நடிகை ஷில்பா ஷெட்டியின் அழகுக்கு ஏற்ற பென்ஸ் கார்... பல சினிமா ஸ்டார்களின் முதல் சாய்ஸாக மேபக் ஜி.எல்.எஸ்600!!

சினிமா நட்சத்திரங்களில், பாலிவுட் நடிகர், நடிகையினர் அவ்வப்போது புதிய புதிய லக்சரி கார்களை வாங்குவர் என்பதற்கு மற்றொரு சாட்சியாக பிரபல நடிகை ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகை? அவர் எந்த மாடல் மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ளார் என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

பாலிவுட் நடிகர்களில் பெரும்பாலானோரிடம் விலையுயர்ந்த லக்சரி கார்கள் உள்ளன. இருப்பினும் அவர்கள் அவ்வப்போது புதிய புதிய லக்சரி கார்களை வாங்குவதை நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த வகையில் சமீபத்தில் சொகுசு காரை வாங்கியிருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகும். தமிழிலும் சில பல திரைப்படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டியிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன.

நடிகை ஷில்பா ஷெட்டியின் அழகுக்கு ஏற்ற மெர்சிடிஸ் ஜிஎல்எஸ்600

இதில் சில மாடல்கள் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமானவை. சில மாடல்கள் அவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமானவை ஆகும். நடிகை ஷில்பா ஷெட்டி புதியதாக வாங்கி இருப்பது மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 கார் ஆகும். இந்த பிராண்டின்-புதிய பென்ஸ் காரில் ஷில்பா ஷெட்டி விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, மீடியாக்கள் அவரை சூழ்ந்து கொண்டன. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றை கீழே காணலாம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் கூடுதல் லக்சரி கார்கள் மேபக் பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த மெர்சிடிஸ்-மேபக் காரை நடிகை ஷில்பா ஷெட்டி எப்போது டெலிவிரி எடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனால், வீடியோவில் கார் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிப்பதாலும், இத்தகைய காரை இதற்குமுன் ஷில்பா ஷெட்டியிடம் பார்த்து இல்லை என்பதாலும், புதிய மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 காரை மிக சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி வாங்கி இருக்க வேண்டும்.

மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் வரிசையில் மிக விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி காராக விளங்கும் மேபக் ஜி.எல்.எஸ்600 கார் ஷில்பா ஷெட்டியிடம் வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் தான் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, மெர்சிடிஸின் இந்த மேபக் ஜி.எல்.எஸ்600 சொகுசு கார் பாலிவுட் திரைத்துறையினர் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகிறது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், பாலிவுட்டில் புதியதாக சொகுசு காரை வாங்குபவர்களின் தேர்வு மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 காராகவே இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் இந்த காரை நடிகர் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், ஆயுஷ்மன் குர்ரானா, அஜய் தேவ்கான், தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் நடிகை கிரிட்டி சனோன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் சமீப காலங்களில் வாங்கியுள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் அழகுக்கு ஏற்ற மெர்சிடிஸ் ஜிஎல்எஸ்600

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் அடர் நீலம் அல்லது கருப்பு நிறத்திலேயே மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 காரை வாங்கினர். ஆனால் முதல்முறையாக பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இந்த காரை வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த லக்சரி எஸ்யூவி காரில் 4.0 லிட்டர், ட்வின்-டர்போ வி8 என்ஜினை மெர்சிடிஸ்-மேபக் நிறுவனம் பொருத்துகிறது. இந்த கார் முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

சிபியூ-ஆக முழுவதும் வெளிநாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் இந்த காரை இந்தியர்கள் போட்டி போட்டு வாங்குவதில் இருந்து இந்த மெர்சிடிஸ்-மேபக் காரில் எத்தகைய சொகுசான பயணம் கிடைக்கிறது என்பதை அறிய முடிகிறது. லம்போர்கினி, பெண்ட்லீ போன்ற கார்களை வைத்திருக்கும் ஷில்பா ஷெட்டிக்கு இவ்வாறான விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 5, 2023, 11:01 [IST]
English summary
Actress shilpa shetty owns mercedes maybach gls600 luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+