கஜினி படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவிருக்கா? 37 வயதில் விலையுயர்ந்த புது பென்ஸ் காருக்கு ஓனர்!!

பாலிவுட்டில் அனுபவமிக்க நடிகை ஒருவர் புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை டெலிவிரி எடுத்துள்ளார். மேலும், இதுதொடர்பான வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் இந்த நடிகை? அப்படி என்ன மாதிரியான பென்ஸ் காரை இவர் வாங்கியுள்ளார்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாலிவுட் பிரபலங்கள் சொகுசு கார்களை வாங்குவதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், பாலிவுட் நடிகை சாய் தம்ஹன்கர் (Sai Tamhankar) புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவரான சாய் தம்ஹன்கர் தன்னுடைய இளம் வயதில் மாநில அளவிலான கபாடி வீராங்கனையாக பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

sai tamhankar buys mercedes gle

கராத்தேவிலும் ஆரஞ்சு பெல்ட்டை பெற்றவரான சாய் தம்ஹன்கரை அதன்பின் சினிமா ஈர்த்தது. இதனையடுத்து பாலிவுட்டில் 2008ஆம் ஆண்டில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதன்பின் பல்வேறு இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் படங்களை அவ்வப்போது பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக இவரது முகம் பரீட்சையமானதாக இருக்கும்.

தமிழில் ஹிட் அடித்த கஜினி படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்தது சாய் தம்ஹன்கரின் ஆரம்ப கால சினிமாவில் ஒரு முக்கிய மைல்கல் என சொல்லலாம். சினிமா மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களிலும் நடித்துள்ள சாய் தம்ஹன்கர் மலையாளத்திலும் சோலோ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். 2017இல் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான சோலோ திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

sai tamhankar buys mercedes gle

இவ்வாறு பல முன்னணி இந்திய நடிகர், நடிகைகளுடன் இணைந்து நடித்து அனுபவமிக்கவராக விளங்கும் சாய் தம்ஹன்கர் புதியதாக வாங்கியிருக்கும் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார், ஜி.எல்.இ என்கிற லக்சரி எஸ்யூவி ஆகும். தமிழ், தெலுங்கு வருட பிறப்புகளை போன்று மராத்தி மக்களால் கொண்டாடப்படும் குடி பட்வா வருட பிறப்பை முன்னிட்டு இந்த சொகுசு பென்ஸ் காரை சாய் தம்ஹன்கர் வாங்கி உள்ளார்.

மேலும், கார் டெலிவிரியின்போது ஷோரூமில் எடுத்துக் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களையும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்த சாய் தன்ஹன்கரின் இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்களால் என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய முடியாது என்பதை யாரும் உங்களுக்கு சொல்ல விடாதீர்கள். கனவு காணுங்கள், அதை அடையுங்கள், வாழுங்கள்!

sai tamhankar buys mercedes gle

புதிய ஆண்டை தொடங்கும்போது, புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை ஒவ்வொன்றாக சாதிப்போம். புத்தாண்டு வாழ்த்துக்கள்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய காரை, நடிகை சாய் தம்ஹன்கர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி எடுத்துள்ளார். டெலிவிரிக்காக தம்ஹன்கர் கையெழுத்திட்ட ஆவணங்களில் இருந்து இறுதியாக காருக்கான சாவியை பெற்று கொண்டது வரையில் அனைத்தும் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

சாவியை வாங்கிய பின், காருக்குள் ஏறி அமர்ந்த சாய் தம்ஹன்கர் ஸ்டேரிங் சக்கரத்துக்கு ஆசையாக முத்தம் கொடுத்தார். இந்த நடிகை வாங்கியிருப்பது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.இ ஃபேஸ்லிஃப்ட் கார் ஆகும். இந்த லக்சரி எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.96.40 லட்சத்தில் இருந்து ரூ.1.15 கோடி வரையில் உள்ளன.

sai tamhankar buys mercedes gle

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொகுசு காரை வாங்குவது எவரொருவருக்கும் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். சினிமா நடிகர், நடிகைகள் சர்வ சாதாரணமாக லக்சரி கார்களை வாங்குகின்றனர் என்றாலும், குணச்சித்திர நடிகை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவரும் சாய் தம்ஹன்கர் போன்றோருக்கு வாழ்வில் இது முக்கியமான தருணம் என்றே சொல்ல வேண்டும். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அதனை உணர முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 22:59 [IST]
English summary
Actress sai tamhankar takes delivery of mercedes benz gle luxury suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X