சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

பிரபல நடிகை டாப்ஸி தனது சகோதரிக்கு மிகவும் சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் டாப்ஸி (Taapsee). தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் டாப்ஸி நடித்து வருகிறார். தமிழ் என எடுத்துக்கொண்டால், ஆடுகளம் மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் டாப்ஸி நடித்துள்ளார்.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

திரைப்பட நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மீது அதிகம் ஆர்வம் காட்ட கூடியவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். டாப்ஸியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த சூழலில் தற்போது ஜீப் காம்பஸ் காரை (Jeep Compass) புதிதாக வாங்கியுள்ளார். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

ஆனால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை டாப்ஸி தனக்காக வாங்கவில்லை. தனது சகோதரி ஷகுனுக்கு பரிசாக வழங்குவதற்காகதான் அவர் இந்த காரை புதிதாக வாங்கியுள்ளார். டாப்ஸி நேற்றுதான் (ஜூலை 15) புதிய ஜீப் காம்பஸ் காரை டெலிவரி எடுத்துள்ளார். அத்துடன் தனது சகோதரி ஷகுனுக்கு மிகவும் சர்ப்ரைஸான முறையில் அதனை பரிசாகவும் கொடுத்துள்ளார்.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலை தளங்களிலும் டாப்ஸி பகிர்ந்து கொண்டுள்ளார். ஜீப் காம்பஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரிடமும் ஜீப் காம்பஸ் கார் உள்ளது. இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ஜீப் காம்பஸ் 'ஹிட்' அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் ஜீப் காம்பஸ் கார் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

இந்தியாவில் ஜீப் நிறுவனம் காம்பஸ் காரின் டீசல் வேரியண்ட்களையும் விற்பனை செய்து வருகிறது. இதன் டீசல் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 171 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. ஜீப் நிறுவனம் சமீபத்தில்தான் புத்தம் புதிய காம்பஸ் ட்ரெயில்ஹாக் மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

நடிகை டாப்ஸி தனது சகோதரிக்காக ஜீப் காம்பஸ் காரின் லிமிடெட் பிளஸ் வேரியண்ட்டை வாங்கியுள்ளார். அத்துடன் மேக்னீசோ கிரே நிற காரை அவர் தேர்வு செய்துள்ளார். இந்திய மார்க்கெட்டில், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுடன் ஜீப் காம்பஸ் போட்டியிட்டு வருகிறது.

சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ!!

இதுதவிர வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள கியா செல்டோஸ் எஸ்யூவி காருடனும் ஜீப் காம்பஸ் போட்டியிடவுள்ளது. இதனிடையே ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை நடிகை டாப்ஸி டெலிவரி எடுப்பது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இந்த வீடியோவை டாப்ஸியின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால் இந்திய மார்க்கெட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், சமீப காலமாக ஜீப் காம்பஸ் காரின் விற்பனை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்திய மார்க்கெட்டின் தற்போதைய சூழ்நிலையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தியாவில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடந்த சில மாதங்களாக சரிவடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

நடிகை டாப்ஸி மட்டுமல்ல, சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, நடிகைகள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் இந்த எஸ்யூவியை வாங்கினார். நடிகர் சுதீப் தனது தங்கைக்கு இந்த எஸ்யூவியை வாங்கி பரிசளித்தார்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

நடிகர் அக்ஷய் குமாரும் இந்த எஸ்யூவியை வாங்கினார். கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் ஜீப் காம்பஸ் எஸ்யூவியை வாங்கிய நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்தார். சரி, இந்த எஸ்யூவிக்கு இந்தளவு நட்சத்திரங்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த எஸ்யூவியை ஓட்டும்போது ஏற்படும் பரவசமான உணர்வை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ஜீப் பாரம்பரியத்தை பரைசாற்றும் ஏராளமான டிசைன் அம்சங்களை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது. ஹூண்டாய் டூஸான் உள்ளிட்ட போட்டியாளர்களை ஒப்பிடுகையில், ஒரு முறையான எஸ்யூவி மாடலாகவே தோற்றமளிக்கிறது. முழுமையான எஸ்யூவி மாடலை விரும்புவோரை இந்த ஜீப் காம்பஸ் நிச்சயம் கவரும்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

முகப்பு பக்கத்தில் ஜீப் நிறுவனத்தின் முத்திரையாக பிரதிபலிக்கும் க்ரோம் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேக் 3 வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேகமான எஸ்ஆர்-71 உளவு விமானத்தின் டிசைன் தாத்பரியங்களை பிரதிபலிக்கும் விதத்திலான பானட் அமைப்பும் மிக நேர்த்தியாக இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

பொதுவாக வீல் ஆர்ச்சுகள் வளைவு போன்ற அமைப்பிலேயே பல கார்களில் இடம்பெற்றிருக்கும். ஆனால், புதிய ஜீப் காம்பஸ் காரில் சரிவக வடிவிலான வீல் ஆர்ச்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வீல் ஆர்ச்சுகள் மேடு பள்ளங்களில் செல்லும்போதும், இதன் 16 இன்ச் சக்கரங்களை அழகாக கையாளும் வகையில் இருக்கிறது. இந்த எஸ்யூவியில் ஃபயர்ஸ்டோன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் பேஸ் மாடல்களில் 5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், டாப் வேரியண்ட்டுகளில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் 8.4 இன்ச் திரை அளவுடைய சாதனம் பயன்படுத்தப்படும் நிலையில், இந்திய மாடலில் இது ஏமாற்றம் தரும் விஷயம்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ஜீப் எஸ்யூவியில் இருக்கும் செலக்- டெர்ரெய்ன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை இயக்குவதற்கு கியர் லிவருக்கு அருகிலேயே டயல் ஒன்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு செல்வதற்கு ஏற்ற வகையிலான மிதியடிகளும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் இருக்கைகள் மிக சொகுசான உணர்வை தருகிறது. அதேநேரத்தில், வெளிர் சாம்பல் நிற இருக்கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கூடுதல் பிரத்யேனம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இருக்கையில் சிவப்பு வண்ண நூல் தையல் போட்டிருப்பதும் அழகு. இந்த இருக்கைகள் கால்களுக்கு நல்ல சப்போர்ட் தருவதால் சொகுசான உணர்வை தருகிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 438 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. பின் இருக்கையை மடக்கினால் 770 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி பெற முடியும். போட்டியாளரான ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியில் 513 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இருக்கும் நிலையில், இது சற்று ஏமாற்றம் தரும் விஷயம். அதேபோன்று, ஹேண்ட்ஸ் ப்ரீ வசதி மூலமாக பூட் ரூம் திறக்கும் வசதியும் இல்லை.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

நல்ல வேளையாக பாதுகாப்பு அம்சங்களில் கை வைக்கவில்லை ஜீப் நிறுவனம். புதிய காம்பஸ் எஸ்யூவியில் பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், கார் கவிழ்வதை தவிர்க்கும் பாதுகாப்பு நுட்பங்களை பெற்றிருக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடலில் வருகிறது. பெட்ரோல் மாடலில் 160 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 171 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதில், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த டீசல் எஞ்சின் 1,800 ஆர்பிஎம் வரையில் டர்போலேக் தெரிகிறது. அதி்லிருந்து 4,000 ஆர்பிஎம் வரை சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது இந்த டீசல் எஞ்சின். இந்த எஞ்சின் அதிர்வுகள் குறைவாகவும், மிகவும் மென்மையாக இருப்பதுடன், 2,000 ஆர்பிஎம்.,ல் 120 கிமீ வேகத்தை அசால்ட்டாக கடந்து செல்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த எஸ்யூவியில் இருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கியர் மாற்றும்போது மென்மையாக இருந்தாலும், விரைவான கியர் ஷிஃப்ட்டின்போது லேசான தடங்கல் இருக்கிறது. எஞ்சின் அதிர்வுகள் அதிக அளவில் உள்ளே கேட்காதவாறு தடுப்பு அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பதும் சிறப்பாக கூறலாம்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த எஸ்யூவியில் இன்டிபென்டென்ட் சாப்மேன் லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பு காருக்கு சிறந்த கையாளுமையை வழங்குவதுடன், மோசமான சாலைகளிலும் அனாயசமாக கடந்து செல்ல உதவுகிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த சஸ்பென்ஷன் அமைப்பு கையாளுமையில் சிறப்பாக இருப்பதுடன், பயணிப்போருக்கு சொகுசான உணர்வையும் தருகிறது. மேடு பள்ளங்கள், நெடுஞ்சாலைகள், வளைவுகளை இந்த கார் சிறப்பாக கையாள்கிறது. நடுத்தர வேகத்தில் பாடி ரோல் அதிகம் தெரியாத அளவுக்கு சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

நெடுஞ்சாலையில் செல்கையில் ஸ்டீயரிங் வீலை தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அதேநேரேத்தில், ஆஃப்ரோடுகளில் செல்லும்போது இதன் ஸ்டீயரிங் வீல் சிறப்பான உணர்வை தருகிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த எஸ்யூவியில் இருக்கும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், பின்புற சக்கரங்களை வெறும் 300 மில்லி செகண்டில் இணைத்து ஆஃப்ரோடுக்கு தயாராகி விடுகிறது. இந்த அம்சம், தான் ஒரு ஜீப் பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்று கூறுகிறது.

முன்புற பம்பரின் விசேஷ லிப் அமைப்பு காரணமாக கரடுமுரடான சாலைகளிலும் செல்வதற்கு ஏதுவாக இருக்கிறது. 17 டிகிரி செங்குத்தான சாலையில் ஏறுவதற்கும், 32 டிகிரி சரிவான சாலையில் இறங்குவதற்கும்போதும் அலட்டிக் கொள்ளவில்லை. வழியில் உள்ள தடைகளையும் எளிதாக கடக்க உதவுகிறது. இந்த எஸ்யூவி 480 மிமீ ஆழமுடைய நீர் நிலைகளை எளிதாக கடக்கிறது.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்த எஸ்யூவியில் இருக்கும் செலக்- டெர்ரெயின் ஆஃப்ரோடு சிஸ்டம் நான்குவிதமான டிரைவிங் மோடுகளை பெற்றிருக்கிறது. Auto, Snow, Sand மற்றும் Mud என்ற நான்குவிதமான டிரைவிங் நிலைகளில் மாற்றிக் கொள்ள முடியும். ஆட்டோ மோடில் வைக்கும்போது தானாகவே நிலப்பரப்பின் தன்மையை உணர்ந்து கொண்டு காரின் இயக்கத்தை மாற்றிக் கொள்ளும்.

சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் அமோக வரவேற்பு

இந்தியர்களின் பட்ஜெட்டை மனதில் வைத்து குறைவான விலையில் இறக்குவதற்காக பல சிறப்பம்சங்களை சமரசம் செய்து கொண்டிருந்தாலும், ஜீப் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைனில் வெளிவந்துள்ள இந்த கார் வெகுவாக கவர்ந்துவிட்டது.

சிறப்பான இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள், கம்பீரமான தோற்றம், ஆஃப்ரோடு தகவமைப்புகளுடன் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 16, 2019, 18:03 [IST]
English summary
Actress Taapsee Bought Jeep Compass SUV For Her Sister. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+