1970களில் பிரபலமா இருந்த தமிழ் நடிகையா இவங்க! மறுபடியும் உள்ள வந்தா நயன்தாரா மார்கெட் காலி ஆயிருமாட்ட இருக்கு!

இந்தியாவை சேர்ந்த நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் வலம் வருவதை அதிகம் விரும்புகின்றனர். இதற்கு பழம்பெரும் நடிகைகளும் விதிவிலக்கு அல்ல. இந்த கால கட்டத்தில் பிரபலமாக உள்ள நடிகைகளுக்கு இணையாக மூத்த நடிகைகளும் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அதிகமாக பயன்படுத்தி கொண்டுள்ளனர். இதற்கு ரேகா (Rekha) ஒரு உதாரணம். இவருக்கு தற்போது சுமார் 70 வயதாகி விட்டது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இவர் இன்னமும் பிரபலமாகவே உள்ளார். ரேகாவை பற்றி யாருக்கும் தனியாக அறிமுகம் செய்ய வேண்டியதெல்லாம் இல்லை.

இருப்பினும் தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய முன்னுதாரணம். சென்னையில் பிறந்த இவர், தனது குழந்தை பருவத்திலேயே சினிமா துறைக்கு வந்து விட்டார். குழந்தை பருவத்தில் இருந்தே நடித்தாலும் கூட, 1970 மற்றும் 1980களில் ரேகா புகழின் உச்சத்தை தொட்டார். 1990களிலும் கூட அது தொடரவே செய்தது.

Actress Rekha Spotted In Mercedes AMG GLC 43 Coupe

சென்னையில் பிறந்த இவர், ஒரு கட்டத்தில் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை அடைந்தார். இந்திய சினிமா கண்ட ஆகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் என ரேகாவை குறிப்பிட முடியும். இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் (Gemini Ganesan) மகள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் உள்ள மற்ற நடிகைகளை போலவே, ரேகாவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை அதிகம் விரும்ப கூடியவர். இதை நிரூபிடிக்கும் வகையிலான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், ரேகாவின் 2 கார்களை நம்மால் பார்க்க முடிகிறது.

BMW i7

3 இடங்களில் தனித்தனியாக எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்புதான் இந்த வீடியோ. முதலில் நிறைய கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் நம்மால் ரேகாவை பார்க்க முடிகிறது. அவரை நிறைய பேர் சூழ்ந்து கொண்டு, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக சொகுசு கார் ஒன்றில் ரேகா வந்து இறங்குவதை பார்க்கலாம்.

உண்மையில் இது ரேகாதானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், வித்தியாசமான உடையில் அவர் வந்து இறங்குகிறார். அனேகமாக அது மும்பை விமான நிலையமாக இருக்கலாம் என தெரிகிறது. அவர் வந்து இறங்கியது, மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்சி 43 கூபே (Mercedes AMG GLC 43 Coupe) கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், 1.10 கோடி ரூபாய் என்ற விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் ரேகா வந்து இறங்கியது, தற்போது விற்பனையில் உள்ள மாடல் போல் தெரியவில்லை. அனேகமாக அது பழைய மாடலாக இருக்கலாம்.

ரேகா இந்த காரை யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு சொகுசு காரில், ரேகா வந்து இறங்குவதையும், பின்பு அதே காரில் ஏறி அவர் புறப்பட்டு செல்வதையும் நம்மால் காண முடிகிறது. இந்த இடம் என்ன? என்பது தெரியவில்லை. அனேகமாக நட்சத்திர ஹோட்டலாக இருக்கலாம்.

நிகழ்ச்சி ஏதாவது ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரேகா வந்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம். இடம் என்ன? என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் கூட, அவர் வந்தது, பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) கார் ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை 2.03 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 2.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் (Jacqueline Fernandez), கிம் ஷர்மா (Kim Sharma) மற்றும் அஜய் தேவ்கன் (Ajay Devgn) உள்பட பலரிடமும், பிஎம்டபிள்யூ ஐ7 கார் உள்ளது. இவர்கள் மட்டுமல்லாது, நடிகரும், தமிழக வெற்றிக் கழக (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவருமான விஜய்யிடமும், பிஎம்டபிள்யூ ஐ7 கார் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரேகாவை போல், இன்னும் பல்வேறு மூத்த நடிகைகளும், விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சொகுசான, சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணம் கிடைப்பதால்தான், மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த கார்கள் எல்லாம் அவர்களுடைய அந்தஸ்தின் அடையாளமும் கூட!

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 13:59 [IST]
English summary
Actress rekha spotted in mercedes amg glc 43 coupe viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+