போட்டோவுக்கு முகத்தை காட்டாம போனால் விட்ருவோமா!! 23 வயது இளம் நடிகையின் பல லட்ச ரூபா கார்!
டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி கார் நிறுவனம். இந்தியாவிலும் மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) உதவியின் மூலமாக கார்கள் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்யும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று, காம்ரி (Camry) ஆகும். இந்திய சந்தையில் இந்த காஸ்ட்லீயான டொயோட்டா காருக்கு பெரியதாக வரவேற்பு கிடைக்காவிடினும், வெளிநாடுகளில் காம்ரியை மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இந்தியாவில் இந்த காரை வாங்குபவர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாகவும், சினிமா பிரபலங்கள் ஆகவுமே இருக்கின்றனர்.
அந்த வகையில், விலையுயர்ந்த டொயோட்டா காம்ரி (Toyota Camry) கார் உடன் தற்போது இளம் நடிகை (Actress) ஒருவர் காட்சி தந்துள்ளார். இந்த நடிகையின் பெயர், சாயி மஞ்ச்ரேக்கர் (Saiee Manjrekar) ஆவார். மும்பையில் பிறந்த 23 வயதான சாயி மஞ்ச்ரேக்கர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2012ஆம் ஆண்டிலேயே தனது 11 வயதில் மராத்தி திரைப்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகிய சாயி மஞ்ச்ரேக்கர், முதல்முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படமாக 2019இல் 'தபாங் 3' (Dabangg 3) திரைக்கு வந்தது. முதல் படமே பிரபல நடிகர் சல்மான் கான் (Salmaan Khan) உடன் நடித்தது சாயி மஞ்ச்ரேக்கரை பாலிவுட்டில் (Bollywood) விரைவாகவே பிரபலப்படுத்தியது.
ஆனால், அதன்பின் கொரோனா வைரஸ் பரவலினால் கொஞ்சம் முடங்கி போன நடிகை சாயி மஞ்ச்ரேக்கருக்கு, நிலைமை கொஞ்சம் சீரானதும் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதற்கிடையில் சில இசை வீடியோக்களில் நடித்த சாயி மஞ்ச்ரேக்கருக்கு தபாங் 3 திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகை விருதும், அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தன.

இவ்வாறு தொடர்ச்சியாக விருதுகளை பெற்ற சந்தோஷத்தில் உத்வேகத்துடன் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை சாயி மஞ்ச்ரேக்கர் தற்போது விலையுயர்ந்த டொயோட்டா காம்ரி காரில் காட்சி தந்துள்ளார். கட்டிடம் ஒன்றில் இருந்து வெளியே வந்த நடிகை சாயி மஞ்ச்ரேக்கர், அங்கே கூடியிருந்த போட்டோகிராபர்களுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் நேராக காம்ரி காரில் அமர்ந்துக் கொண்டு கதவை மூடிக் கொண்டார்.
இன்னும் சொல்லப்போனால், தொப்பி அணிந்திருந்த சாயி மஞ்ச்ரேக்கர் தனது முகத்தை கூட போட்டோகிராபர்களுக்கு முழுவதுமாக காட்டவில்லை. இந்த நிகழ்வில், நடிகை சாயி மஞ்ச்ரேக்கர் பயன்படுத்தியது வெள்ளை நிறத்திலான டொயோட்டா காம்ரி கார் ஆகும். இந்த வெள்ளை நிறத்தை டொயோட்டா நிறுவனம் 'பிளாட்டினம் வெள்ளை பேர்ல்' என அழைக்கிறது.
இந்த வெள்ளை நிற கலர் ஆப்ஷனை மிக சமீபத்தில்தான் டொயோட்டா நிறுவனம் காம்ரியில் அறிமுகம் செய்தது. ஆக, நடிகை சாயி மஞ்ச்ரேக்கர் மிக சமீபத்தில்தான் இந்த காம்ரி காரை வாங்கி இருக்கக்கூடும். இது இல்லாமல், ஆட்டிட்யூட் கருப்பு, டார்க் ப்ளூ, சிமெண்ட் கிரே, பிரீசியஸ் மெட்டல், எமோஷ்னல் சிவப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்தியாவில் காம்ரி விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் இந்த காரை எலெகன்ஸ் (Elegance) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.48.50 லட்சமாக தற்சமயம் உள்ளது. டொயோட்டா காம்ரி ஆனது ஓர் ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, இதில் 2.5 லிட்டர் ஐ-விடெக் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்வில் நடிகை சாயி மஞ்ச்ரேக்கர் உடன் காட்சித்தந்து இருப்பது சமீபத்தில் வாங்கப்பட்ட டொயோட்டா காம்ரி கார் என்றாலும், இதனை சாயி மஞ்ச்ரேக்கர் தான் வாங்கினாரா என்பது உறுதியாக தெரியவில்லை. வேறொருவரது காரை கூட இந்த நடிகை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், சாயி மஞ்ச்ரேக்கரின் அழகிற்கு டொயோட்டா காம்ரி போன்ற கவர்ச்சிக்கரமான கார் மிகவும் எடுப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








