தமிழ்நாட்டின் அடுத்த முதல் அமைச்சரை கை காட்டியவர்! காஸ்ட்லி காரில் சிகப்பு கலர் உடையில் வந்ததற்கு காரணம் இதானா

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பிரபல நடிகையான ஊர்வசி ரவுத்தேலா (Urvashi Rautela) ஆவார். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) காரில் இருந்து ஊர்வசி ரவுத்தேலா இறங்கி வருவதை, நம்மால் இந்த வைரல் வீடியோவில் காண முடிகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஊர்வசி ரவுத்தேலா வந்தபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான். இதற்கு தி லெஜெண்ட் (The Legend) திரைப்படம் மிக முக்கியமான காரணம் ஆகும். இது தொழில் அதிபர், நடிகர் என பல முகங்களை கொண்ட சரவணன் அருள் (Saravanan Arul) நடிப்பில் உருவான படம் ஆகும்.

Actress Urvashi Rautela Spotted In Range Rover Evoque

இந்த திரைப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலாவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், அடுத்த 10 ஆண்டுகளில், சரவணன் அருள்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல் அமைச்சர் என அவர் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஊர்வசி ரவுத்தேலா இப்படி பேசியதும் சரவணன் அருள் பதறி போனார். இந்த சூழலில்தான் தற்போது ஊர்வசி ரவுத்தேலா, ரேஞ்ச் ரோவர் எவோக் காரில், வந்து இறங்கிய வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சிகப்பு நிற உடையில் ஊர்வசி ரவுத்தேலா வந்ததை நம்மால் பார்க்க முடிகிறது.

Range Rover Evoque

சிகப்பு நிறம் ஊர்வசி ரவுத்தேலாவிற்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இதை அவரே கடந்த காலங்களில் பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் சிகப்பு நிற உடையில் வந்துள்ளார். மறுபக்கம் அவர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் எவோக் கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 67.90 லட்ச ரூபாய் என்ற விலையில் ரேஞ்ச் ரோவர் எவோக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 85 லட்ச ரூபாய் வரும்.

ரேஞ்ச் ரோவர் எவோக் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். இதில் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 250 பிஎஸ் பவர் மற்றும் 365 என்எம் டார்க் ஆக உள்ளது. மறுபக்கம் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 204 பிஎஸ் பவர் மற்றும் 430 என்எம் ஆக உள்ளது.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 இன்ஜின்கள் உடனும், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.

இதில், 360 டிகிரி கேமரா, பாதுகாப்பிற்காக நிறைய ஏர்பேக்குகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், பனரோமிக் சன்ரூஃப், 11.4 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடிகை ஊர்வசி ரவுத்தேலா பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் எவோக் காரானது, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி (Mercedes Benz GLC), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) போன்ற கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 13:30 [IST]
English summary
Actress urvashi rautela spotted in range rover evoque viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+