இறக்கை மட்டும் இருந்தால் தேவதை சார்... 48 வயதில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை!!

சுஷ்மிதா சென் (Sushmita Sen), பிரபல பாலிவுட் நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல், புது புது சொகுசு கார்களை வாங்குவதற்கு மிகவும் விரும்பக்கூடிய பாலிவுட் பிரபலங்களுள் நடிகை சுஷ்மிதா சென்னும் ஒருவர். அந்த வகையில், சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் ஒன்றை இவர் வாங்கியிருந்தார். இந்த நிலையில், அந்த புத்தம் புதிய காரில் நடிகை சுஷ்மிதா சென் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் காட்சி தந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், சுஷ்மிதா சென் வைத்துள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1990 மற்றும் 2000ஆம் காலக்கட்டங்களில் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்தவர் நடிகை சுஷ்மிதா சென் ஆவார். 1994 பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட பின் சுஷ்மிதா சென்னுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. பிரபல நடிகர்கள் ஷாரூகான், சல்மான்கான் என அனைவருடனும் சுஷ்மிதா சென் நடித்துள்ளார்.

sushmita sen in range rover

48 வயது நடிகையாக பாலிவுட்டில் உலா வந்துக் கொண்டிருக்கும் சுஷ்மிதா சென்னுக்கு பல மொழிகளிலும் நிறைய நண்பர்கள் உள்ளனர். அவ்வாறு, தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை லஷ்மி மஞ்சுவின் பிறந்த நாள் மும்பையில் நடைபெற்றதிலும் நடிகை சுஷ்மிதா சென் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரில் சுஷ்மிதா சென் வந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சுஷ்மிதா சென்னின் கணவர் ராஜ் குந்த்ராவும் தனது பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரில் வந்தார். அதேபோல், கிரிக்கெட் வீரர் யுவுராஜ் சிங் தனது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரிலும், டிவி நடிகர் கரண் குந்த்ரா தனது ஜீப் வ்ராங்க்லர் காரிலும் வந்திருந்தனர்.

sushmita sen in range rover

நடிகை சுஷ்மிதா சென்னிடம் இருப்பது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங் வீல்பேஸ் கார் ஆகும். இதனை லாண்டாவு வெண்கல நிறத்தில் இவர் சமீபத்தில்தான் வாங்கினார். இந்த வெண்கல நிறத்தை சமீபத்தில்தான் லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் ரேஞ்ச் ரோவர் காரில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்கள் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில், எச்.எஸ்.இ லாங் வீல்பேஸ் வேரியண்ட் ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.36 கோடியாக உள்ளது. மற்றொரு வேரியண்ட்டான ஆட்டோபயோகிராபி லாங் வீல்பேஸ் வேரியண்ட்டை தான் நடிகை சுஷ்மிதா சென் வாங்கியுள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.68 கோடியாக உள்ளது. இதனை விட விலைமிக்க எஸ்வி ரந்தம்போர் எடிசனிலும் ரேஞ்ச் ரோவர் கார் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.98 கோடியாகும்.

sushmita sen in range rover

ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரந்தம்போர் எடிசன் ஆனது ஒரு லிமிடெட் எடிசன் ஆகும். அதாவது, இந்த கார் 12 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. ரேஞ்ச் ரோவர் எஸ்வி ரந்தம்போர் எடிசனின் வெளிப்பக்கத்தில் அடர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் வழங்கப்படுகிறது. இதற்கேற்ப அடர் கிரே நிறத்தில் 23 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் ரேஞ்ச் ரோவரின் இந்த டாப் வேரியண்ட்டில் வழங்கப்படுகின்றன.

நடிகை சுஷ்மிதா சென்னின் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங் வீல்பேஸ் கார் ஆனது 3.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 3.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது. இதில் எந்த என்ஜின் உடன் இந்த ரேஞ்ச் ரோவர் காரை சுஷ்மிதா சென் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இதில் பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2023ஆம் ஆண்டில் நடிகை சுஷ்மிதா சென் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ 53 ஏஎம்ஜி காரையும் வாங்கியிருந்தார். இதன் விலை ரூ.1.63 கோடியாகும். இவ்வாறு விலையுயர்ந்த கார்களை வாங்கிக் குவிப்பதில் ஆர்வமிக்கவராக சுஷ்மிதா சென் விளங்குகிறார். இதற்கு அவரது ஸ்டைலிஷான லைஃப் ஸ்டைல் தான் காரணம் என சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 11:19 [IST]
English summary
Actress sushmita sen seen in her new range rover autobiography lwb car check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X