துபாய்ல சொந்தமா காரை வாங்கிட்டாங்களா!.. தமிழில் கொடி கட்டி பறந்த நடிகை இப்ப ஆள் அடையாளமே தெரியல..

தமிழ் திரை உலகின் மிகவும் ஃபேமஸான நடிகையாக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் சுனைனா-வும் ஒருவர் ஆவார். அந்த அளவிற்கே பல முன்னணி படங்களில் அவர் நடித்து இருக்கின்றார். ஆனால், இவருக்கு இப்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத நிலையே உள்ளது. வருஷத்திற்கு ஒரு படமே அவர் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கும், அரபு நாட்டைச் சேர்ந்த யுட்யூபர் ஒருவருக்கும் லிவிங் ரிலேஷன்ஷிப் இருப்பதாக அரசல்-புரசலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என இந்த வதந்திகளுக்கு அவர் சமீபத்தில் முற்று புள்ளி வைத்துவிட்டார்.

கடைசியாக 'ராக்கெட் டிரைவர்' படத்திற்கு அடுத்தபடியாக அவர் வேறு எந்த படத்திலும் நடித்துக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே அவர் டெஸ்லா நிறுவனத்தின் சைபர்டிரக் (Tesa Cybertruck) காருடன் நிற்கும் படம் இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தை சுனைனாவே அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

Actress sunaina spotted with tesla cybertruck

இந்த காரை அவர் சொந்தமாக வாங்கிவிட்டாரா என தெரியவில்லை. இருப்பினும், தன்னுடைய சொந்த காருக்கு அருகில் நிற்பதைப் போலவே அவர் நிற்கின்றார். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை தயாரிக்கும் நிறுவனத்தின் ஒரு கார் மாடல்கூட நம் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

அதேவேளையில், அமெரிக்கா, அரபு நாடுகள் போன்ற உலக சந்தையில் இந்த கார் மாடல் எப்போதோ விற்பனைக்கு வந்துவிட்டது. இது ஓர் பிக்-அப் டிரக் ரக மின்சார வாகனம் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட் மட்டுமே அமெரிக்காவில் 79,990 டாலர்களுக்கும் அதிகமாக விற்கப்படுகின்றது.

இது ஓர் பிக்-அப் டிரக் ரக வாகனமாக இருந்தாலும், இந்த காரில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். அத்துடன், பின்னால் சரக்குகளையும் ஏற்றிக் கொள்ள முடியும். ஓர் பைக்கைகூட பின் பக்கத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய ஓர் அசத்தலான வாகனமே டெஸ்லா சைபர்டிரக் ஆகும். இதன் அருகிலேயே நின்று சுனைனா போஸ் கொடுத்து, அந்த படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கின்றார். இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 445 மைல்களுக்கும் அதிகமான தூரம் வரை பயணிக்க முடியும். அதாவது, 700 கிமீட்டருக்கும் அதிகமாக பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 112 கிமீ வேகம் ஆகும். இதுமட்டுமல்ல அதிகபட்சமாக 5 ஆயிரம் கிலோ வரையிலான எடைக் கொண்ட பொருளையும் இது டோவ் செய்யும். ஆல் டிரைவ் வசதியுடனேயே உலக சந்தையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனால் வெறும் 4.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

வேகம் மற்றும் ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல தொழில்நுட்ப வசதிகள் மற்றும் லக்சூரி அம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் நம்மை வியக்க வைக்கும் வகையிலேயே உள்ளது. அந்தவகையில், இரண்டு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சென்டர் பகுதியில் 18.5 அங்குல தொடுதிரையும், பின் பக்கத்தில் 9.4 அங்குல தொடுதிரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கும்.

தொடர்ந்து, ஆஃப்-ரோடுகளை சமாளிக்கும் விதமாக இந்த பிக்-அப் டிரக்கிற்கு 16 அங்குல எக்ஸ்ட்ராக் மோட் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், பாறைகள் மற்றும் நீர் நிறைந்த சாலையாக இருந்தாலும் சைபர்டிரக் சமாளித்துவிடும். உலக சந்தையில் இந்த கார் சைபர் பீஸ்ட் மற்றும் ஆல் வீல் டிரைவ் என்கிற இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் ஒரு வேரியண்ட்கூட இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. விரைவில் இது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுனைனா தற்போது அரபு நாடுகளில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே அங்கு இந்த காருடன் நின்று புகைப்படம் எடுத்து, அதை பதிவிட்டு இருக்கின்றார். இந்த படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இவர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கின்றார்.

அவர் சற்றே வெயிட்போட்டபடி காட்சியளிக்கின்றார். இதற்கு சமீபத்தில் உடல்நலம் பாதித்ததே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இப்போதும் அவர் திருமணமாகாமல் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இது அவருடைய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, கல்யாண பேச்சை எடுத்தாலே இவர் சிடுசிடு ஆளாக மாறிவிடுவதாகக் கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 9, 2025, 8:52 [IST]
English summary
Actress sunaina spotted with tesla cybertruck ev in dubai
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+