3 கோடி ரூபா காரை வாங்கிய 22 வயதே ஆன இளம் நடிகை.. இவ்ளோ சின்ன வயசுல இப்படி ஒரு அசூர வளர்ச்சியா!!

தெலுங்கு திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் எதிர்பார்ப்பாகவும் 'புஷ்பா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது. 'புஷ்பா தி ரைஸ்'-இன் தொடர்ச்சியாக விரைவில் 'புஷ்பா தி ரூல்' பாகத்தின் வருகை அமைய உள்ளது. இந்த இரண்டாம் பாகம் திரையறங்குகளில் டிசம்பர் 5ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகியாக மாறியிருக்கும் ஸ்ரீலீலாவும் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றார்.

தன்னுடைய ஆக சிறந்த நடன திறனால் ரசிகர்களை வளைத்துப் போட்டு வரும் இந்த நடிகையே தற்போது விலை உயர்ந்த ஆடம்பர ரக கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ஸ்ரீலீலா வாங்கி இருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) சொகுசு கார் மாடல் ஆகும்.

Sreeleela rs 3 cr range rover lwb suv

இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே வாங்கி தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார், ஸ்ரீலீலா. இந்திய திரை நட்சத்திரங்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ரேஞ்ச் ரோவர் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பல முன்னணி நட்சத்திரங்களின் வீட்டில் இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்த நிலையிலேயே புதிதாக இந்த காரை வாங்கியதன் வாயிலாக ஸ்ரீலீலாவும் ரேஞ்ச் ரோவர் பிரியர் என்பதை வெளிக்காட்டியுள்ளார். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3 கோடி ஆகும். இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரையே ஸ்ரீலீலா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இந்த காரை அவர் வாங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலீலா அந்த காரில் பயணிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. நடிகை வாங்கி இருப்பது ரேஞ்ச் ரோவர் கார் மாடலின் எஸ்வி (Range Rover LWB) பதிப்பு என தெரிகின்றது. வழக்கமான ரேஞ்ச் ரோவர் கார் மாடலைக் காட்டிலும் சற்று அதிக அம்சங்களைத் தாங்கியதே இந்த வெர்ஷன் ஆகும்.

அந்தவகையில், பயணிகளுக்கு மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு 13.1 அங்குல பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 13.7 அங்குல டிஜிட்டல் டிரைவர் திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 35 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் சவுண்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Sreeleela getting out from car

மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல், டீசல் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் அம்சம் ஆகியவையே அவை ஆகும். இந்த காரை சொகுசு அம்சங்களை அதிகம் விரும்பும் பணக்கார்களுக்காகவே லேண்ட் ரோவர் தாயர் செய்திருக்கின்றது. மிக முக்கியமாக பிரீமியம் ஃபீல் மற்றும் சொகுசான டிராவல் அனுபவம் என அனைத்தையும் மிக மிக தாராளமாக வழங்கும்.
குறிப்பாக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கைகள் வேற லெவல் டிராவல் அனுபவத்தை வழங்கக் கூடியவை என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பணக்காரர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பை லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார்கள் பெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே 22 வயதே ஆன ஸ்ரீலீலா இந்த காரை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ஸ்ரீலீலா காட்சியளிக்கின்றார். இந்த கார் வாங்கியிருப்பது அவருக்கு கூடுதல் அந்தஸ்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 24, 2024, 5:00 [IST]
English summary
Actress sreeleela makes headlines for range rover lwb suv purchase worth inr 3 crores
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X