றெக்கை மட்டும் இருந்தால் தேவதை சார்... அவரை போலவே அழகான காரில் வந்த பிரபல நடிகை!!

சினிமா நடிகர், நடிகைகள் எந்த அளவிற்கு அவர்களது உடைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார்களோ, அதே அளவிற்கு அவர்களது விலையுயர்ந்த கார்களை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அதிலிலும் இந்தி சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு சொகுசு காரை வாங்கும் அளவிற்கு அவ்வப்போது புது, புது காரில் காட்சி தருகின்றனர். அந்த வகையில், பிரபல இந்தி நடிகை ஒருவர் அவரது விலையுயர்ந்த லம்போர்கினி காரில் பிரபல நடிகர் உடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளார். யார் அந்த பிரபல நடிகை என்பதையும், அவர் வைத்துள்ள அந்த லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமீபத்தில் இந்தி மொழியில் வெளியாகி நாடு தழுவிய அளவில் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் 'ஸ்ட்ரீ 2'. பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெற்றாலே அடுத்து அந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

actress shraddha kapoor in lamborghini

அந்த வகையில், ஸ்ட்ரீ 2 திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது விலையுயர்ந்த கார்களில் வந்தனர். படத்தின் இயக்குனர் தினேஷ் விஜன் அவரது மனைவி உடன் ரூ.2.7 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் லாங்-வீல்பேஸ் ஆட்டோபயோகிராபி காரில் வந்திறங்கினார். இந்த ரேஞ்ச் ரோவர் கார் ஃபுஜி வெள்ளை நிறத்தில் இருந்தது.

நடிகர் அபிஷேக் பானர்ஜி அவரது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்கிற லக்சரி எஸ்யூவி காரில் வந்தார். படத்தின் கதாநாயகன் ராஜ்குமார் ராவ் அவரது மனைவி உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரில் நிகழ்ச்சிக்கு வந்தார். பிரபல பாலிவுட் நடிகை கிரீத்தி சனோன் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 என்கிற மிகவும் விலையுயர்ந்த காரில் வந்தார். இந்த மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 கார் ஆனது பாலிவுட் சினிமா ஸ்டார்கள் பலரிடம் உள்ளது.

actress shraddha kapoor in lamborghini

ஆனால், இவர்கள் அனைவரை விடவும் நடிகை ஷ்ரத்தா கபூர் வந்த லம்போர்கினி கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஏனெனில், சிவப்பு நிற லம்போர்கினி காருக்கு மேட்ச்சிங்காக பளிச்சிடும் சிவப்பு நிற உடையில் ஷ்ரத்தா கபூர் வந்தார். நடிகை ஷ்ரத்தா கபூரிடம் இருப்பது லம்போர்கினி ஹூராகென் டெக்னிகா கார் ஆகும். இதன் விலை தற்சமயம் ரூ.4.5 கோடி என்கிற அளவில் உள்ளது.

லம்போர்கினி ஹூராகென் டெக்னிகா காரை நடிகை ஷ்ரத்தா கபூர் ஓட்டவில்லை. அவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். இவருடன் அதே லம்போர்கினி காரில் முன்னணி பாலிவுட் நடிகர் வருண் தவண் நிகழ்ச்சிக்கு வந்தார். இந்த லம்போர்கினி காரை ஷ்ரத்தா கபூர் சில மாதங்களுக்கு முன்னர் தான் டெலிவிரி பெற்றார். காரின் வெளிப்புறம் ரோஸ்ஸோ மார்ஸ் என்கிற சிவப்பு நிறத்தில் மின்ன, காரின் உட்புறம் நீரோ கருப்பு நிறத்தில் உள்ளது.

actress shraddha kapoor in lamborghini

காருக்கு பின்பக்கத்தில் வழங்கப்படும் டிஃப்யூஸர் மற்றும் ஸ்பாய்லர் இயக்கத்தின்போது காரின் முன்பக்கத்தை கீழ்நோக்கி அழுத்துகின்றன. இது, கார் வேகமாக இயங்குவதற்கு வழிவகுக்கிறது. ஹூராகென் டெக்னிகாவில் 5.2 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி10 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 640 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது.

ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 565 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 325கிமீ ஆகும். பாலிவுட்டில் லம்போர்கினி ஹூராகென் டெக்னிகா காரை வைத்துள்ள ஒரே நடிகை ஷ்ரத்தா கபூர் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தி நடிகையாக இருந்தாலும், ஷ்ரத்தா கபூர் நம் தமிழ்நாடு வரையில் பிரபலமாக உள்ளார். இவரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் எம்.எல்250 மற்றும் முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன. இருப்பினும், ஷ்ரத்தா கபூரிடம் உள்ள தனித்துவமான காராக லம்போர்கினி ஹூராகென் டெக்னிகா விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்த நடிகையின் லேட்டஸ்ட் காரும் இதுதான்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 20, 2024, 23:07 [IST]
English summary
Actress shraddha kapoor arrives in lamborghini huracan tecnica supercar
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X