நயன், கீர்த்தி சுரேஷ் போல வர வேண்டிய நடிகை.. 2படத்தோட ஒதுங்கிட்டாங்க! இருந்தும் 2 கோடி ரூபா கார வாங்கிட்டாங்க!

சோனம் பஜ்வா, இந்த பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?.. இந்தியாவின் பலமொழி படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலேயே அவர் நடித்துக் கொண்டுள்ளார். தமிழ்ல இவங்க நடிச்சிருக்காங்களா?.. என நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்கலாம். இவர் இரண்டு தமிழ் படங்களில் நடித்திருக்கின்றார். கார்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியாகிய படம் 'கப்பல்'. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவரே இந்த சோனம் பஜ்வா ஆவார்.

இந்த படத்தில் மட்டுமல்ல 'காட்டேரி' எனும் படத்திலும் இவர் வைபவ் உடன் இணைந்து நடித்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவே அவருடைய கடைசி படம் ஆகும். அதாவது, 2022-க்கு பின்னர் அவர் தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. அதேவேளையில், இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் இவர் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்.

Actress sonam bajwa buys land rover defender

குறிப்பாக, பஞ்சாப் திரையுலகின் முன்னணி நடிகையாக இவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். அதாவது, தமிழில் நடிகை நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரைப் போல பஞ்சாப் மொழியில் இவர் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இதேபோல் தமிழிலும் இவர் மிக சிறப்பான சந்தையைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த அளவிற்கு அவர் தமிழ் திரையுலகில் மார்க்கெட்டைப் பெறவில்லை. இத்தகைய நடிகையே தற்போது மிக விலை உயர்ந்த காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். 2 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ஆடம்பர காரையே சோனம் பஜ்வா வாங்கியுள்ளார்.

அவர் வாங்கி இருப்பது கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எக்ஸ்-டைனமிக் எச்எஸ்இ (Land Rover Defender X-Dynamic HSE) கார் மாடல் ஆகும். இது ஓர் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும்.

எந்த மாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் இது அசால்டாக சமாளித்துவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய காரையே பஞ்சாப் திரை உலகின் முன்னணி நடிகை வாங்கி இருக்கின்றார். இவருக்கு திரை உலகில் மட்டுமல்ல இன்ஸ்டாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். சுமார் 13 மில்லியன் ஃபாலோவர்களை அவர் கொண்டிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

Actress sonam bajwa stands with land rover defender

மேலும், பஞ்சாப் திரை உலகின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் இருக்கின்றார். இவரின் சொத்துமதிப்பும் பல கோடிகள் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்தியாவின் பணக்கார நடிகையாகவும் இவர் காட்சியளிக்கின்றார். இந்த நிலையே அவரை புதிய ரூ. 2 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் காரை வாங்கச் செய்திருக்கின்றது.

இந்த ஆடம்பர கார் இந்தியாவில் டிஃபெண்டர் 90, டிஃபெண்டர் 110 மற்றும் டிஃபெண்டர் 130 ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் சோனம் பஜ்வா வாங்கி இருப்பது டிஃபெண்டர் 110 மாடல் என தெரிகின்றது. இது நீளமான வீல்-பேஸைக் கொண்ட வெர்ஷன் ஆகும்.

Actress sonam bajwa drives land rover defender

ஆகையால், இட வசதிக்கு இந்த காரில் கொஞ்சமும் குறைச்சல் இருக்காது. இதேபோல், அட்வான்ஸ்டு அம்சங்களையும் மிக தாராள மனசுடன் இது கொண்டிருக்கும். இதனால்தான் இந்த காருக்கு இந்தியாவில் ஃபேன்கள் அதிகம். இந்த நிலையிலேயே டிஃபெண்டர் 110 காரை வாங்கி தானும் ஓர் டிஃபெண்டர் கார் பிரியர் என்பதை காண்பித்திருக்கின்றார் சோனம் பஜ்வா.

இந்த காரை இந்தியாவில் முன்னணி நடிகர்களான கரீனா கபூர், அர்ஜுன் கபூர், சஞ்சய் தத், கேல் ராகுல், சுனில் ஷெட்டி, சன்னி தியோல், பிரகாஷ் ராஜ், கார்த்திக் ஆர்யன், விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் உள்ளிட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்ல நம் மாநில முதலமைச்சர் முக ஸ்டாலின்கூட டிஃபெண்டர் கார் மாடலையே பயன்படுத்தி வருகின்றார். இவர்களின் வரிசையிலேயே சோனம் பஜ்வா தற்போது இணைந்திருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்கள் மற்றும் உச்ச நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் உள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பல மொழி படங்களில் நடத்திருக்கும் சோனம் பஜ்வா இந்த காரை வாங்கிய நிகழ்வு அமைந்திருக்கின்றது. இந்த காஸ்ட்லியான காரை வாங்கியதன் வாயிலாக சோனம் பஜ்வா தற்போது தலைப்பு செய்தியாக மாறி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 17:48 [IST]
English summary
Actress sonam bajwa enhances her garage with new land rover defender worth rs 2 crore
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X