இந்த கால சில்க் சிமிதா வாங்கினால் பென்ஸ் கார்கள் மட்டும்தான் போல! கார்களோட மொத்த மதிப்பை சேர்த்தாலே ரூ.10 கோடி
வித்யா பாலன் (Vidya Balan), பிரபலமான பாலிவுட் நடிகை. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சிமிதா (Silk Smitha)-இன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'தி டர்டி பிக்சர்'-இல் நடித்ததன் மூலம் தென்னிந்தியா உள்பட இந்திய அளவில் கவனத்தை பெற்றார். சுமார் 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் வித்யா பாலன், தேசிய ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் பத்மா ஸ்ரீ விருதுகளை பெற்றவர் ஆவார். மேலும், அவ்வப்போது விளம்பர படங்களிலும் காட்சியளிக்கக்கூடிய நடிகை வித்யா பாலன் தனது 46வது பிறந்தநாளை சமீபத்தில்தான் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு (New Year)-இன் போது கொண்டாடினார். இவரிடம் உள்ள 3 மெர்சிடிஸ் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 (Mercedes-Maybach S580): பென்ஸ் கார்களை காட்டிலும் விலையுயர்ந்தவையாக விளங்கும் மேபக் கார்களிலும் எஸ்580 மாடலை நடிகை வித்யா பாலன் தனது கேரேஜில் வைத்துள்ளார். இந்த காரின் அதிகப்படியான விலைக்கு ஏற்ப இதில் உயர்தரத்திலான மெட்டீரியல்கள் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த காரில் பொருத்தப்படும் 4.0 லிட்டர் வி8 என்ஜின் ஆனது 503 எச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் பொருத்தப்படும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் வழங்குகிறது. இந்த காரிலும் மெர்சிடிஸின் 4மேட்டிக் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.சி300 (Mercedes-Benz GLC300): நடிகை வித்யா பாலன் வாங்கிய முதல் கார் இதுவாகும். சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்கும் இந்த பென்ஸ் காரை ஏகப்பட்ட பணக்காரர்களும் வைத்துள்ளனர். எம்பக்ஸ் (MBUX) மல்டிமீடியா சிஸ்டம், வாய்ஸ் கண்ட்ரோல், மெமரி ஃபங்க்சன் & லம்பர் சப்போர்ட் உடன் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை இந்த காரினுள் வழங்கப்படும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

இந்த மெர்சிடிஸ் காரில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் எம்254 டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 258 எச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த டர்போ என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அத்துடன், மெர்சிடிஸின் 4மேட்டிக் டிரைவ்டிரெயினை பெறும் இந்த காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடலாம்.
மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 (Mercedes-Maybach GLS600): பாலிவுட் (Bollywood) நடிகர், நடிகைகள் பலரிடம் உள்ள மாடர்ன் மெர்சிடிஸ் கார் ஆகும். ஆதலால், வித்யா பாலனிடமும் இந்த கார் இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. மெர்சிடிஸில் இருந்து விற்பனை செய்யப்படும் மிகவும் விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி கார் இது எனலாம். அந்த அளவிற்கு காருக்குள் அமர்பவர்களை மிகவும் சவுகரியமாக கொண்டு செல்லக்கூடியது இந்த கார் ஆகும்.

இந்த காரில் பொருத்தப்படும் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 557 எச்பி மற்றும் 770 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மெர்சிடிஸின் 4மேட்டிக் டெக்னாலஜி வழங்கப்படுகிறது. இந்த அளவில் பெரியதான எஸ்யூவி காரில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகை வித்யா பாலனிடம் உள்ள மெர்சிடிஸ் கார்கள் இவை ஆகும். பாலிவுட் சினிமா பிரபலங்கள் என்றாலே அதிகளவில் பென்ஸ் கார்களை வாங்கி குவிப்பர். அதில் நடிகை வித்யா பாலனும் சந்தேகமில்லாமல் ஒருவராக இருக்கிறார். இந்தியாவில் லக்சரி கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் மெர்சிடிஸ் இருப்பதற்கு பாலிவுட் சினிமாக்காரர்களும் முக்கிய காரணம் ஆகும். இவை இல்லாமல், பிஎம்டபிள்யூ, ஆடி கார்களும் வித்யா பாலனிடம் உள்ளன.


Click it and Unblock the Notifications









