ஓட்டு போட அவரை போலவே கம்பீரமான காரில் வந்திறங்கியது அந்த நடிகையா? ரசிகர்களின் கண்ணு மொத்தமும் அங்கே தான்!

ஷில்பா ஷெல்டி (Shilpa Shetty), பிரபல பாலிவுட் நடிகை. மும்பையில் ஓட்டு போடுவதற்கு இவர் தனது புதிய விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரில் வந்திறங்கியுள்ளார். இதனால், ஓட்டு போட வந்த மக்கள் ஷில்பா ஷெட்டியை தாண்டி, அவரது புதிய ரேஞ்ச் ரோவர் காரை மொய்க்க துவங்கினர்.

பாலிவுட் ஸ்டார்கள் என்றாலே விலையுயர்ந்த கார்களில் அதிக செலவு செய்பவர்கள் என்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்க பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலான பாலிவுட் நடிகர், நடிகையினரிடம் குறைந்தது ஒரு ரேஞ்ச் ரோவர் கார் ஆவது இருக்கிறது.

shilpa shetty came to polling

அதேநேரம், புதியது, புதியதாக ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கவும் அவர்கள் மறப்பதில்லை. அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி புதியதாக ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கியுள்ளார். இந்த நிலையில், இன்னும் நம்பர் பிளேட் கூட பொருத்தப்படாத அந்த புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் மும்பையில் ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளார், நடிகை ஷில்பா ஷெட்டி.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட படி 5ஆம் கட்ட தேர்தல் 2024 மே 20ஆம் தேதி நடந்து முடிந்தது. பாஜக ஆளும் இந்த மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். நாட்டை பொறுத்தவரையில் எல்லாருமே குடிமக்கள் தான் என்பதால், எந்தவொரு பாகுபாடுமின்றி நடிகர், நடிகைகள் மற்றும் விஜபிகளும் வரிசையில் நின்று தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.

shilpa shetty came to polling

இந்த வகையில், சுட்டெரிக்கும் மதிய வேளையில் ஓட்டு போட சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில் வந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன. நடிகை ஷில்பா ஷெட்டி உடன் அவரது தங்கை ஷமிதா ஷெட்டி மற்றும் தாயார் சுனந்தா ஷெட்டியும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் வந்திறங்கினர்.

இந்தியாவில் தற்சமயம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.69 கோடியில் இருந்து ரூ.2.80 கோடி வரையில் உள்ளன. இது எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே, மும்பை ஆன்-ரோடு விலைகள் இன்னும் அதிகமாக வரும். எஸ்.இ டைனாமிக், எச்.எஸ்.இ டைனாமிக், ஆட்டோபயோகிராபி மற்றும் எஸ்.வி எடிசன் என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

shilpa shetty came to polling

நடிகை ஷில்பா ஷெட்டி வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எஸ்வி எடிசன் கிடையாது என்பது மட்டும் உறுதி. ஏனெனில், இந்த காரின் எஸ்வி எடிசன் பித்தளை நிறத்தில் பார்ப்பதற்கே இன்னும் காஸ்ட்லீயான லுக்கில் வழங்கப்படுகிறது. ஆக, மீதியிருக்கும் 3 வேரியண்ட்களில் ஏதோ ஒரு வேரியண்ட்டில்தான் ஷில்பா ஷெட்டி இந்த காரை வாங்கியுள்ளார். இருப்பதிலேயே, எஸ்வி எடிசன் விலைமிக்கதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தாரிடம் லம்போர்கினி அவெண்டேடார், பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி, பிஎம்டபிள்யூ ஐ8, பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், பிஎம்டபிள்யூ 730எல்டி என ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. ஷில்பா ஷெட்டியின் நடிப்பில் கடைசியாக இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் என்கிற வெப் சீரிஸ் வெளிவந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான பாலிவுட் ஸ்டார்கள் எக்ஸ்சேஞ்ச் முறையில் புதிய கார்களை வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, பழைய காரை கொடுத்து குறைந்த விலையில் புதிய காரை வாங்குகின்றனர். இதன் மூலமாக மார்க்கெட்டில் பரபரப்பாக இருப்பதை உணர்த்த பாலிவுட் ஸ்டார்கள் முயற்சிக்கின்றனர். அதாவது, பழைய ஜென்ரேஷன் கார்களை பயன்படுத்தினால் ரசிகர்கள் மத்தியில் இமேஜ் குறைந்துவிடும் அல்லவா...

More from DriveSpark

Article Published On: Tuesday, May 21, 2024, 16:03 [IST]
English summary
Actress shilpa shetty came in range rover car to polling booth in mumbai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X