டாப் நடிகைகளாக இருந்தால் இதெல்லாம் சாதாரணம்... இந்த கார்கள் எல்லாம் நமக்கு கனவுதான்!!

பாலிவுட் (Bollywood)-க்கு ஆடம்பரம் என்று மற்றொரு பெயரை சூட்டலாம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் கோடிகளில் புரளும் விஐபி (VIP)-களாக தான் உள்ளனர். குறிப்பாக, விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்கி குவிப்பதில் இந்தி சினிமாக்காரர்கள் மிகுந்த ஆர்வமிக்கவர்களாக உள்ளனர். எந்த அளவிற்கு என்றால், விலையுயர்ந்த மெர்சிடிஸ்-மேபக் (Mercedes-Maybach) கார்கள் கூட ஒன்றுக்கு மேற்பட்டவை பாலிவுட் நடிகைகளிடம் உள்ளன. அவ்வாறு, 2 மேபக் கார்களை வைத்திருக்கும் 3 முன்னணி பாலிவுட் நடிகைகளை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வித்யா பாலன் (Vidya Balan): மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக 'தி டர்டி பிக்சர்'-இன் மூலமாக தென்னிந்தியாவிலும் பிரபலமாகிய இந்தி நடிகை வித்யா பாலனிடம் மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 மற்றும் ஜி.எல்.எஸ்600 என 2 விலையுயர்ந்த மேபக் கார்கள் உள்ளன. இதில், எஸ்580 ஆனது செடான் ரக கார் ஆகும். மேலும், இது ஒரு மைல்ட்-ஹைப்ரீட் (Mild-Hybrid) கார் ஆகும்.

actress who owned mercedes-maybach cars

ஏனெனில் இதில், 4.0 லிட்டர் வி8 என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மறுப்பக்கம், மேபக் ஜிஎல்எஸ்600 ஆனது பாலிவுட் சினிமாக்காரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள லக்சரி கார் ஆகும். வித்யா பாலன் உள்பட கடந்த சில வருடங்களில் பல பாலிவுட் பிரபலங்களால் வாங்கப்பட்டுள்ள மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.35 கோடி என்கிற அளவில் உள்ளது.

தீபிகா படுகோனே (Deepika Padukone): தற்சமயம் இந்தியாவின் டாப்-2 நடிகைகளுள் ஒருவராக இருக்கும் இவரிடம் உள்ள மேபக் கார்களுள் ஒன்று, ஓல்டு-ஜென்ரேஷன் மேபக் எஸ்500 ஆகும். இதில், 4.7 லிட்டர் வி8 பை-டர்போ என்ஜின் பொருத்தப்படுகிறது. ஏற்கனவே விற்பனை நிறுத்தப்பட்டுவிட்ட இந்த மேபக் காரின் விலை கடைசியாக ரூ.1.85 கோடி என்கிற அளவில் இருந்தது.

actress who owned mercedes-maybach cars

இந்த காரை தீபிகா படுகோனே இன்னும் வைத்துள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த நடிகையிடம் உள்ள மற்றொரு மேபக் கார், வித்யா பாலனிடம் உள்ள மேபக் ஜிஎல்எஸ்600 ஆகும். இதனை தீபிகா படுகோனேவின் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் பரிசளித்து இருந்தார். இந்த வகையில், பாலிவுட் வட்டாரத்தில் மேபக் ஜிஎல்எஸ்600 காரை சொந்தமாக்கிய முதல் கஸ்டமர்களுள் தீபிகா படுகோனேவும் ஒருவராவார்.

கங்கனா ரனாவத் (Kangana Ranaut): சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆக அரசியல் அவதாரம் எடுத்துள்ள நடிகையான இவரிடமும் 2 மேபக் கார்கள் உள்ளன. கங்கனா முதலாவதாக வாங்கியது, மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 ஆகும். இது நடிகை வித்யா பாலனிடம் உள்ள மேபக் எஸ்580 காரை விட அளவில் பெரியது ஆகும். அதற்கேற்ப அளவில் பெரியதான & பவர்ஃபுல்லான என்ஜின் இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது.

actress who owned mercedes-maybach cars

மேபக் எஸ்680 காரில் பொருத்தப்படும் 6.0 லிட்டர் வி12 ட்வின்-டர்போ என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 604 பிஎச்பி மற்றும் 900 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மேலும், கங்கனாவிடமும் மேபக் எஸ்.எல்.எஸ்600 காரும் வெள்ளை நிறத்தில் உள்ளது. இதனை அவர் பல நிகழ்ச்சிகளுக்கு கொண்டுவந்துள்ளதை பார்த்திருக்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ் உருவாக்கும் கார்களுள் மேபக் கார்கள் மிகவும் உயர்தரத்தில் உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்ப கோடிகளில் விலை கொண்ட அவற்றில் இரு கார்களை வைத்துள்ள பாலிவுட் நடிகைகளை பற்றி மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். தமிழ், தெலுங்கு சினிமாவில் எந்த நடிகையாவது இவ்வாறு 2 மேபக் கார்களை வைத்துள்ளனரா என்பது உறுதியாக தெரியவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 31, 2024, 8:00 [IST]
English summary
Actress who owned two mercedes maybach cars vidya balan deepika padukone kangana ranaut
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X