காரை வாங்கி 2 மாசம் கூட இன்னும் முழுசா முடியல! டிவி சீரியல் நடிகை இப்படி செய்வார்னு யாரும் எதிர்பார்க்கல!!

ரெபேக்கா சந்தோஷ் (Rebecca Santhosh), பிரபல மலையாள டிவி சீரியல் (TV Serial) நடிகையான இவர், கடந்த மார்ச் மாத இறுதியில் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) என்கிற லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காரை (Electric Car) வாங்கியதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை 'டாங்கோ சிவப்பு' (Tango Red) என்கிற சிவப்பு நிறத்தில் நடிகை ரெபேக்கா சந்தோஷ் வாங்கினார். இந்த நிலையில், இந்த காரின் பெயிண்ட்டை தனது விருப்பத்திற்கு இவர் ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளார். இதுதொடர்பான, ரெபேக்கா சந்தோஷின் பிஇ 6 காரின் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திராவில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கப்பட்டன.

rebecca santhosh turned her car

அதனை தொடர்ந்து காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்டன. அப்போதில் இருந்து தற்போதுவரையில், மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. அதாவது, விலைமிக்க பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே தற்போதுவரையில் கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த எலக்ட்ரிக் கார்களின் விலை குறைவான வேரியண்ட்களை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன. அதிலிலும் கூட முதலாவதாக மிட்-வேரியண்ட்களின் டெலிவிரிகளை மட்டுமே ஜூனில் இருந்து துவங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. அதன்பின், ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே விலை குறைவான எண்ட்ரீ-லெவல் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் துவங்கப்பட உள்ளன.

rebecca santhosh turned her car

இந்த வகையில் பார்த்தால், மலையாள நடிகை ரெபேக்கா சந்தோஷும் விலைமிக்க பிஇ 6 எலக்ட்ரிக் காரை தான் வாங்கியுள்ளார். கேரளாவில் திரிச்சூரில் பிறந்தவரான 26 வயதான ரெபேக்கா சந்தோஷ் தனது 13ஆம் வயதில் இருந்தே மலையாள டிவி சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். அதேநேரம், மலையாள டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் அவ்வப்போது பங்கேற்கும் இவர் சில மலையாள திரைப்படங்களிலும் காட்சி தந்துள்ளார்.

இவ்வாறு மலையாள சினிமா என்கிற வட்டத்திற்கு உள்ளே இருந்தாலும், பல இலட்ச ரூபாய் மதிப்பிலான மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை வாங்கும் அளவிற்கு ரெபேக்கா சந்தோஷுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. மார்ச் மாதத்தில் இந்த காரை டெலிவிரி எடுத்த போதே, ஷோரூமில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நடிகை ரெபேக்கா சந்தோஷ், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரெபேக்கா சந்தோஷின் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், முற்றிலும் புதுமையான தோற்றம் கொண்ட மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை பார்க்க முடிகிறது. மார்ச் மாத இறுதியில் ரெபேக்கா வெளியிட்ட வீடியோவில் காட்சித்தந்த அவரது மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கும், தற்போது இருக்கும் காருக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

காரின் சிவப்பு நிறத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், பெயிண்ட்டிற்கு மேல் வழங்கப்படும் ஃபினிஷிங்கில் நடிகை ரெபேக்கா சந்தோஷ் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார். மஹிந்திரா நிறுவனம் பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு 'மெட்டாலிக்' (Metallic) ஃபினிஷிங்கை வழங்குகிறது. இதனால்தான், இந்த காரை எந்த நிறத்தில் வாங்கினாலும் பளபளப்பான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதனை சொரசொரப்பான 'மேட்' (Matte) ஃபினிஷிங்கிற்கு ரெபேக்கா சந்தோஷ் மாற்றிக் கொண்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதியதாக வாங்கிய காரின் பெயிண்ட் ஃபினிஷிங்கை இவ்வாறு மாற்றுவதற்கு கேரளாவின் கொல்லத்தில் செயல்படும் கார் டீடெயிலிங் நிறுவனத்தை நடிகை ரெபேக்கா சந்தோஷ் தொடர்பு கொண்டுள்ளார். இந்த நிறுவனத்தில் கார் எவ்வாறு இப்படி மாற்றப்பட்டது என்பதை வீடியோ ஒன்றில் தெளிவாக காட்டியுள்ளனர். மஹிந்திரா பிஇ 6 போன்ற காருக்கு மேட் ஃபினிஷிங் பார்க்க நன்றாகவே இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 23, 2025, 23:59 [IST]
English summary
Actress rebecca santhosh turned her mahindra be 6 electric car to matte finishing
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+