ஒரு காலத்துல மொத்த தமிழ்நாடும் இவங்க அழகுல மயங்கி கெடந்துச்சு! ஆனா இன்னைக்கு கை ஒடஞ்சு சாதாரண டாக்ஸில போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த இந்த கார், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனவே அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான காரை வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. குறிப்பாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை நிறைய பேர் டாக்ஸி தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு சில கார்கள் டாக்ஸியாக பயன்படுத்துவதற்கு மிகவும் உகந்தவையாக கருதப்படுகின்றன. இதில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவும் ஒன்று. ஐடி நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களில் எல்லாம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை நீங்கள் காணலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 19.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 26.82 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது சற்று விலை உயர்ந்த கார்தான் என்றாலும் கூட, பிரபல நடிகர், நடிகைகள் இந்த காரை அதிகமாக பயன்படுத்துவது கிடையாது. மாறாக மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் கார்களைதான் நடிகர், நடிகைகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸியில், இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள நடிகை ஒருவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே (Sonali Bendre) ஆவார்.
கன்னடா, தெலுங்கு, ஹிந்தி மற்றும் மராத்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழிலும் கூட அவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. 1995ம் ஆண்டு அரவிந்த் சாமி நடிப்பில் வந்த பம்பாய், 1999ம் ஆண்டில் குணால் நடிப்பில் வந்த காதலர் தினம் மற்றும் அர்ஜூன் நடிப்பில் வந்த கண்ணோடு காண்பதெல்லாம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் சோனாலி பிந்த்ரே நடித்துள்ளார்.
இதில், குறிப்பாக காதலர் தினம் திரைப்படத்தில் சோனாலி பிந்த்ரே நடித்த ரோஜா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களுக்கு விருப்பமான ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு காலத்தில் இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்த சோனாலி பிந்த்ரேவை, தற்போது கை உடைந்த நிலையில் காணும் நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம்.
ஆம், தற்போது வைரலாக பரவி வரும் வைரல் வீடியோவில் சோனாலி பிந்த்ரேவின் கை உடைந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது எப்படி நடந்தது? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் கீழே விழுந்த காரணத்தால், அவருக்கு கை உடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்னையில் இருந்து சோனாலி பிந்த்ரே விரைவில் மீண்டு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class) காரை வைத்துள்ளார். அத்துடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் ஆடி க்யூ5 (Audi Q5) போன்ற கார்களும் அவரிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் டாக்ஸியில் பயணம் செய்தது ஏன்? என்பதற்கான காரணம் தெரியவில்லை.
இருப்பினும் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகள் டாக்ஸியில் பயணம் செய்வது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. சமீபத்தில் கூட கேஜிஎஃப் நடிகரான யஷ் (Yash) தனது மனைவி ராதிகா (Radhika) உடன் டாக்ஸியில் பயணம் செய்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.
ஆனால் யஷ் அவரது மனைவி ராதிகா உடன் பயணம் செய்தது, மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) டாக்ஸி ஆகும். பிரபலமான நடிகர், நடிகைகளை பொறுத்தவரையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எளிமையான ஒரு கார்தான். இருப்பினும் பல்வேறு நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இந்த கார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








