இவங்க தொல்ல தாங்க முடியல! சொகுசு காரா வாங்கி நம்மல கடுப்பேத்துறாங்க.. சமீபத்தில் ஆடம்பர காரை வாங்கிய நடிகைகள்!

'இவங்க அக்கபோருக்கு ஒரு முடிவே இல்லையா'.. என கதற செய்கின்ற அளவிற்கு இந்திய திரை நட்சத்திரங்கள் ஆடம்பர கார்களை வாங்கும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இதன் வாயிலாக நடிகர்கள் பலர் சொகுசு கார்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதிலும் அவர்கள் வாங்கும் கார்கள் ஒவ்வொன்றும் பல லட்சங்களை விலையாகக் கொண்டு இருப்பதுதான் இங்கு பலருக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதன் காரணத்தினாலேயே அவர்கள் தலைப்பு செய்திகளிலும் இடம் பிடித்துவிடுகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் முன்னணி நடிகர்களான ஐஸ்வர்யா ராய், ரேகா போன்றோர் கார் வாங்கிய நிகழ்வு பெரும் பேசு பொருளாக மாறியது.

அந்த அளவிற்கே மிக மிக உயர்ந்த விலைக் கொண்ட காரையே அவர்கள் வாங்கினார்கள். இவர்களைப் போலவே இன்னும் சில பிரபலங்கள் சமீபத்தில் காரை வாங்கி இருக்கின்றனர். அவர்கள் யார்? அப்படி என்ன கார் மாடலை இந்த நடிகர்கள் வாங்கினார்கள்? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Actress who bought luxury car recently list

ஐஸ்வர்யா ராய்: இவர் வாங்கி இருப்பது டொயோட்டா வெல்ஃபையர் கார் மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் இதுவாகும். இதன் விலையும் மிக மிக அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

டிவி போன்ற 14 அங்குல பெரிய திரை, சொகுசான இருக்கைகள் (வெண்டிலேட் மற்றும் சூடாகும் வசதியையும் இதுக் கொண்டிருக்கும்), கார் இணைப்பு தொழில்நுட்பம், ஹெட்ஸ் அப் திரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களையே டொயோட்டா இந்த வெல்ஃபையர் கார் மாடலில் வழங்கி இருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களை தாங்கியிருப்பதிலும் இந்த சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் மற்றும் அடாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. எஞ்சினைப் பொருத்த வரை ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 193 எச்பி மற்றும் 240 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். இ-சிவிடி டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 1.40 கோடிக்கும் அதிகமான விலையைக் கொண்டதே ஐஸ்வர்யா ராய் வாங்கி இருக்கும் வெல்ஃபையர் கார் மாடல் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

ரேகா: ஜாம்பவான் நடிகை என இவரை கூறலாம். இந்த நடிகை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி43 ஏஎம்ஜி கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் மிக அதிக சொகுசு வசதிகளைத் தாங்கிய எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 1.30 கோடி ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக முக்கியமான ஆடம்பர மற்றும் நவீன கால அம்சங்கள் பலவற்றை இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 64 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஆக்டீவ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

9 ஏர்பேக்குகள், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹீட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை, 15 ஸ்பீக்கர்கள் கொண்ட பர்மெஸ்டர் சவுண்டு சிஸ்டம், அடாஸ் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் தற்போது 2.0 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 421 எச்பி மற்றும் 520 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எஞ்சினுடன் சேர்த்து 48 வோல்ட் ஐஎஸ்ஜி மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே எரிபொருள் சிக்கனத்தை மிகப் பெரிய செய்துக் கொள்ள முடியும்.

கங்கனா ரனாவத்: முன்னணி நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூ (Range Rover Autobiography LWB) சொகுசு காரையே வாங்கி உள்ளார். இதன் ஒரே ஒரு யூனிட்டே 3.81 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கங்கனா, சமீபத்தில்தான் மும்பையில் அவருக்கு சொந்தமான 32 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களா வீட்டை விற்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே அவர் இந்த 5 சீட்டர் சொகுசு கார் மாடலை வாங்கியிருக்கின்றார். இந்த காரில் மிகவும் அட்வான்ஸ்டு அம்சங்கள் நிரம்பிய 13.1 அங்குல அளவுக் கொண்ட தொடுதிரை பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சம், சப் ஊஃபருடன் கூடிய 34 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், பின்பக்க இருக்கையாளர்களுக்கு என தனி 8 அங்குல தொடுதிரையும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்று இன்னும் பல ஆடம்பர வசதிகளை இந்த காரில் நம்மால் காண முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, அடாப்டீவ் ஆஃப்-ரோடு க்ரூஸ் கன்ட்ரோல், டைனமிக் ஏர் சஸ்பெஷன் போன்றவற்றையும் இதில் இடம் பெற்றிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகைகளைப் போலவே சமீபத்தில் முன்னணி நடிகர்கள் சிலரும் சொகுசு கார்களை வாங்கி இருக்கின்றனர் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்த நிகழ்வு இப்போதும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது. மேலும், அடுத்து வரும் நாட்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டில் மிக அதிக அளவில் அரங்கேறும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 5:00 [IST]
English summary
Actress who bought luxury car recently rekha to aishwarya rai
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+