டாப் ஹீரோயினாக இருந்தாலும், இத்தனை சொகுசு கார்களை வைத்திருப்பது எல்லாம் வேற லெவல்!! கேரேஜ் நிரம்பி வழியுது!

டாப்சி பன்னு (Taapsee Pannu), பிரபல திரைப்பட நடிகையான இவரை உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். நடிகர் ஷாரூக்கான் உடன் டாப்சி நடித்திருக்கும் டங்கி திரைப்படம் டிச.21ஆம் தேதி திரைக்கு வருகிறது. டாப்சி பன்னுவிடம் தற்சமயம் 4 சொகுசு கார்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ்600: பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோரிடத்தில் இருக்கும் மெர்சிடிஸ் மேபக் கார் இதுவாகும். நடிகை டாப்சியிடமும் பல்லாடியம் சில்வர் நிறத்தில் ஜி.எல்.எஸ் 600 கார் உள்ளது. இந்த காரின் ஆன்-ரோடு விலை ஏறக்குறைய ரூ.3.5 கோடி ஆகும். நப்பா லெதரில் கேபினை பெறும் இந்த காரில் எலக்ட்ரானிக் பனோராமிக் ஸ்லைடிங் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

actress taapsee pannu car collection

மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ் 600 காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. இதில் என்ஜின் அதிகப்பட்சமாக 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாகவும், ஹைப்ரீட் சிஸ்டம் கூடுதலாக 22 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளன. இந்த என்ஜின் சிஸ்டம் வெளிப்படுத்தும் இயக்க ஆற்றல் ஆனது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் செல்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ 350: டாப்சியிடம் உள்ள மற்றொரு மெர்சிடிஸ் கார். இந்த காரின் மீது படுத்திருப்பது போன்றதான படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். டாப்சியிடம் இந்த கார் கவன்சைட் ப்ளூ மெட்டாலிக் நிறத்தில் உள்ளது. இதன் காரணமாக, தனது இந்த மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு 'மர்கரட்' என டாப்சி பெயர் வைத்துள்ளார்.

actress taapsee pannu car collection

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் லக்சரி எஸ்யூவி மாடலான ஜி.எல்.இ 350 -இல் 2.9 லிட்டர் 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 268 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டாப்சி வாங்கிய சமயத்தில் ஜி.எல்.இ 350 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மார்க்கெட்டில் ரூ.60 - 80 லட்சமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்1: சினிமாவில் நடிக்க வந்த புதியதில் டாப்சி பயன்படுத்திய கார் இது எனலாம். இதனாலேயே, டாப்சியிடம் இருப்பது விலை குறைவான எண்ட்ரீ-லெவல் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் ஆகும். இந்த பிஎம்டபிள்யூ காரில் டாப்சி தற்போதெல்லாம் பெரியதாக தென்படுவதில்லை. இவரிடம் இருப்பது முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ் 1 கார் ஆகும்.

actress taapsee pannu car collection

பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் 1 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறன் வரையிலும், 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 184 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. ஆனால், டாப்சியின் எக்ஸ்1 காரில் எந்த என்ஜின் பொருத்தப்பட்டது என்பது தெரியவில்லை.

ஜீப் காம்பஸ்: 2019இல் டாப்சி புதியதாக ஜீப் காம்பஸ் காரை வாங்கி இருந்தார். ஆனால் அதனை தனது பயன்பாட்டிற்காக வாங்காமல் தனது சகோதரிக்காக வாங்கி இருந்தார். ஆனால், இப்போது இருவரில் யார் பயன்படுத்துகிறார் என்பது தெரியவில்லை. மாக்னெசியோ கிரே நிறத்தில் காம்பஸ் காரை டாப்சி வாங்கி இருந்தார்.

actress taapsee pannu car collection

டாப்சி வாங்கி இருப்பது முழுவதும் வசதிகள் மிகுந்த காம்பஸ் வேரியண்ட் ஆகும். ஜீப் காம்பஸ் காரில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் 160 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையிலும், டீசல் என்ஜின் 171 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான் உடன் இணைந்து நடிக்கிறார் என்றால், அந்த அளவிற்கு முன்னணி நடிகையாக டாப்சி உள்ளார். இத்தகையவரிடம் 4 லக்சரி கார்கள் உள்ளன என்றால் அதில் ஆச்சிரியம் எதுவும் இல்லை. டாப்சியின் இந்த லக்சரி கார்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 19:04 [IST]
English summary
Actress taapsee pannu car collection mercedes gls600 to jeep compass
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X