ரெண்டே ரெண்டு படத்துலதான் நடிச்சிருக்காங்க! ஆனா அதுக்குள்ள ஒன்னரை கோடி ரூபா சொகுசு காரை வாங்கீட்டாங்களா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் காரை திரையுலக நட்சத்திரங்கள் அதிகளவில் வாங்கி கொண்டுள்ளனர். ஃபஹத் ஃபாசில் (Fahadh Faasil), மோகன்லால் (Mohanlal), ஆமிர் கான் (Aamir Khan), அக்ஸய் குமார் (Akshay Kumar), ஆலியா பட் (Alia Bhatt), அனில் கபூர் (Anil Kapoor) மற்றும் ஜான்வி கபூர் (Janhvi Kapoor) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடம் டொயோட்டா வெல்ஃபையர் கார் உள்ளது.
அத்துடன் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) போன்ற தொழில் அதிபர்களும், கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா (Yediyurappa) போன்ற அரசியல்வாதிகளும் கூட டொயோட்டா வெல்ஃபையர் காரை வைத்துள்ளனர். பிரபலங்கள் பலரும் டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்கி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

சொகுசு, சௌகரியம் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவற்றுடன், அவர்களுடைய அந்தஸ்தின் அடையாளமாகவும் டொயோட்டா வெல்ஃபையர் கார் கருதப்படுகிறது. இவைதான் டொயோட்டா வெல்ஃபையர் காரை பிரபலங்கள் விரும்புவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக உள்ளன. இந்த காரணங்களுக்காக தற்போது மற்றொரு பிரபலம் ஒருவர் டொயோட்டா வெல்ஃபையர் காரை வாங்கியுள்ளார்.
அவர் சௌந்தர்யா ஷர்மா (Soundarya Sharma) ஆவார்.2 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். சௌந்தர்யா ஷர்மா தற்போது தனது புத்தம் புதிய டொயோட்டா வெல்ஃபையர் காரில் ஏறி பயணம் செய்யும் வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், டொயோட்டா வெல்ஃபையர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து, சௌந்தர்யா ஷர்மா பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட கூடிய மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாகும்.
தற்போதைய நிலையில் டொயோட்டா வெல்ஃபையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.22 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஆன்-ரோடு விலை (On-Road Price) முறையே 1.52 கோடி ரூபாய் மற்றும் 1.64 கோடி ரூபாய் என்ற அளவில் வரும். இதில், 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப நிலை வேரியண்ட்டைதான் சௌந்தர்யா ஷர்மா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 193 பிஎஸ் பவர் மற்றும் 240 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் e-CVT கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சம் இல்லை.
வசதிகளை பொறுத்தவரையில், 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 15 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடிய திரையுலக நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஏற்ற காராக டொயோட்டா வெல்ஃபையர் காரை குறிப்பிட முடியும். விலை அதிகம் என்றாலும் கூட, வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இது உள்ளது.


Click it and Unblock the Notifications








