26 வருஷத்துக்கு முன்னாடி காதலர் தினம் படத்துல நடிச்ச ரோஜாவா இது! சாதாரண கார்ல போறத பாத்து கண் கலங்கும் மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு மாதமும் ஹூண்டாய் க்ரெட்டா கார், மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும் கூட 15,786 ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற பெருமையை ஹூண்டாய் க்ரெட்டா பெற்றுள்ளது.

நீங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள ஒரு சாலையில் சில நிமிடங்கள் நிற்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அப்போது நீங்கள் அதிகமாக பார்க்கும் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா இருக்கும். அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் க்ரெட்டா கார்களை வாங்கி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்களை ஹூண்டாய் க்ரெட்டா காரில் பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயம். அவர்களை பொறுத்தவரையில், ஹூண்டாய் க்ரெட்டா மிகவும் எளிமையான கார்களில் ஒன்று. எனவே ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW), ரேஞ்ச் ரோவர் (Range Rover) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) போன்ற கார்களில் பயணம் செய்வதைதான் திரையுலக நட்சத்திரங்கள் விரும்புகின்றனர்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் ஹூண்டாய் க்ரெட்டா காரில் தற்போது பயணம் செய்துள்ளார். womanseramagazine இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வைரல் வீடியோ (Viral Video) பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் நடிகை ஒருவர் ஒரு கட்டிடத்தின் உள்ளே இருந்து வந்து, ஹூண்டாய் க்ரெட்டா காரில் ஏறி அமர்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த நடிகை சோனாலி பிந்த்ரே (Sonali Bendre) ஆவார். இவர் தமிழ், கன்னடா, தெலுங்கு, மராத்தி மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழை பொறுத்தவரையில், கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான காதலர் தினம் திரைப்படத்தில் சோனாலி பிந்த்ரே நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் சோனாலி பிந்த்ரே நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டிலும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் பயணம் செய்த ஹூண்டாய் க்ரெட்டா கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில் மிகவும் எளிமையான ஒன்று.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.11 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலை 20.50 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஐசி இன்ஜின் தவிர, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் கூட, ஹூண்டாய் க்ரெட்டா கார் கிடைத்து கொண்டுள்ளது.
இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.38 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. நாங்கள் இங்கே கூறியுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள திரையுலக நட்சத்திரங்கள் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற ஒரு எளிமையான காரில் பயணம் செய்வது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். ஆனால் சோனாலி பிந்த்ரே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரக்கூடிய நடிகைகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
இதற்கு முன்பாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) டாக்ஸியில் சோனாலி பிந்த்ரே பயணம் செய்த வைரல் வீடியோ ஒன்று கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த வரிசையில் தற்போது ஹூண்டாய் க்ரெட்டா காரில் அவர் பயணம் செய்துள்ளார். இது சோனாலி பிந்த்ரேவின் எளிமையை உணர்த்துவதாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Image Source: @womanseramagazine via Instagram


Click it and Unblock the Notifications








