சினிமாவில் ஒருத்தரும் கண்டுக்கல! கார் பிஸ்னஸில் இறங்கிய பிரபல நடிகை - ஒரு சமயத்தில் கொடி கட்டி பறந்தவர்
சோனம் கபூர் (Sonam Kapoor), பிரபல பாலிவுட் நடிகை (Bollywood Actress). நடிகர் தனுஷ் உடன் 2013ஆம் ஆண்டில் நடித்த 'ரஞ்சனா' (Raanjhanaa) திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் பெரிதும் கவனத்தை பெற்றவர். ஆனால், 2018இல் திருமணம் ஆன பின்பு மெல்ல மெல்ல சினிமாவை விட்டு விலக ஆரம்பித்தார். இந்த நிலையில், கணவர் ஆனந்த் அஹூஜா (Anand Ahuja) உடன் இணைந்து கார்களை அலங்கரித்து கொடுக்கும் புதிய பிஸ்னஸை துவங்கி உள்ளார். என்ன மாதிரியான பிஸ்னஸ் இது என்பதையும், நடிகை சோனம் கபூரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
விலையுயர்ந்த கார்களை அதன் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரித்து கொடுக்கும் பணிகளில் உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், நம் இந்தியாவில் தான் அவ்வாறான நிறுவனங்கள் கொஞ்சம் குறைவு என சொல்ல வேண்டும். ஆனால், ஐரோப்பாவில் இவ்வாறான பிஸ்னஸை பார்த்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஏகப்பட்டவை உள்ளன.

அவ்வாறான ஒரு நிறுவனத்தை தான் நடிகை சோனம் கபூர் அவரது கணவர் உடன் இணைந்து இந்தியாவில் துவங்கியுள்ளார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இங்கிலாந்தில் ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் கம்பெனியை இந்தியாவில் துவங்கி உள்ளனர். இங்கிலாந்தில் மிகவும் உயர் தரத்திலான கார்களை டீடெயிலிங் செய்து கொடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாக டோபஸ் டீடெயிலிங் (Topaz Detailing) விளங்குகிறது.
இந்த யுகே நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்ததே நடிகை சோனம் கபூரும் அவரது கணவரும் தான் என்கின்றனர். இதற்காக டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதை ஆனந்த அஹூஜா தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் விபரங்கள் மற்றும் படங்கள் உடன் அறிவித்து உள்ளார்.

இந்த படங்களில், நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவருடன் டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகளை காணலாம். டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட கதையை ஆனந்த் அஹூஜா தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார். ஆனந்த் அஹூஜா 2012இல் இருந்து 'பானே' (Bhaane) என்கிற ஆடை வடிவமைப்பு & விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வருடத்திற்கு ரூ.500 கோடி வரையில் வருவாயை ஈட்டக்கூடிய இந்த பானே நிறுவனத்தின் நெட்வொர்க் இங்கிலாந்தில் கூட உள்ளது. அவ்வாறுதான், டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்தின் அறிமுகம் ஆனந்த் அஹூஜாவுக்கு கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்துடன் நீண்ட வருடங்களாகவே தொடர்பில் இருந்து வருகிறார். ஆனால், டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்தின் கஸ்டமராக ஆனந்த் அஹூஜா இருந்ததில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் தனது விலையுயர்ந்த கார் ஒன்றை ஆனந்த் அஹூஜா டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்திடம் கொடுத்து அலங்கரித்து தரும்படி கூறியுள்ளார். இதன் மூலமாக டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் உடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட ஆனந்த் அஹூஜா, அவர்களது வணிகத்தை பெருக்க ஒரு யோசனை கூறியுள்ளார். அதுதான், அவர்களை இந்தியாவிற்கு கொண்டுவருவது ஆகும்.
இதற்காக டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டவர், கடந்த சில மாதங்களாகவே இதுதொடர்பாக இங்கிலாந்துக்கு மனைவி சோனம் கபூர் உடன் அடிக்கடி சென்று வருவதுமாக இருந்துள்ளார். தற்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டன. இந்தியாவில் தனது முதல் ஷோரூமை ஆனந்த் அஹூஜாவின் உதவியுடன் திறக்க டோபஸ் டீடெயிலிங் நிறுவனம் தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கிலாந்தில் மிக பெரும் நிறுவனமாக விளங்கினாலும், இங்கிலாந்தை தாண்டி டோபஸ் டீடெயிலிங் நிறுவனத்தின் நெட்வொர்க் வேறெங்கும் இல்லை. ஆக, இந்தியா தான் இந்த யுகே கார் டீடெயிலிங் நிறுவனத்திற்கு 2வது இருப்பிடமாக விளங்கவுள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் முதல் ஷோரூம் எங்கு நிறுவப்பட உள்ளது என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. மும்பை அல்லது டெல்லியாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









