றெக்கை மட்டும் இருந்தா தேவதை சார்... அவருக்குனே உருவாக்கப்பட்ட கார் மாதிரி இருக்கு!!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, சினிமா வட்டாரத்தில் ரேஞ்ச் ரோவர் கார்களை பிரபலங்கள் பலர் பயன்படுத்துகின்றனர். அதிலிலும் குறிப்பாக, பாலிவுட் நடிகைகள் (Bollywood Actress) அதிகம் பேரிடத்தில் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன. அத்தகைய பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் தான், திரிப்தி திம்ரி (Triptii Dimri) ஆவார். இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகையான இவர் தனது ரேஞ்ச் ரோவர் காரில் பொது வெளியில் காட்சி தந்துள்ளார்.

லேண்ட் ரோவர் நிறுவனத்தில் இருந்து பிரபலமான கார்கள் என்றால், அவை ரேஞ்ச் ரோவர் கார்களும், டிஃபெண்டர் (Defender) கார்களுமே ஆகும். இவை இரண்டுமே அவற்றின் கம்பீரமான தோற்றத்தினால் பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கின்றன. பாலிவுட் சினிமா நடிகைகள் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்கள் என்றாலே எளிதில் மயங்கி விடுகின்றனர்.

tripti dimri in range rover

ரேஞ்ச் ரோவர் கார்களிலேயே பல்வேறு விதமான மாடல்கள் பல்வேறு விதமான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ரேஞ்ச் ரோவர் வேலர் (Velar), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Sport), ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் எவோக் (Evoque) என்பன அவை ஆகும். இதில் ரேஞ்ச் ரோவரின் விலை மிகவும் அதிகமாகும். சுமார் ரூ.2.4 கோடியில் விலையை கொண்டதாக உள்ளது.

நடிகை திரிப்தி திம்ரியிடம் இருப்பது முற்றிலும் கருப்பு நிறத்திலான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஆகும். இதனால்தான், காரில் இருந்து திரிப்தி திம்ரி இறங்கி வெளியே வரும்போது எடுக்கப்பட்ட வீடியோவில், காரின் பின்பக்கத்தில் 'Sport' என்கிற முத்திரை பொருத்தப்பட்டு இருப்பதை காணலாம். மும்பையில் மீட்டிங் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக திரிப்தி திம்ரி வந்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

tripti dimri in range rover

இதில் காருக்கு மேட்சிங்காக கருப்பு நிற சட்டை உடன் நடிகை திரிப்தி திம்ரி மொபைல் போனில் பாட்டு கேட்டப்படி காரில் இருந்து இறங்கி வெளியே வரும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. திரிப்தி திம்ரி பயன்படுத்துவது தற்போது விற்பனையில் இருக்கும் லேட்டஸ்ட் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் கிடையாது. பழைய மாடல் ஆகும்.

ஆனால், அதற்காக மிக பழைய மாடல் என நினைத்துவிட வேண்டும். நடிகை திரிப்தி திம்ரியின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் 5இல் இருந்து 7 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம். தற்சமயம் விற்பனையில் இருக்கும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஆனது எச்.எஸ்.இ டைனாமிக் (HSE Dynamic), ஆட்டோபயோகிராபி (Autobiography), எஸ்வி எடிசன் 2 (SV Edition 2) என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார், ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Euro NCAP Crash Test)-இல் 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்றது. அளவில் பெரிய காராக இருப்பினும், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டில் 5 இருக்கைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், இந்த காரை மேனுவல் கியர்பாக்ஸ் இல்லாமல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.45 கோடியில் இருந்து ரூ.2.95 கோடி வரையில் உள்ளன. இந்த காரில் பொருத்தப்படும் 3 லிட்டர் 6-சிலிண்டர் டீசல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் அதிகப்பட்சமாக 345 பிஎஸ் மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 3 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் அதிகப்பட்சமாக 400 பிஎஸ் மற்றும் 550 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலைகளாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் பல ரூபாய்கள் அதிகமாக வரும். இத்தகைய காரை பல வருடங்களுக்கு முன்னரே நடிகை திரிப்தி திம்ரி வாங்கியுள்ளார் எனும்போது இதில் இருந்து அவரது செல்வாக்கை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 9, 2025, 20:20 [IST]
English summary
Actress tripti dimri spotted in land rover range rover sport car in mumbai
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+