கோடி ரூபாய் விலையுள்ள கார்கள் நடிகை ஸ்ருதிக்காகிட்ட இருக்குதா? பிக்பாஸ் சம்பளம் எல்லாம் ஒரு விஷயமே கிடையாது!

தமிழ் சினிமாவின் நடிகையாக இருந்து சமீபத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான ஸ்ருதிக்காதற்போது ஹிந்தியில் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஹிந்தி பிக்பாஸ்க்கு சென்று அங்கு அவர் தமிழ் பேசிய வீடியோக்களும் டிரெண்டாகி வரும் நிலையில், இவர் சொந்தமாக பல காஸ்ட்லியான கார்களை வைத்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிய ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஸ்ருதிக்கா சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமாக மாறி உள்ளார். இவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலர் இவரை ரசித்து பார்த்து வருகிறார்கள்.

actress shrutika arjun car collection

இந்நிலையில் இவர் ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது நடிகர் சல்மான் கான் மேடையில் சந்தித்து பேசினார். அப்பொழுது நடிகர் சல்மான் கான் இவர் தமிழில் பேச வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மட்டும் இல்லாமல் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சென்று தமிழில் பேசிய வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஸ்ருத்திகாவிற்காக தமிழர்கள் பலரை தற்போது ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ஸ்ருத்திகாவின் குடும்ப பின்னணி குறித்தும், அவரது லைஃப் ஸ்டைல் குறித்தும் பலர் தேடி வரும் நிலையில் அவருக்கு சொந்தமாக பல காஸ்ட்லியான கார்கள் இருக்கிறது . இவர் பழம்பெரும் நடிகர்கள் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். இதனால் இவர் குடும்பம் வசதியான குடும்பமாகவே தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

actress shrutika arjun car collection

நடிகை ஸ்ருதிக்காவிடம் இருக்கும் காஸ்ட்லியான கார் என்றால் கடந்த ஆண்டு இவர்கள் வாங்கிய போர்ஷே நிறுவனத்தின் கெய்யன் என்ற கார் தான். இந்த கார் மார்க்கெட்டில் ரூ2 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை இவர் கடந்தாண்டு சொந்தமாக வாங்கினார். இந்த காரை அவர் டெலிவரி எடுக்கும் போது அதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதளம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அப்பொழுதே வைரலாக பரவியது.

அடுத்ததாக இவர் வீட்டில் மிட்சுபிஸி நிறுவனத்தின் பஜேரோ எஸ்எஃப்எக்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் தற்போது மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் இந்த கார் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான காராக இருக்கிறது. இந்த கார் ரூபாய் 21.87 லட்சம் என்ற விலையில் கடைசியாக விற்பனையானது. அதன் பிறகு இது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டது.

actress shrutika arjun car collection

மேலும் நடிகை ஸ்ருதிக்காவிடம் கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் இருக்கிறது. இந்த கார் தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. குடும்பங்களுடன் பயணிப்பதற்கு ஏற்ற காராக இந்த கார் உருவாக்கப்பட்டு கியா நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 10.90 லட்சம் முதல் ரூபாய் 20.45 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

அடுத்ததாக இவரிடம் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்இ ரக கார் இருக்கிறது. பென்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 97.85 லட்சம் முதல் ரூபாய் 1.15 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் சென்று தான் அவர் குடும்பத்துடன் போர்ஷே நிறுவனத்தின் காரை வாங்கினார். இது அவரது வீடியோவில் பதிவாகியுள்ளது.

பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் தமிழகத்தில் பிரபலமான நடிகராக இருந்தார். அவரது பேத்தியான ஸ்ருதிக்காவும் தற்போது தமிழக முழுவதும் பிரபலமாகியுள்ளார். இவரை பற்றி பலர் தேடிவரும் நிலையில்யில் இவரிடம் இவ்வளவு காஸ்ட்லியான கார்கள் இருப்பது குறித்த தகவல் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இது நிச்சயம் அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவலாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை ஸ்ருதிக்கா சினிமாவில் நடித்ததை விட டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வந்ததில் மிகவும் பிரபலமான நபராக இருக்கிறார். இவரது துறுதுறுப்பான உடல் மொழி மற்றும் பேச்சு காரணமாக பலர் இவரை ரசிக்கிறார்கள். இவரிடம் இவ்வளவு காஸ்ட்லியான கார்கள் இருப்பது நிச்சயம் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 15:41 [IST]
English summary
Actress shrutika arjun car collection porsche pajero mercedes benz gle
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X