வாழ்க்கை மொத்தமாக மாறிடுச்சு! மாருதி காரை எல்லாம் இன்னும் வைத்து இருக்கிறாரா என தெரியவில்லை!!

ஷெரத்தா கபூர் (Shraddha Kapoor), இந்த பெயரை அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும், டிவி-யிலும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் வேறு யாரும் இல்லை... பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர். தென்னிந்தியாவிலும், குறிப்பாக தெலுங்கு மக்களிடையே கவனத்தை பெற்றவராக நடிகை ஷெரத்தா கபூர் விளங்குகிறார். அதேநேரம், கார்கள் குறித்தும் ஆர்வமிக்கவராக இருக்கிறார். பொதுவாகவே, பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுள் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவே இருக்கின்றனர்.

பாலிவுட் நடிகைகள் சிலர் மட்டுமே கார் & பைக்குகளில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்கின்றனர். அத்தகைய பாலிவுட் நடிகைகளுள் ஒருவராக ஷெரத்தா கபூர் விளங்குகிறார். இதை ஏன் நாங்கள் இப்போது கூறுகிறோம் என்றால், நடிகை ஷெரத்தா கபூரிடம் உள்ள சொகுசு கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

actress shraddha kapoor car collections

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): சொகுசு கார்கள் என கூறிவிட்டு, இந்த காரை சொல்கிறார்களே என கோபப்பட வேண்டாம். வெள்ளை நிறத்தில் ஸ்விஃப்ட் கார் ஒன்றை நடிகை ஷெரத்தா கபூர் அதிகமாக பயன்படுத்தி வருகிறார். இவரிடம் இருப்பது முந்தைய தலைமுறை ஸ்விஃப்ட் கார் ஆகும். தற்போதைய ஸ்விஃப்ட் காரில் கிடைக்காத 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் பழைய ஸ்விஃப்ட் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

actress shraddha kapoor car collections

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): நடிகை ஷெரத்தா கபூரிடம் உள்ள மற்றொரு விலை குறைவான கார். பிரெஸ்ஸா கார் ஒன்றிலும் சிலமுறை இவர் காட்சி தந்துள்ளார். மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி கிட்டத்தட்ட 5 வருடங்களாகி விட்டது. ஆனால், ஷெரத்தா கபூரிடம் இருப்பது டீசல் பிரெஸ்ஸா கார் ஆகும்.

actress shraddha kapoor car collections

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): ஃபார்ச்சூனரை விலை குறைவான கார் என்றும் சொல்ல முடியாது, அதேநேரம் விலைமிக்க கார் என்றும் சொல்ல முடியாது. இந்திய மக்களிடையே பிரபலமாக உள்ள இந்த டொயோட்டா காரையும் நடிகை ஷெரத்தா கபூர் வைத்துள்ளார். இவரிடம் இருப்பது கருப்பு நிறத்திலான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடுக்கு முந்தைய ஃபார்ச்சூனர் கார் ஆகும்.

actress shraddha kapoor car collections

மெர்சிடிஸ்-பென்ஸ் எம்.எல்250 (Mercedes-Benz ML250): பாலிவுட்டில் நடிக்க வந்த புதியதில் தனது ஸ்டேட்டஸை வெளிக்காட்டுவதற்காக ஷெரத்தா கபூர் வாங்கிய முதல் லக்சரி கார் இதுவாகும். இப்போதும் ஷெரத்தாவின் கேரேஜில் இருக்கும் எம்.எல்250 கார் இப்போது விற்பனையில் இல்லை. ஏனெனில், அதற்கு பதிலாக ஜி.எல்.இ கார்களை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. ஷெரத்தா கபூரிடம் எம்.எல்250 கார் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் உடன் உள்ளது.

actress shraddha kapoor car collections

லம்போர்கினி ஹூராகென் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica): நடிகை ஷெரத்தா கபூர் சமீபத்தில் கடந்த 2023ஆம் ஆண்டில் வாங்கிய கார் இதுவாகும். மேலும், இவரிடம் உள்ள விலையுயர்ந்த காரும் இதுவாகும். ஹூராகென் எவோ காரை போல் இல்லாமல், ஹூராகென் டெக்னிகா காரின் தோற்றம் லம்போர்கினி சியன் ஹைப்ரீட் ஹைப்பர் காரை போன்று வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சினிமா நடிகைகள் பெரும்பாலும் தாழ்வான செடான் ரக கார்களுக்கு தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், பாலிவுட் நடிகை ஷெரத்தா கபூரிடம் எஸ்யூவி ரக கார்கள் அதிகமாக உள்ளன. அதேநேரம், லம்போர்கினி ஹூராகென் டெக்னிகா போன்று ஸ்போர்ட்ஸ் காரும் இவரிடம் இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. பாலிவுட் சினிமா வட்டாரத்தில் லம்போர்கினி காரை வைத்துள்ள ஒரே நடிகை ஷெரத்தா கபூர் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 13:00 [IST]
English summary
Actress shraddha kapoor car collections maruti suzuki swift to lamborghini huracan tecnica
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X