10 தலைமுறைக்கு சொத்து இருந்தும் சாதாரண கார்ல வந்த தேவதை! கல்யாணத்துக்கு ஓகே சொன்னா நடிகர்களே லைன்ல நிப்பாங்க!
பாலிவுட் நடிகைகள் என்றாலே பொதுவாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்வார்கள். ஆனால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களை எல்லாம் ஒரு நடிகை பயன்படுத்தி கொண்டுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த நடிகை இது போன்ற சாதாரண கார்களில்தான், திரைப்படங்களின் படப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இத்தனைக்கும் அவர் சாதாரண நடிகை எல்லாம் ஒன்றும் கிடையாது. அவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகை ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். உண்மையில் ஷ்ரத்தா கபூரின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.

லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்250 (Mercedes Benz ML250) போன்ற விலை உயர்ந்த கார்களை எல்லாம் ஷ்ரத்தா கபூர் வைத்துள்ளார். ஆனால் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள சாதாரண கார்களில் பயணம் செய்வதைதான் அவர் பெரிதும் விரும்புகிறார்.
குறிப்பாக டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில், ஷ்ரத்தா கபூர் வலம் வருவதை நம்மால் பலமுறை பார்க்க முடிந்துள்ளது. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கூட, அவரது டொயோட்டா ஃபார்ச்சூனர் பயணங்களை பற்றிய செய்திகளை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு முறை டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் ஷ்ரத்தா கபூர் பயணம் செய்துள்ளார்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வந்து இறங்கும் ஷ்ரத்தா கபூர், கேரவன் ஒன்றுக்குள் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே இது சினிமா படப்பிடிப்பு தளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஷ்ரத்தா கபூர் பயன்படுத்திய டொயோட்டா ஃபார்ச்சூனர் கார், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster), ஜீப் மெரிடியன் (Jeep Meridian) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) உள்ளிட்ட கார்களுடன், டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியிட்டு வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.43 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை அரசியல்வாதிகள், வளர்ந்து வரும் இளம் தொழில் அதிபர்கள் உள்பட பலரும் பயன்படுத்துகின்றனர். கம்பீரமான தோற்றம், சக்தி வாய்ந்த இன்ஜின், சௌகரியமான பயணம் போன்றவை எல்லாம் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்களாக கருதப்படுகின்றன.
நடிகை ஷ்ரத்தா கபூரின் சொத்து மதிப்பு 125 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் எளிமையாக வலம் வருவது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். உண்மையிலேயே பாலிவுட் திரையுலகில் எளிமையான குணம் கொண்ட நடிகைகளில் ஒருவராக ஷ்ரத்தா கபூர் அறியப்படுகிறார்.
ஆனால் ஷ்ரத்தா கபூர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 37 வயதாகும் இவர் தொடர்ந்து தனது கரியரில் கவனம் செலுத்தி கொண்டுள்ளார். இவரது தந்தை சக்தி கபூர் (Shakti Kapoor) பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








