நடிகையை விட்டுட்டு போர்ஷே கார் அதுபாட்டுக்கு போயிடுச்சு! நடுரோட்டில் சுற்றி வளைத்த போட்டோகிராபர்கள்!

திரிப்தி டிம்ரி (Triptii Dimri), 31 வயதான பாலிவுட் நடிகை (Bollywood Actress). மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் 2017ஆம் ஆண்டில் வெளியான திரில்லர் திரைப்படமான 'மாம்' (Mom) மூலம் சினிமா துறைக்குள் அறிமுகமான நடிகை திரிப்தி டிம்ரி, அதன்பின் அனிமல், பூல் பூலையா-3 உள்ளிட்ட ஹிட் அடித்த பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தன்னை ஒரு நடிகையாக ரசிகர்களின் மனதில் நிலைநிறுத்தினார். அடுத்ததாக பாகுபலி ஹீரோ பிரபாஸ் உடன் இணைந்து 'ஸ்பிரிட்' (Spirit) திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை திரிப்தி டிம்ரி தனது விலையுயர்ந்த போர்ஷே (Porsche) கார் உடன் பொது வெளியில் காட்சி தந்துள்ளார்.

10 திரைப்படங்கள் கூட இதுவரையில் தனது நடிப்பில் திரைக்கு வராவிடினும், லக்சரியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் நடிகை திரிப்தி டிம்ரி, மற்ற பாலிவுட் நட்சத்திரங்களை போன்று பயன்படுத்துகிறோமோ இல்லையோ... விலையுயர்ந்த கார்களை வாங்கி போடுவதை எப்போதோ ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், நீல நிறத்திலான போர்ஷே 911 கார் ஒன்றையும் திரிப்தி டிம்ரி வைத்துள்ளார்.

bollywood actress in porsche 911

911 ஆனது உலகளவில் பிரபலமான போர்ஷே கார்களில் ஒன்றாகும். அந்த அளவிற்கு தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி பார்க்கும் எவரொருவரையும் கவர்ந்து இழுக்கக்கூடியதாக போர்ஷே 911 விளங்குகிறது. பொதுவாக போர்ஷே கார்களை சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் வாங்குவதுதான் வழக்கம். ஆனால், நடிகை திரிப்தி டிம்ரியிடம் கண்ணை கவரும் நீல நிறத்தில் போர்ஷே 911 கார் உள்ளது.

இரு இருக்கைகள் மற்றும் இரு கதவுகளை மட்டுமே கொண்ட போர்ஷேவின் ஸ்போர்ட்ஸ் ரக காரான இதில் நடிகை திரிப்தி டிம்ரி இறங்கி வெளியே வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், காருக்குள் இளைஞர் ஒருவர் இருப்பதை பார்க்க முடிகிறது. ஒருவேளை அவர் நடிகையின் கார் டிரைவராக இருக்கலாம்.

bollywood actress in porsche 911

அல்லது, ஒருவேளை இந்த போர்ஷே 911 காரே அவருக்கு சொந்தமானதாக கூட இருக்கலாம். ஏனெனில், இந்த போர்ஷே கார் திரிப்தி டிம்ரிக்கு சொந்தமானதா என்பது உறுதியாக தெரியவில்லை. வீடியோவில் காட்சித்தரும் 911 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது போர்ஷேவின் 2-சீட்டர் கூபே-ஸ்டைல் & கன்வெர்டபிள் கார் ஆகும்.

கன்வெர்டபிள் கார் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், இந்த காரின் மேற்கூரையை தேவைக்கு ஏற்ப திறந்து மூடிக் கொள்ளலாம். மொத்தம் 8 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் போர்ஷே 911 காரின் விலைகள் தற்சமயம் ரூ.2.11 கோடியில் இருந்து ரூ.4.26 கோடி வரையில் உள்ளன.

இது காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, இவ்வாறான விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கூடுதலாக பல லட்ச ரூபாய்களை செலவு செய்து காரில் மாற்றங்களை செய்துக் கொண்ட பின்னரே டெலிவிரி பெறுவர்.

இந்த நீல நிறம் உள்பட மொத்தம் 15 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த போர்ஷே கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 911 காரில் வேரியண்ட்டை பொறுத்து 981சிசி என்ஜினில் இருந்து 3996சிசி என்ஜின் வரையில் பொருத்தப்படுகின்றன. இந்த போர்ஷே கார் ஆனது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பையில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதிகளில் இவ்வாறான விலையுயர்ந்த போர்ஷே கார்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். இருப்பினும், இந்த போர்ஷே 911 கார் நடிகை திரிப்தி டிம்ரிக்கு சொந்தமானதா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. எப்படியிருந்தாலும், திரிப்தி டிம்ரியின் ஸ்டைலுக்கு இந்த போர்ஷே கார் மிகவும் எடுப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 16:03 [IST]
English summary
Actress triptii dimri arrived in porsche 911 sports car in mumbai
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+