காதலர் வாங்கிய காரை வெளியுலகிற்கு காட்டிய நடிகை... செகண்ட்-ஹேண்டில் வாங்கினால் கூட பல கோடி ரூபா இருக்குமே!

பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோர் விலையுயர்ந்த கார்களை வாங்குவது இணையத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு நிகழ்வு. பலர் ஆடம்பரமான கார்களை விரும்பினாலும், சிலர் சூப்பர்கார்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிரபலங்கள் மட்டுமல்லாது, சமூக ஊடகப் பிரபலங்களும் நன்றாக பணம் சம்பாதித்து, தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

அந்த வகையில், சமூக ஊடகப் பிரபலமும், நகைக்கடைத் தொழிலதிபருமான ஒருவர், ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் டிராப்ஹெட் கூபே (Rolls-Royce Phantom Drophead Coupe) காரை தற்போது வாங்கியுள்ளார். இதனை அவரது காதலியான நடிகை குஹூ பரஞ்சபே (Actress Kuhoo Paranjape) என்பவர் புதியதாக ரோல்ஸ்-ராய்ஸ் காரை டெலிவரி பெறும் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

rolls-royce phantom drophead coupe

சமூக ஊடகப் பிரபலமும் வளர்ந்து வரும் நடிகையுமான குஹூ பரஞ்சபே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ள விபரங்களின்படி பார்க்கும் போது, இவரது காதலரின் வீட்டிற்கே வந்து ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் டிராப்ஹெட் கூபே கார் ஹோம் டெலிவிரி (Home Delivery) செய்யப்பட்டு உள்ளது.

இவரது காதலரும், நகைக்கடை தொழிலதிபருமான பிரசாத் நாகர்கர் என்பவரும், நடிகை குஹூ பரஞ்சபேவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டவர்களாவர். இதனால்தான் குஹூ இதுதொடர்பான விபரங்களை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் டிராப்ஹெட் கூபே காரை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே சமூக ஊடகப் பிரபல ஜோடி இவர்களாக தான் இருக்கக்கூடும் என நினைக்கிறோம்.

rolls-royce phantom drophead coupe

தொழிலதிபர் பிரசாத் நாகர்கர் புதியதாக வாங்கிய ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கான ஹெலிபேட் (Helipad) இடத்தில் வைத்து வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார். இவர் வாங்கியிருப்பது, ஒரு கன்வெர்டிபிள் ரோல்ஸ் ராய்ஸ் கார் என்பதினால்தான், இந்த காரின் பெயரில் 'டிராப்ஹெட்' என்கிற வார்த்தை உள்ளது.

இருப்பினும், இந்த கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. எனவே, பிரசாத் நாகர்கர் வாங்கியிருப்பது புத்தம் புதிய ரோல்ஸ்-ராய்ஸ் காராக இல்லாமல், செகண்ட்-ஹேண்ட் கார் (Second-hand Car) ஆக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பாண்டோம் டிராப்ஹெட் கூபே ஆனது இந்திய சந்தையில் மிகவும் அரிதான ரோல்ஸ் ராய்ஸ் கார் என்பதால், இது மேலும் சிறப்பானதாக அமைகிறது.

rolls-royce phantom drophead coupe

பாண்டோம் டிராப்ஹெட் கூபே கார் பெயருக்கு ஏற்றவாறு, இது ரோல்ஸ் ராய்ஸின் பிரபலமான செடான் மாடலான பாண்டோம் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த காரில் இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகள் உள்ளன. இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை நீல நிற உடல் மற்றும் முன்பக்க பொனெட் & காரின் பின்பக்கத்தில் வெள்ளி நிறம் என்கிற இரட்டை வண்ணத்தில் பிரசாத் நாகர்கர் வாங்கியுள்ளார்.

இந்த நகைக்கடை ஓனர் வாங்கியிருக்கும் இந்த கார் பழைய தலைமுறை ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோமை அடிப்படையாகக் கொண்டதால், உட்புறம் தற்போதைய தலைமுறையில் இருந்து வேறுபடுகிறது. முழு கேபினும் மர வேலைப்பாடுகள் உடன் உள்ளன. பிரசாத் நாகர்கரின் பெயர் காருக்குள் டேஷ்போர்டில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். காரை வாங்கும் முன், கார் உரிமையாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப உட்புறத்தைத் தனிப்பயனாக்கி உள்ளதாகத் தெரிகிறது.

rolls-royce phantom drophead coupe

இதற்கேற்ப ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தொழிற்சாலையிலேயே காரை மாற்றிக் கொள்வதற்கு கஸ்டமர்களுக்கு நீண்ட கஸ்டமைசேஷன் பட்டியலை வழங்குகிறது. ஆனால் இந்த விஷயத்தில், நாகர்கர் இந்த தனிப்பயனாக்கங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றாரா அல்லது ஆடம்பர கார்களை கையாளும் ஒரு லக்சரி யூஸ்டு-கார் கடை மூலம் பெற்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் டிராப்ஹெட் கூபே கார் 6.75 லிட்டர் V12 என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 460 bhp சக்தியையும் 720 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டபடி, இது மிகவும் அரிதான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகும். இந்தியாவில் வெறும் ஆறு ரோல்ஸ்-ராய்ஸ் டிராப்ஹெட் கூபே கார்கள் மட்டுமே உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் பிரசாத் நாகர்கர் வசம் உள்ள ஒரே விலையுயர்ந்த கார் இது மட்டும் இல்லை. நடிகை குஹூ பரஞ்சபே வெளியிட்டு இருக்கும் படங்களில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்குப் பின்னால், ஒரு பச்சை நிற பென்ட்லி (Bentley) மற்றும் ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) கார்களும் காணப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 14, 2025, 23:22 [IST]
English summary
Actress shows off her boyfriend recently bought rolls royce phantom car check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X