விலையுயர்ந்த BMW காரில் தேவதை போல் வந்து இறங்கியது இந்த நடிகையா? எல்லா கேமராக்களும் அவர் மீதுதான்!

சுருதி ஹாசன் (Sruthi Hasan), தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர். பழம்பெரும் நடிகர் கமலஹாசனின் மகள் என்பது ஊரறிந்த விஷயம். நடிகையாகுவதற்கு முன்னரே சுருதி ஹாசன் ஓர் சிறந்த பாடகி ஆவார். மிகவும் ஸ்டைலிஷான லைஃப் ஸ்டைலை கொண்ட சுருதி ஹாசன் சமீபத்தில் விமான நிலையத்திற்கு தனது விலையுயர்ந்த புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ (BMW) காரில் வந்திறங்கியுள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நடிகை சுருதி ஹாசனை போலவே அவரது புதிய பிஎம்டபிள்யூ காரும் பளபளப்பான தோற்றத்தில் அழகானதாக காட்சியளிக்கிறது.

சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். குறிப்பாக, இந்தி சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு லக்சரி காரை வாங்கி குவிக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் நம் கோலிவுட் ஸ்டார்களும் அவ்வப்போது புதியதாக சொகுசு கார்களை வாங்குகின்றனர்.

sruthi haasan spotted with bmw

இன்னும் சொல்லப்போனால், நம் ஆளுங்க வாங்கும் சொகுசு கார்கள் பெரும்பாலும் விசித்திரமானவைகளாகவும், அரிதானவைகளாகவும் உள்ளன. அதாவது, நிறைய பேரால் வாங்கப்படாத, தெரியாத லக்சரி கார்களையே தமிழ் சினிமா நட்சத்திரங்கள் வாங்குகின்றனர். அந்த வகையில், பிரபல தமிழ் நடிகை சுருதி ஹாசன் புதியதாக வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட் (BMW 740D M Sport) கார் ஆகும்.

தமிழ் நடிகர் கமலஹாசனுக்கு மகளாக கோலிவுட்டில் அறிமுகமாகிய சுருதி ஹாசன் அதன்பின் தெலுங்கு சினிமா துறையிலும் முன்னணி நடிகையாகினார். 2 ஃபிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் 6 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA)-ஐ பெற்றுள்ள சுருதி ஹாசன் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் டாப்-100 பிரபலங்களுள் ஒருவராக இடம்பிடித்தார்.

sruthi haasan spotted with bmw

இத்தகைய நடிகை தனது புதிய பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட் காரில் விமான நிலையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வீடியோவில், கருப்பு நிறத்தில் பளபளப்பாக புத்தம் புதியதாக நடிகை சுருதி ஹாசனின் பிஎம்டபிள்யூ கார் காட்சியளிக்கிறது. ஆதலால், இந்த காரை சுருதி ஹாசன் சமீபத்தில்தான் வாங்கியிருக்க வேண்டும்.

காரின் கருப்பு நிறத்திற்கு மேட்சிங்காக கருப்பு நிறத்தில் சுருதி ஹாசன் உடை அணிந்துள்ளார். இந்த காரை ஒரே நாளில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கு சுருதி ஹாசன் பயன்படுத்தி உள்ளதை வீடியோவில் காட்டியுள்ளனர். பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் என்கிற லக்சரி செடான் காரின் டீசல் வேரியண்ட் இதுவாகும்.

sruthi haasan spotted with bmw

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் விலையுயர்ந்த லக்சரி செடான் கார் 7 சீரிஸ் ஆகும். அத்தகைய காரின் டீசல் வேரியண்ட் 740டி எம் ஸ்போர்ட் ஆகும். அதாவது, இந்த காரை டீசல் என்ஜின் உடன் நடிகை சுருதி ஹாசன் வைத்துள்ளார். அதனால்தான், காரின் பெயரில் 'டி' என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது. 3.0 லிட்டர் பி57 6-சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் இந்த காரில் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 375 எச்பி மற்றும் 520 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. சொகுசான பயணத்திற்காக இந்த காரின் முன் மற்றும் பின்பக்கங்களில் ஏர் சஸ்பென்ஷனை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. சுருதி ஹாசன் வைத்துள்ள பிஎம்டபிள்யூ 740டி எம் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.85 கோடி ஆக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே நாங்கள் குறிப்பிட்டு இருப்பது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம் என எல்லாவற்றையும் சேர்த்தால், ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.2.5 கோடியை தாண்டிவரும். தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவருக்கு இவ்வளவு விலையில் கார் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2024, 19:26 [IST]
English summary
Actress sruthi haasan spotted with her new bmw 740d m sport check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X