கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை செய்யுற காரியமா இது? ரசிகர்கள் மத்தியில் மானம் போச்சு...
பாலிவுட் நடிகர், நடிகைகள் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கி குவிப்பார்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அந்த வகையில், பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா புதியதாக மெர்சிடிஸ்-மேபக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், உண்மையில் இது மெர்சிடிஸ்-மேபக் கார் கிடையாது என சொன்னால் நம்ப முடிகிறதா... அப்படியென்றால், என்ன மாதிரியான காரை ஊர்வசி ரவுடெலா வாங்கியுள்ளார்? அதன் சிறப்பம்சங்கள் என்ன என்கிற விபரங்களையும், இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஊர்வசி ரவுடேலா (Urvashi Rautela), முன்னணி பாலிவுட் நடிகை. இந்தியில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள ஊர்வசி ரவுடேலா அவரது ஸ்டைலிஷான வாழ்க்கை முறையினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறார். விலையுயர்ந்த லக்சரியான கார்களை வாங்கி குவிப்பதையும் விரும்பக்கூடியவர் ஊர்வசி ரவுடேலா ஆவார்.

இவரிடம் லக்சரி கார்களும் ஏகப்பட்டவை உள்ளன. அந்த வரிசையில், ஊர்வசி ரவுடேலா சமீபத்தில் வாங்கிய கார், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class) ஆகும். செகண்ட்-ஹேண்டில் பழைய எஸ்-கிளாஸ் காரை நடிகை ஊர்வசி ரவுடேலா வாங்கியுள்ளார். ஆனால், இது மெர்சிடிஸ்-மேபக் கார் என்கிற கேப்ஷன் உடன் இணையத்தில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின.
இன்னும் சொல்லப்போனால், ஊர்வசி ரவுடேலா வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-மேபக் (Mercedes-Maybach) கார் என்றே நிறைய பேர் நினைத்துவிட்டனர். மெர்சிடிஸ் கார்கள் மொத்தம் 3 விதமான வெர்சன்களில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ், ஏஎம்ஜி மற்றும் மேபக் என்பன அவை ஆகும். மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விலையுயர்ந்தவை என்பது நமக்கு தெரியும். ஆனால், மெர்சிடிஸ்-மேபக் கார்கள் அதனை காட்டிலும் விலையுயர்ந்தவை ஆகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்கள் அதிவேகமாக இயங்கக்கூடிய செயல்திறன்மிக்கவை ஆக உருவாக்கப்படுகின்றன. நடிகை ஊர்வசி ரவுடேலா வாங்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை பலர் மெர்சிடிஸ்-மேபக் என தவறுதலாக நினைத்துக் கொண்டதற்கு முக்கிய காரணம், அதன் பெயிண்ட் ஆகும். மேபக் கார்களில் வழங்கப்படுவதை போன்று பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இந்த நடிகையின் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கார் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பெயிண்ட் உடன் காரில் வேறு சில மாற்றங்களையும் ஊர்வசி ரவுடேலா மேற்கொண்டுள்ளார். அதாவது, வழக்கமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை மாடிஃபை செய்து நடிகை ஊர்வசி ரவுடேலா பயன்படுத்தி வருகிறார். முக்கியமாக, மெர்சிடிஸ்-மேபக் கார்களில் வழங்கப்படுவதை போன்றதான லோகோவை ஊர்வசி ரவுடேலாவின் காரில் பார்க்க முடிகிறது.

எஸ்-கிளாஸ் காரின் ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களின் டிசைனில் சிறு, சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், காரின் கிரில் பகுதியையும் மாற்றியுள்ளனர். ஆனால், காரின் பம்பரில் எந்த மாற்றமும் இல்லை. நடிகை ஊர்வசி ரவுடேலா வைத்திருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் காரின் எஸ்500 வேரியண்ட் ஆகும். இதன், மும்பை ஆன்-ரோடு விலை தற்சமயம் ரூ.1.27 கோடி என்கிற அளவில் உள்ளது.
எஸ்-கிளாஸ் காரில் 5.5 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 388 பிஎஸ் மற்றும் 530 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-மேபக் கார் போன்று ஒரு காரை மாற்ற வேண்டுமெனில், உயர் தரத்திலான ஆஃப்டர்-மார்க்கெட் பாடி கிட்களை வாங்கி பொருத்த வேண்டும். நடிகை ஊர்வசி ரவுடேலா அவ்வாறான பாடி கிட்களை வாங்கி தனது எஸ்-கிளாஸ் காரில் பொருத்தி கொண்டுள்ளாரா அல்லது வெறுமனே காருக்கு ட்யூயல்-டோன் பெயிண்ட்டை மட்டும் வழங்கியுள்ளாரா என்பது தெரியவில்லை. நடிகை ஊர்வசி ரவுடேலா நினைத்திருந்தால், புதியதாக ஒரு மெர்சிடிஸ்-மேபக் காரை கூட வாங்கியிருக்க முடியும்.


Click it and Unblock the Notifications









