Just In
- 38 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 3 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- News
நிலக்கோட்டையின் கலவர நிலவரம்.. சமாளிப்பாரா அதிமுக வேட்பாளர் எஸ்.தேன்மொழி?
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Sports
900 விக்கெட்டுகளை பூர்த்தி செஞ்சிருக்காரு ஆண்டர்சன்... மெக்கிராத்,அக்ரம் வரிசையில் 3வது வீரராக சாதனை
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பைக் ஓட்டி வந்து இளசுகளை கிறங்கடித்த பெண்... யார்னு உத்து பாத்தா பெரிய ஆச்சரியம்... வைரல் வீடியோ
பைக் ஓட்டி வந்த பெண் ஒருவர் இளசுகளை கிறங்கடித்தார். அவரை கொஞ்சம் உற்று பார்த்தபோது, மிகப்பெரிய ஆச்சரியம் கிடைத்தது.

ஆண்கள் மட்டுமே வாகனங்களை ஓட்டி கொண்டிருந்த இந்திய சாலைகளில் தற்போது அவர்களுக்கு இணையாக பெண்களும் வாகனங்களை ஓட்ட தொடங்கியுள்ளனர். லாரி மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்களை தவிர, ஸ்கூட்டர் மற்றும் கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டுவதை இந்திய சாலைகளில் தற்போது எளிதாக பார்க்க முடிகிறது.

எனவே பொது சாலைகளில் பெண்கள் வாகனம் ஓட்டுவது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால் ஒரு நடிகை பொது சாலையில் வாகனம் ஓட்டி வந்தால்? அதுவும் இந்தியா முழுக்க பிரபலமான ஒரு நடிகை பொது சாலையில் வாகனம் ஓட்டி வந்தால்? அதுவும் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வந்தால்? கண்டிப்பாக ஆச்சரியம்தான்.

ஆம், இப்படி ஒரு ஆச்சரியமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொது சாலையில் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வந்தது வேறு யாருமல்ல, பிரபல நடிகை சோனாக்ஸி சின்காதான். சோனாக்ஸி சின்காவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்திய சினிமா ரசிகர்களுக்கே அறிமுகம் தேவையில்லை. அந்தளவிற்கு பிரபலமான நடிகையாக அவர் உள்ளார்.

அப்படி இருக்கையில் பொது சாலையில் திடீரென பைக் ஓட்டி வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் சோனாக்ஸி சின்கா. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சோனாக்ஸி சின்கா சமீபத்தில்தான் பைக் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் திடீரென பொது சாலையில் பைக் ஓட்டி வந்ததால், மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டனர்.

இந்த காட்சியை புகைப்பட கலைஞர்கள் பலர் படம் எடுத்தனர். இதில், சிலர் புகைப்பட நன்றாக வர வேண்டும் என்பதற்காக, சோனாக்ஸி சின்காவிற்கு வழி விடாமல் வழியை அடைத்து கொண்டனர். அதே சமயம் அவரது ரசிகர்களும், பொது மக்களும் தங்கள் செல்போனில் இந்த காட்சியை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

மற்றொரு பிரபல நடிகையான கரீனா கபூர் உடனான 'வாட் வுமன் வாண்ட்' (What Women Want) எனும் ரேடியோ சாட் ஷோவில் பங்கேற்பதற்காகவே சோனாக்ஸி சின்கா ராயல் என்பீல்டு பைக்கில் சென்றுள்ளார். சோனாக்ஸி சின்கா ஓட்டி சென்றது ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் (Royal Enfield Thunderbird 350X) பைக் ஆகும். இது சோனாக்ஸி சின்காவின் பைக்தான் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அந்த ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாக தண்டர்பேர்டு350எக்ஸ் திகழ்கிறது. ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கில், சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ட்வின்-ஸ்பார்க், 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5250 ஆர்பிஎம்மில் 19.8 பிஎச்பி பவரையும், 4000 ஆர்பிஎம்மில் 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக உள்ளது. சோனாக்ஸி சின்காவும் கூட அந்த பைக்கிற்கு ரசிகர்தான் போல.

ஜாலியாக ரைடு செல்ல ஒரு நல்ல பைக்கைதான் சோனாக்ஸி சின்கா தேர்வு செய்துள்ளார். இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் மோட்டார்சைக்கிளானது 1.64 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் மோட்டார்சைக்கிளானது, அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்களை பெற்றுள்ளது. அட்டகாசமான டிசைன் மற்றும் நல்ல பெர்ஃபார்மென்ஸை வழங்க கூடிய இன்ஜின்கள் உள்ளதால், ஏராளமான ரசிகர்களை ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350எக்ஸ் மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.
இங்கே குறிப்பிட்டதாக வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. சோனாக்ஸி சின்கா விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக ஹெல்மெட் அணிந்து பயணம் செய்துள்ளார். இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. ஆனால் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுவதில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.