நடிகை சிம்ரனுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த இத்தனை மகன்களா! புதுசா வாங்கிய கார் உடன் பூஜை போட்டாச்சு!!
சிம்ரன் (Simran), ஒரு சமயத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது அழகினாலும், நடிப்பு திறமையினாலும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். திருமணமான பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும், கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முன்பை போல் கதாநாயகி வேடம் கிடைக்காவிட்டாலும், குணச்சித்திர வேடங்களில் நடிகை சிம்ரன் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமலி' (Tourist Family), 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஹிட் ஆனது மட்டுமின்றி, சிம்ரனின் நடிப்பையும் ஹைலைட் படுத்தி காட்டின.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் புதியதாக மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை வாங்கி உள்ளார். ஷோரூமில் இருந்து வாகனத்தை டெலிவிரி பெற்று வீட்டிற்கு கொண்டுவந்த பின்னர் குடும்பத்துடன் சிம்ரன் அதற்கு இந்து முறைப்படி பூஜை செய்து வீட்டிற்கு வரவேற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது சமீப காலமாக ஆஃப்-ரோடு பிரியர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வாங்கும் வாகனமாக விளங்குகிறது. அதிலிலும் குறிப்பாக, மலைப்பிரதேச பகுதிகளில் வசிப்போரின் முதன்மையான சாய்ஸாக தார் ராக்ஸ் உள்ளது. ஆனால், இந்த வாகனம் ஆனது கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது தார் ராக்ஸ் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து 1 வருடம் கூட இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இது ஐந்து கதவுகளை கொண்ட ஆஃப்-ரோடு வாகனமாகும். இதற்கு முன்பு வரையில் 3-கதவுகளை மட்டுமே மஹிந்திரா தார் வாகனம் 2020ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் உள்ளது. ஆனால், 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும் 5-கதவு மாடலை தான் பெரும்பாலான மக்கள் வாங்க விரும்புகின்றனர்.

ஏனெனில், 3-கதவு தார் வாகனத்தை காட்டிலும் 5-கதவு தார் ராக்ஸ் வாகனம் தான் நடைமுறைக்கும் ஏற்றதாக உள்ளது. நடிகை சிம்ரனும் 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தை தான் வாங்கி உள்ளார். இவர் வாங்கி இருப்பது 'பேட்டில்ஷிப் கிரே' (Battleship Grey) நிறத்திலான தார் ராக்ஸ் வாகனம் ஆகும்.
இது இல்லாமல், பர்ண்ட் சியான்னா, நெபுலா நீலம், டீப் ஃபாரஸ்ட், எவரெஸ்ட் வெள்ளை, ஸ்டீல்த் கருப்பு, டாங்கோ சிவப்பு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. எம்.எக்ஸ்1, எம்.எக்ஸ்3, எம்.எக்ஸ்5, ஏஎக்ஸ்3 எல், ஏஎக்ஸ்5 எல், ஏஎக்ஸ்7 எல் உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.16.39 லட்சத்தில் இருந்து ரூ.29.67 லட்சம் வரையில் உள்ளன.
2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில், டீசல் என்ஜின் ஆப்ஷனை மட்டுமே 2-வீல்-டிரைவ் அல்லது 4-வீல்-டிரைவ் ஆப்ஷனில் வாங்கலாம். பெட்ரோல் என்ஜின் 2-வீல்-டிரைவ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை சிம்ரன் எந்த வேரியண்ட்டில் மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. விலைமிக்க டாப் வேரியண்ட்டை வாங்கியிருந்தால் வாகனத்திற்காக ரூ.32 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருந்திருக்கும். இருப்பினும், நடிகை சிம்ரன் போன்றோருக்கு ரூ.32 லட்சத்தில் வாகனம் என்பது கூட பெரிய விஷயமாக இருக்காது.
Source: Cartog (https://www.cartoq.com/)
Translated and published for our readers in Tamil.


Click it and Unblock the Notifications








