மாநிலத்தையே கட்டி ஆண்ட முதல்வரின் பேத்தியா இவங்க? கம்மியா டிரெஸ் போட்டு காஸ்ட்லியான கார்ல வராங்களே!

பாலிவுட்டில் பிரபல நடிகையான ஷர்வாரி சமீபத்தில் தனது மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் வந்திறங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் முதல்வரின் மகள் வழி பேத்தி ஆவார். இவர் வந்த கார் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷர்வாரி, இவர் பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தான் சினிமாவிற்கு வந்துள்ளார். இருந்தாலும் இவர் நடித்த பல படங்கள் ஹிட்டானதால் பாலிவுட்டில் மெல்ல மெல்ல பிரபலமாகி வருகிறார். இவர் பாலிவுட்டில் நடித்ததால் மட்டுமே பிரபலம் இல்லை. இவர் ஏற்கனவே பிரபலமான பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

Sharvari in Mercedes Benz GLC

இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் முதல்வராக இருந்த மனோகர் ஜோஷியின் மகள் வழி பேத்தி ஆவார். இது மட்டுமல்ல இவர் தற்போது சன்னி குஷால் என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை இவர்கள் இருவரும் மறுக்கவில்லை. சன்னி குஷால் என்பவரும் பாலிவுட் உலகில் பிரபலமானர் தான்.

நடிகை கேத்ரீனா கைஃப் விக்கி குஷால் என்பவரை திருமணம் செய்துள்ளார். விக்கி குஷாலின் சகோதரர் தான் சன்னி குஷால் இதனால் கேத்ரீனா கைஃப் மறுமகளாக இருக்கும் அதே குடும்பத்தில் தான் இவரும் மறுமகளாக போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி வருகிறது. இதனால் பாலிவுட் வட்டாரமே இவரை பற்றி அதிகம் பேசி வருகிறது.

Sharvari in Mercedes Benz GLC

இந்நிலையில் இவர் காரிலிருந்து இறங்கி வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கறுப்பு நிற டாப்ஸ், கருப்பு நிற லெக்கின்ஸ், மறஅறம் கருப்பு நிற கோட் அணிந்து, கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார். முற்றிலும் கருப்பு நிற ஆடை அணிந்த தேவதையாக இவர் இறங்கிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இவர் இறங்கி வந்த கார் குறித்து தற்போது ரசிகர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.

இவர் இறங்கி வந்தது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்சி கார் தான். இந்த கார் ரூ88.83 லட்சம் முதல் ரூ91.93 லட்ம் என்ற விலையில் இந்திய மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 2 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. அதன்படி 300 4 மேட்டிக் பெட்ரோல் இன்ஜின் மற்றம் 220 டி 4 மேட்டிக் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

Sharvari in Mercedes Benz GLC

இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் 194 பிஎச்பி பவரையும்400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் வெர்ஷன் 255 பிஎச்பி பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் பெர்ஃபார்மென்ஸை பொருத்தவரை 0-100 கி.மீ வேகத்தை முறையே 6.2 நொடிகள் மற்றும் 8 நொடிகளில் பிக்கப் செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பரபலங்கள் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்துவது சாதாரண விஷயம் தான். இந்த கார்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள், சொகுசு அம்சங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை கிடைக்கிறது. மேலும் இந்த கார்கள் அவர்களுக்க சமூகத்தில் நல்ல அந்தஸ்தை பெறவும் அதிகம் உதவுகிறது. இதனால் நிச்சயம் இது பெரிய அளவில் பலனளிக்கும் என்பதால் இந்த கார்களை தேர்வு செய்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2025, 18:50 [IST]
English summary
Actress sharvari spotted in mercedes benz glc video gone viral
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X