விலையுயர்ந்த பைக்கில் நடிகை உடன் உலா வந்தவர் இவ்வளவு பெரிய ஆளா? மாஸ்க் அணிந்து இருந்தும் கண்டுப்பிடிச்சிட்டோம்
விலையுயர்ந்த பைக்குகளை ஓட்டி பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். பல கோடிகள் சொத்து கொண்ட பணக்காரர்கள் கூட கார்களை காட்டிலும் பைக்குகளை ஓட்டி பார்க்கவே ஆசைப்படுகின்றனர். கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பெரும்பாலும் மோட்டார்சைக்கிளில் தான் பொது வெளியில் காட்சி தந்துள்ளனர். அந்த வரிசையில், இங்கு ஒரு பெரும் தொழிலதிபர் ஒருவர் விலைமிக்க மற்றும் பவர்ஃபுல்லான சுஸுகி மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நம் இந்தியாவை சேர்ந்த பிரபலமான பங்குத்தரகர் மற்றும் நிதி சேவை நிறுவனமாக விளங்குவது செரோதா (Zerodha) ஆகும். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனராக இருப்பவர் நிகில் கமத் (Nikhil Kamath). பல நூறு கோடி ரூபாய் சொத்துக் கொண்ட இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர்.

அதேநேரம், பைக் ரைடிங்கையும் மிகவும் விரும்பக்கூடியவர் நிகில் கமத் ஆவார். இவர் மும்பை சாலையில் விலையுயர்ந்த சுஸுகி இண்ட்ரூடர் எம்1800ஆர் (Suzuki Intruder M1800R) மோட்டார்சைக்கிளை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. தொழிலதிபர் நிகில் கமத்தின் இந்த பைக் பயணத்தில் அவருடன், பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தியும் இருந்தார்.
நடிகை ரியா சக்ரவர்த்தி இண்ட்ரூடர் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளார். மறைந்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட்டின் பெண் நண்பரான நடிகை ரியா சக்ரவர்த்தி சமீப காலமாக நிகில் கமத் உடன் நெருங்கிய உறவில் இருந்து வருகிறார். இந்த பயணத்தில், நிகில் கமத் சுஸுகி இண்ட்ரூடர் பைக்கை மிதமான வேகத்தில் ஓட்டி சென்றதால், அவரையும், அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் நடிகையையும் எளிதாக அடையாளம் காண முடிந்தது.

இந்த பைக் பயணத்தில் நிகில் கமத் மட்டுமே ஹெல்மெட் அணிந்திருந்தார். இந்த சுஸுகி இண்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கை செரோதா துணை நிறுவனர் நிகில் கமத் பல வருடங்களாக உபயோகித்து வருகிறார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த பைக்கை 2012ஆம் ஆண்டில் பெங்களூரில் நிகில் கமத் வாங்கியுள்ளார். தற்போது மும்பை சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டுள்ள இந்த விலையுயர்ந்த சுஸுகி பைக்கில் இப்போதும் கர்நாடகா மாநில நம்பர் பிளேட் இருப்பதை காணலாம்.
சுஸுகி இண்ட்ரூடர் எம்1800ஆர் பைக் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இந்த பைக்கின் விற்பனையை 2019ஆம் ஆண்டில் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் நிறுத்தியது. இண்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கில் அளவில் பெரியதான 1,783சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 127 பிஎஸ் மற்றும் 160 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் உருவாக்கியதிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான பைக்காக இதனை சொல்லலாம். விற்பனையில் இந்த சுஸுகி பைக்குக்கு ஹார்லி-டேவிட்சன், இந்தியன் மற்றும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனங்களின் க்ரூஸர் பைக்குகள் போட்டியாக உள்ளன. இத்தகைய விலையுயர்ந்த சுஸுகி பைக்கை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நீல நிறத்தில் வைத்துள்ளார்.
தொழிலதிபர் நிகில் கமத்திடம் பிராண்ட்-நியூ ஏத்தர் 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் உள்ளது. இதனை சமீபத்தில்தான் நிகில் கமத் வாங்கி இருந்தார். ஏத்தர் 450எக்ஸ் ஆனது இந்தியாவில் பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக 450எக்ஸ் அபெக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.53 லட்சமாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக நிகில் கமத் போன்ற தொழிலதிபர்கள் அதிகளவில் பொதுவெளியில் காட்சி தர மாட்டார்கள். எங்கேயாவது செல்வதாக இருந்தால் கூட அளவில் பெரிய லக்சரி காரில் யாருக்கும் தெரியாமல் சென்றுவருவார்கள். ஆனால், நிகில் கமத் கேரக்டர் மொத்தமாக வேறுப்பட்டதாகும். இதேபோன்று, கடந்த ஜூலை மாதத்திலும் புதியதாக வாங்கிய ஏத்தர் 450எக்ஸ் அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மும்பை சாலைகளில் வெறும் பனியன் உடன் நிகில் கமத் உலா வந்தார்.


Click it and Unblock the Notifications









