Subscribe to DriveSpark

நடிகை சமந்தா பொக்கிஷமாக கருதும் அவரது ஜாகுவார் காரின் சிறப்பம்சங்கள்!

Written By:

மதுரையில் தனியார் நிறுவனத்தின் கிளை திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகை சமந்தாவின் ஜாகுவார் காரின் டயர்கள் குத்தி கிழிக்கப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது காரை ரசிகர்கள் கத்தியால் கிழித்தது, நடிகை சமந்தாவின் மனதை வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக பொக்கிஷமாக பொக்கிஷமாக பாதுகாத்து பராமரித்து வரும் அந்த கார் சேதப்படுத்தப்பட்டதால், நடிகை சமந்தா அப்செட்டாகியுள்ளார். சரி, சமந்தா இந்த காரை பொக்கிஷமாக கருதுவதற்கு, இந்த காரின் சிறப்பம்சங்களும் முக்கிய காரணம். அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
பிராண்டு மதிப்பு

பிராண்டு மதிப்பு

உலகின் அதி சிறந்த உயர்வகை கார் மாடல்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை ஜாகுவார் பெற்றிருக்கிறது. இதனால், கோடீஸ்வரர்கள் மத்தியில் ஜாகுவார் காருக்கு தனி வரவேற்பு இருக்கிறது. மேலும், இந்த காரை மிகவும் ராசியானதாவும், வாழ்வில் திருப்புமுனையை கொடுத்ததோடு, அந்தஸ்தை உயர்த்தி மாடலாகவும் கருதுகிறார். தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு கிடைத்த வெகுமதியாகவே இந்த காரை பார்க்கிறார்.

டிசைன்

டிசைன்

சில தசாப்தங்களாக ஜாகுவார் பிரியர்களை சுண்டி இழுத்து வரும் பாரம்பரியம் டிசைன் கொண்டது. ஜாகுவாரின் ட்ரேட் மார்க் க்ரில் அமைப்பு, அதில், ஜாகுவாரின் லோகோ வசீகரிக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 20 இன்ச் அலாய் வீல்கள், டெயில் லைட்டுகள் என அனைத்தும் டிசைன் நேர்த்தியின் உச்சமாக இருக்கிறது. பின்புற பூட் ரூம் மூடியில் இருக்கும் பாயும் சிறுத்தை லோகோவும் சூப்பர். மொத்தத்தில் எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும், நேர்த்தியும், அழகும் இழைந்தோடுகிறது.

இடவசதி

இடவசதி

உயர்வகை சொகுசு செடான் கார்களில் நடுத்தர வகை மாடலாக விற்பனையாகும் ஜாகுவார எக்ஸ்எஃப் காரில் ஓட்டுனர் உள்பட 5 பேர் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும். இதுவும் நடிகை சமந்தாவை வெகுவாக கவர்ந்த விஷயம். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், இந்த காரில் பயணிக்கும்போது அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் அளவுக்கு ஆசுவாசமான பயணத்தை வழங்குகிறது.

எஞ்சின்

எஞ்சின்

மிக சக்திவாய்ந்த எஞ்சின் கொண்ட ஜாகுவார் எக்ஸ்எஃப் வரிசை மாடல். இதிலிருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 503 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் ஆற்றல் கொண்டது. இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த கார் மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது.

 கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

இந்த காரில் 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 0 - 100 கிமீ வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையும், அதிகபட்சமாக மணிக்கு 299 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கான ஆற்றலையும், கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது. 100 கிமீ தூரம் பயணிப்பதற்கு 11.6 லிட்டர் பெட்ரோல் செலவாகுமாம்.

மல்டி மீடியா

மல்டி மீடியா

இந்த காரில் 7 இன்ச் வண்ணத் திரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. பொழுதுபோக்கு, நேவிகேஷன், ஏசி.,யை கட்டுப்படுத்தும் வசதி, காரை பற்றிய தகவல்களை அளிக்கும் வசதிகளை இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலமாக பெறலாம். இந்த காரில் 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய 250W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மிகவும் அற்புதமான ஒலி தரத்தை வழங்க வல்லது.

வசதிகள்

வசதிகள்

இருக்கை அமைப்பை வசதிகேற்ப எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் முறையில், சவுகரியமாக மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது. ஓட்டுனர் இருக்கையை இரண்டு விதமாக மாற்றிக்கொண்டு அதனை மெமரி செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் நெடுஞ்சாலை பயணங்களை சிறப்பானதாக மாற்றும்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

கம்ப்யூட்டர் மூலமாக கட்டுப்படுத்தும் சஸ்பென்ஷன் அமைப்பும் மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும். உயர் தரமான இருக்கைகளும், அலுப்பில்லாத பயணங்களுக்கு உத்தரவாதம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

காரின் முன்புறம், பக்கவாட்டுப் பகுதிகளில் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருப்பதால், எந்த திசையிலிருந்து வரும் மோதல்களிலிருந்து பயணிகளை காக்கும் வசதிகள் உள்ளன. ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவும் உண்டு.

விலை உயர்ந்த மாடல்

விலை உயர்ந்த மாடல்

இந்தியாவில் விற்பனையாகும் ஜாகுவார் எக்ஸ்எஃப் கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்த மாடல். ரூ.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்ரோடு விலை ரூ.80 லட்சத்தை தாண்டும்.

கார் ஓட்டும் பயிற்சி

கார் ஓட்டும் பயிற்சி

சினிமாவிற்கு வந்த பின்னும், நடிகை சமந்தாவிற்கு கார் ஓட்ட தெரியாதாம். படப்பிடிப்பு ஒன்றில், கார் ஓட்டும் காட்சிக்காக இயக்குனர் கார் ஓட்ட சொன்னபோது நடிகை சமந்தா தவித்து போனாராம். அப்போது, அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாதான் கார் ஓட்டுவதற்கு சில மணி நேரம் பயிற்சி அளித்தாராம். இப்போது நன்றாக கார் ஓட்ட கற்றுக்கொண்டிருக்கிறாராம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actress Samantha's Jagaur XF Luxury Car Review.
Story first published: Monday, June 27, 2016, 13:12 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark