கல்யாணத்துக்கு அப்புறம் தான் நடிகைக்கு எல்லாமே கை கூடுது! இந்தியாவில் இல்லாத போர்ஷே காரை வாங்கி கொடுத்தது அவரா

சினிமா (Cinema) நடிகர், நடிகையர் அவ்வப்போது விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதை பார்த்து வருகிறோம். ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் மாதத்திற்கு ஒரு சொகுசு கார் என அசால்ட்டாக வாங்கி வருகின்றனர். குறிப்பாக, ஏற்கனவே சினிமா நட்சத்திரங்களாக இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் சினிமா பிரபலங்கள் லம்போர்கினி (Lamborghini), போர்ஷே (Porsche) போன்ற அல்ட்ரா-லக்சரி கார்களையும் சர்வ சாதாரணமாக வாங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில், பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலக்‌ஷ்மி சரத்குமார் புதியதாக போர்ஷே 718 பாக்ஸ்டர் (Boxster) காரை பரிசாக பெற்றுள்ளார். இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரத்யேகமான பிங்க் (Pink) நிறத்தில் இந்த போர்ஷே காரை வரலக்‌ஷ்மி பரிசாக பெற்றுள்ளார்.

actress varalakshmi receives porsche 718 boxster sports car

இந்த பிங்க் நிற போர்ஷே காரை இந்த நடிகைக்கு பரிசாக வழங்கியது அவரது தந்தை சரத்குமார் அல்ல, அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ் (Nicholai Sachdev) ஆவார். பிராண்ட்-நியூ போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை நடிகை வரலக்‌ஷ்மியின் வீட்டிற்கே வந்து ஹோம் டெலிவிரி (Home Delivery) செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், காரை டெலிவிரி பெறும்போது கணவருடன் வீடியோ காலில் தனது மகிழ்ச்சியை வரலக்‌ஷ்மி பகிர்ந்து கொள்வதையும், பின்னர் அந்த காரை அவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து வீட்டில் இருந்து ஓட்டி செல்வதையும் காணலாம். காரை பிங்க் நிறத்தில்தான் கணவர் புக் செய்துள்ளார் என்பதை ஏற்கனவே தெரிந்தவர் போல், பிங்க் நிற ஆடை அணிந்தப்படி வரலக்‌ஷ்மி காரை டெலிவிரி பெறுவதை காண முடிகிறது.

actress varalakshmi receives porsche 718 boxster sports car

இந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரின் ரோஸ் நிறத்தை 'ஆண்டிக் ரோஸ்' (Antique Rose) என அழைக்கின்றனர். இந்த பிங்க் நிறத்தை வரலக்‌ஷ்மியின் போர்ஷே 718 பாக்ஸ்டர் காருக்காகவே பிரத்யேகமாக வழங்கி உள்ளனர். அதாவது, இந்த கலர் ஆப்ஷனை போர்ஷே நிறுவனம் 718 பாக்ஸ்டர் காருக்கு வழங்குவது இல்லை. ஷோரூம் தரப்பில் இருந்து இந்த கலர் ஆப்ஷனை வரலக்‌ஷ்மியின் கணவர் தேர்வு செய்து பெற்றிருக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், போர்ஷே 718 பாக்ஸ்டர் காரே தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. அப்படியிருக்க, இந்த காரை எவ்வாறு நிக்கோலாய் சச்தேவ் வாங்கினார் என்பது தெரியவில்லை. கேமேன், பாக்ஸ்டர், ஸ்பைடர் என மூன்று விதமான வெர்சன்களில் போர்ஷே 718 கார் விற்பனை செய்யப்பட்டது. அவற்றுள் ஒன்று, 718 பாக்ஸ்டர் ஆகும். 718 பாக்ஸ்டர் ஆனது 2 இருக்கைகளை மட்டுமே கொண்ட போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

actress varalakshmi receives porsche 718 boxster sports car

2023ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்த சமயத்தில் 718 பாக்ஸ்டர் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Prices) ரூ.1.08 கோடியில் இருந்து ரூ.2.16 கோடி வரையில் இருந்தன. 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த 718 பாக்ஸ்டர் காரை எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் வரலக்‌ஷ்மி பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2023ஆம் ஆண்டிலேயே விற்பனை நிறுத்தப்பட்ட போர்ஷே காரை எவ்வாறு இப்போது நிக்கோலாய் சச்தேவ் வாங்கியுள்ளார் என்பது மில்லியன் டாலர் கேள்வி ஆகும். இதனாலேயே ஒருவேளை செகண்ட்-ஹேண்டில் இந்த 718 பாக்ஸ்டர் காரை மனைவிக்கு பரிசாக வாங்கிக் கொடுத்தாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. அல்லது, மனைவிக்காக பிரத்யேகமாக இந்த காரை அவர் வெளிநாட்டில் இருந்து வரவழைத்து வாங்கி கொடுத்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2025, 5:00 [IST]
English summary
Actress varalakshmi receives porsche 718 boxster sports car as a gift from husband
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X