காரின் உட்புறம் சிறப்பாக வசதி நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த காரில் பயணிக்கும் போது ரைடு குவாலிட்டியும் சிறப்பாக இருக்கிறது. இந்த காரில் பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் இரண்டு டோன் கலர் ஆப்ஷன் மற்றும் ஸ்டைல்களில் டைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை ரகுல் பிரீத் சிங் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் காரில் வந்திறங்கும் போது அந்த காரும் சேர்ந்து பிரபலமாகிறது. இந்த கார் காஸ்ட்லியான காராக இருப்பதால் பலர் இந்த காரை வியந்து பார்த்து வருகின்றனர். நிச்சயம் இந்த காரின் விலை வைத்து பார்க்கும் போது பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ரக காராக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 11:15 [IST]
English summary
Actress rakul preet singh spotted mercedes maybach gls in mumbai airport
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X