கப்பல் போன்ற பென்ஸ் காரில் வந்த இளம் நடிகை... தேவதை மாதிரி இருக்காங்க!! சூழ்ந்து கொண்ட கேமராக்கள்

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை மக்கள் நிறைய பேர் ஆர்வமாக வாங்குகின்றனர். அதேபோல், சினிமா நடிகர், நடிகைகள் மத்தியிலும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. சினிமா துறையை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோரிடத்தில் குறைந்தது ஒரு பென்ஸ் காராவது உள்ளது. இந்த நிலையில், வளர்ந்துவரும் இளம் நடிகை ஒருவர் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class) காரை வாங்கியுள்ளார். யார் அந்த இளம் நடிகை என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பாலிவுட் சினிமாக்காரர்கள் அவ்வப்போது புதியது, புதியதாக சொகுசு கார்களை வாங்கக்கூடியவர்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். மார்க்கெட்டிற்கு புதியதாக வரும் கார்களை முடிந்தவரையில் விரைவாக வாங்குவதை பாலிவுட் ஸ்டார்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நம் தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்களும் அவ்வப்போது விலையுயர்ந்த கார்களை வாங்குகின்றனர் என்றாலும், பாலிவுட் அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

shehnaaz gill with mercedes-benz e-class

இந்த வரிசையில், தற்போது புதியதாக பென்ஸ் காரை வாங்கியிருப்பவர் பாலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் இளம் நடிகையும், பாடகியுமான ஷெஹ்னாஸ் கவுர் கில் (Shehnaaz Kaur Gill), வயது 31. பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவரான ஷெஹ்னாஸ் கில் 2015ஆம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுவந்த இவர் சமீப ஆண்டுகளாக பஞ்சாபி, இந்தி மொழி திரைப்படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இந்தி பிக்பாஸின் 13வது சீசனிலும் கலந்துக் கொண்டார். இவ்வாறு தனது சினிமா வாழ்க்கை பயணத்தில் அடுத்தடுத்ததாக ஏற்றம் கண்டுவரும் ஷெஹ்னாஸ் கில் புதியதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மும்பையில் புத்தம் புதிய இ-கிளாஸ் காரில் ஷெஹ்னாஸ் கில் வந்து இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

shehnaaz gill with mercedes-benz e-class

ஷெஹ்னாஸ் கில் காரை ஓட்டவில்லை; அவர் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். காரில் இருந்து இறங்கி வெளியே வந்த பின் அங்கு சூழ்ந்திருந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஷெஹ்னாஸ் கில் உள்ளே சென்றார். மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரின் இ220டி வேரியண்ட்டை இந்த நடிகை வாங்கியுள்ளார். அதாவது இவரது காரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் கருப்பு நிறத்தில் உள்ளது.

நடிகை ஷெஹ்னாஸ் கில் ஏற்கனவே பயன்படுத்தி வந்ததும் ஒரு பழைய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் ஆகும். இதில் இருந்து இ-கிளாஸ் என்றால், இவருக்கு கூடுதல் ஆர்வம் என்பதை அறிய முடிகிறது. ஷெஹ்னாஸ் கில் வாங்கியுள்ள லேட்டஸ்ட் இ-கிளாஸ் காரில் நேச்சுரல் வாய்ஸ் கண்ட்ரோல், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, MBUX கனெக்ட்டட் கார் தொழிற்நுட்பம், டிஜிட்டல் காக்பிட் இன்ஸ்ட்ரூமெண்ட் டிஸ்பிளே, 360-டிகிரி கேமரா, ஆக்டிவ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

shehnaaz gill with mercedes-benz e-class

இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் 5-ட்வின்-ஸ்போக் டிசைனில் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. நடிகை ஷெஹ்னாஸ் கில் வாங்கியுள்ள இ-கிளாஸ் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 200 எச்பி மற்றும் 440 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதுமட்டுமின்றி, 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 3.0 லிட்டர் 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்களிலும் இந்தியாவில் இ-கிளாஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அனைத்து என்ஜின் ஆப்ஷன்களிலும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் 6.1 வினாடிகளில் எட்டிவிடலாம். அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.76.05 லட்சத்தில் இருந்து ரூ.89.15 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் ஆனது விஐபிகள் நிறைய பேர் வாங்கக்கூடிய காராக விளங்குகிறது. இதன் காரணமாகவே, இ-கிளாஸ் காரை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில் புதிய அப்டேட் செய்யப்பட்ட இ-கிளாஸ் கார் வருகிற 2024 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நடிகை ஷெஹ்னாஸ் கில் வாங்கியிருக்கும் கருப்பு நிறத்திலான இ-கிளாஸ் கார் பார்க்க இன்னும் அழகாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 17, 2024, 15:42 [IST]
English summary
Actress shehnaaz gill spotted with brand new mercedes benz e class car
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X