ஒன்னே கால் கோடி கார சாதுர்யமா வளச்சு போட்ட தமிழ் பட நடிகை! ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் கண்ல பட்றாங்க!
இந்திய திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சன்னி தியோல் (Sunny Deol), அர்ஜூன் கபூர் (Arjun Kapoor), கரீனா கபூர் (Kareena Kapoor) மற்றும் சோனம் கபூர் (Sonam Kapoor) உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வைத்துள்ளனர். திரையுலக நட்சத்திரங்கள் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
இது முரட்டுத்தனமான எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே இதன் கம்பீரமான தோற்றமே முதலில் அனைவரையும் கவர்ந்து விடும். அத்துடன் ஆஃப்-ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற செயல்திறன் மற்றும் சொகுசு வசதிகள் என 2 அம்சங்களும் கலந்த கலவையாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் திகழ்கிறது.

இதுதவிர லேண்ட் ரோவர் என்ற பிராண்டிற்கு இருக்கும் பிரபலம் ஆகிய அம்சங்களும் சேர்ந்து, திரையுலக நட்சத்திரங்களை டிஃபெண்டர் காரின் பக்கம் இழுக்கிறது. இந்திய சந்தையில் தற்போது 1.04 கோடி ரூபாய் என்ற ஆரம்ப விலையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.57 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மொத்தம் 8 வேரியண்ட்களில் (Variants) லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், ஆரம்ப நிலை லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 2.0 எக்ஸ்-டைனமிக் ஹெச்எஸ்இ (Land Rover Defender 2.0 110 X-Dynamic HSE) வேரியண்ட் பலரின் விருப்பமாக உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1.04 கோடி ரூபாய் மட்டுமே என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். இந்த வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.30 கோடி ரூபாய் வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பிரபலங்கள் பலரிடம் இந்த வேரியண்ட் இருக்கும் நிலையில், தற்போது மற்றொரு பிரபலம் இதே வேரியண்ட்டை சொந்தமாக்கியுள்ளார். அவர் சனா மக்பல் (Sana Makbul) ஆவார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதில், தமிழை பொறுத்தவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார். அது ரங்கூன் (Rangoon) ஆகும்.
கடந்த 2017ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில், கௌதம் கார்த்திக் உடன் சனா மக்பல் நடித்திருந்தார். இது பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் வெளியான படம் ஆகும். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு சனா மக்பல் தமிழில் தலைகாட்டவில்லை. எனினும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒரு சில தமிழ் திரைப்படங்கள் வெளியீட்டிற்கு காத்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 2.0 எக்ஸ்-டைனமிக் ஹெச்எஸ்இ வேரியண்ட்டைதான் சனா மக்பல் தற்போது வாங்கியுள்ளார்.
அவர் இந்த காரை பயன்படுத்தும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், சனா மக்பல் இந்த காரின் 2வது உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செகண்ட் ஹேண்டில் அவர் இந்த காரை வாங்கியிருக்கலாம்.
சனா மக்பலின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 300 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சனா மக்பலிடம் ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ் ஏ180 (Mercedes Benz A180) போன்ற கார்கள் எல்லாம் உள்ளன. இந்த வரிசையில்தான் அவரது கார் கலெக்ஸனில் (Car Collection) தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் இணைந்துள்ளது. இதற்காக சமூக வலை தளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி அவர் வாங்கியுள்ள வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை சுமார் 1.30 கோடி ரூபாய் வரும். ஆனால் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளதால், இந்த காரை அவர் அனேகமாக 70 லட்ச ரூபாய் என்ற விலையில் சொந்தமாக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால், பிரபலங்கள் பலரும் தற்போது செகண்ட் ஹேண்ட் கார்களை விரும்புகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








