3 கோடி ரூபாய் காரில் இருந்து தேவதை போல் இறங்கி வந்தது இந்த நடிகையா? சுற்றி வளைத்த கேமராக்கள்

ஸ்ரீலீலா (Sreeleela), இன்றைய கால இளைஞர்களின் கனவு கன்னியாக சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகை. எந்த அளவிற்கு வேகம் என்றால், 23 வயது மட்டுமே ஆகும் ஸ்ரீலீலா அதற்குள் தெலுங்கின் முன்னணி நடிகர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உடன் நடித்துவிட்டு தற்போது பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை நடிகை ஸ்ரீலீலா வாங்கியுள்ளார். அந்த புதிய ரேஞ்ச் ரோவர் காரில் அவர் விமான நிலையத்திற்கு வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு இருக்கும் கிரேஸை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், லேண்ட் ரோவர் நிறுவனத்தால் உருவாக்கப்படும் ரேஞ்ச் ரோவர் கார்களின் கம்பீரமான உடலமைப்பிற்கு மயங்காதவர்களே இல்லை. குறிப்பாக, சினிமா நட்சத்திரங்களுள் பலர் குறைந்தது ஒரு ரேஞ்ச் ரோவர் காரை ஆவது வைத்துள்ளனர்.

sreeleela arrived in range rover

அப்படியிருக்க, இந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வேகமாக உருவெடுத்துவரும் ஸ்ரீலீலா ரேஞ்ச் ரோவர் கார்களுள் ஒன்றை வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தவரான நடிகை ஸ்ரீலீலா தனது 15ஆம் வயதிலேயே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

முதல்முறையாக கதாநாயகி வேடம் 2019இல் 'கிஸ்' என்கிற கன்னட திரைப்படத்திற்காக ஸ்ரீலீலாவை தேடி வந்தது. அதன்பின், திரும்பி பார்க்க கூட நேரம் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துவரும் ஸ்ரீலீலாவை புஷ்பா 2ஆம் பாகத்தில் ஒரு பாடலுக்காக அவர் போட்ட குத்தாட்டம் ஒட்டுமொத்த இந்திய அளவில் கொண்டுபோய் சேர்த்தது.

sreeleela arrived in range rover

இதன் மூலமாக இந்த 2025ஆம் வருடத்தில் தமிழ் மற்றும் இந்தி சினிமா துறைக்குள் நுழையும் ஸ்ரீலீலா, சமீபத்தில் விமான நிலையத்தில் காட்சி தந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகை ஸ்ரீலீலாவை விடவும் நம்மை வெகுவாக கவர்வது, அவரது பளபளக்கூடிய புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஆகும்.

காரின் தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இந்த ரேஞ்ச் ரோவர் காரை இவர் சமீபத்தில்தான் வாங்கியிருக்க கூடும். நடிகை ஸ்ரீலீலா புதியதாக வாங்கியிருப்பது, கருப்பு நிறத்திலான ரேஞ்ச் ரோவர் எச்.எஸ்.இ லாங்-வீல்பேஸ் (HSE Long-Wheelbase) கார் என கூறப்படுகிறது. இந்த கார் டீசல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

sreeleela arrived in range rover

இந்த காரில் பொருத்தப்படுகின்ற 3 லிட்டர் மைல்ட்-ஹைப்ரீட் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 351 பிஎஸ் மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எச்.எஸ்.இ லாங்-வீல்பேஸ் கார் ஆனது 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த இருக்கை ஆப்ஷனில் இந்த காரை நடிகை ஸ்ரீலீலா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இந்த இரு சீட் ஆப்ஷனிலும் எதனுடன் வாங்கியிருந்தாலும், ரேஞ்ச் ரோவர் கார்களிலேயே விலை குறைவான வேரியண்ட்டையே இந்த நடிகை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை வெறும் ரூ.2.40 கோடி- ரூ.3 கோடி மட்டுமே ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 22, 2025, 0:11 [IST]
English summary
Actress sreeleela arrived in range rover hse lwb car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X