மார்டன் சேலை கட்டுன ஏஞ்சல் மாதிரி இருக்காங்க! காஸ்ட்லியான காரில் வந்தது இந்த நடிகையா!
தமிழ் சினிமாவில் வேற்று மொழியில் இருந்த வரும் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இப்படியாக தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை ஸ்ரீலீலா. இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை ஸ்ரீலீலா தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார். அந்த ஊர்களில் இவருக்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கிறது. இந்நிலையில் இவர் தற்போது தமிழ் திரைப்படமான பராசக்தி என்ற பெயரில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் அடிப்படையில் எம்பிபிஎஸ் படித்த டாக்டராக இருக்கிறார்.

நடிகை ஸ்ரீலீலாவின் தாய் பெங்களூருவில் பணியாற்றி வரும் ஒரு பிரபல மருத்துவர் ஆவார். இவர் தனது கணவர் சுராப்பனேனி சுபாஸ்கரராவ் என்பவரை விட்டு தனியாக பிரிந்து வந்த பிறகு பிறந்தவர் தான் ஸ்ரீலீலா. இவர் சிறு வயது முதலே பரதநாட்டியம் பயின்றவர்.இந்நிலையில் பல சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக தனது காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் நடிகை ஸ்ரீலீலா மார்டனான சேலை அணிந்து கவர்ச்சியான தோற்றத்தில் இருந்தார். இதனால் பலர் இவரது வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இவர் வந்திறங்கிய காரும் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. பொதுவாக காஸ்ட்லியான கார்களை பிரபலங்கள் பயன்படுத்துவது சாதாரண விஷயம் தான். இப்படியாக ஸ்ரீலீலா பயன்படுத்தி வருவது லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி கார் தான்.

ரேஞ்ச் ரோவர் காரை பொருத்தவரை மார்கெட்டில் ரூ2.83 கோடி முதல் ரூ5.73 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மொத்தம் 15 விதமான வேரியன்ட்களில் இந்த கார் விற்பனையாகிறது. இதில் நடிகை ஸ்ரீலீலா பயன்படுத்துவது ஆட்டோபயோகிராஃபி லாங் வீல் பேஸ் 3.0 காரை பயன்படுத்தி வருகிறார். இந்த கார் மார்கெட்டில் ரூ3.11 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக வசதி காரணமாக இந்த காரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 2996 சிசி வி6 மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இது 394 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதனால் அதிக மைலேஜ் தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் ஆல் வீல் டிரைவ் முறையிலும் இயங்கும் திறன் கொண்டது.

இந்த காரின் ஃபெர்பார்மென்ஸை பொருத்தவரை 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 4.8 முதல் 6.3 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது. இந்த கா் அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சொகுசு வசதியிலும் ஃபெர்பார்மென்ஸிலும் இந்த கார் சிறந்த கார் சிறப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பிரபலங்கள் பயன்படுத்துவதற்காக தங்கள் காரை அதிகம் கஸ்டமைஸ் செய்து வழங்கி வருகிறார்கள். அதன்படி பார்த்தால் இந்த காரை வாங்கிய பல பரபலங்கள் அவர்களுக்கு தேவையான கஸ்டமைஷேஷன் செய்து வாங்கியிருப்பார்கள். இதனால் எக்ஸ் ஷோரூம் விலையில் மாற்றம் இருக்கும் நிச்சயம் அதிகமாக இருக்கும்


Click it and Unblock the Notifications









