மார்க் ஆண்டனி இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனிற்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு! விலையை கேட்டா தலையே சுத்தும்!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்பு அதன் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிற்க்கு தயாரிப்பாளர் வினோத் பிஎம்டபிள்யூ 3 சிரீஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாக ஆகிவிட்டாலும், எதிர்பாராத விதமாக இந்த திரைப்பட சிறப்பாக இருந்ததால் மக்கள் பலர் இந்த திரைப்படத்தை ரசிக்க துவங்கி விட்டனர். இதனால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

adhik ravichandran bmw 3 series

குறிப்பாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் மிகப்பெரிய டிரெண்ட் என்றால் வெற்றி பெற்ற ஒரு படம் என்றால் அதன் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் காரை பரிசாக வழங்குகிறார்கள். இது நடிகர் கமல் நடித்த விக்ரம், ரஜினி நடித்த ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் அதன் இயக்குநர்களுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.

தற்போது இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரனுக்கு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் பிஎம்டபிள்யூ 3 சிரீஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கார் தற்போது இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 42.80 லட்சம் முதல் ரூபாய் 52.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை ஆகிறது.

adhik ravichandran bmw 3 series

இந்த காரின் டீசல் இன்ஜினை பொறுத்தவரை 1995 சிசி இன்ஜினை கொண்டதாக இருக்கிறது. பெட்ரோலை பொருத்தவரை 1998 சிசி இன்ஜினை கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் பவரை பொருத்தவரை 188 முதல் 255 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் டீசல் வெர்ஷன் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.8 நொடியிலும், பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன் 6.8 நொடியிலும் பிக்கப் செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் அதிகபட்ச வேகமாக டீசல் இன்ஜின் உடன் 243 கிலோமீட்டர் வேகத்திலும் பெட்ரோல் இன்ஜினுடன் 250 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.

adhik ravichandran bmw 3 series

இந்த கார் உட்புறத்தில் அதிகமான சொகுசு வசதி மற்றும் ஆடம்பர வசதிகள் நிறைந்த காராக இருக்கிறது. இந்த காரின் இன்ஜின் ஸ்மூத்தாகவும் அதே நேரத்தில் சிறப்பாகவும் செயல்படும் இன்ஜினாக உள்ளது. இந்த காரை கையாள்வதும் எளிது. குறிப்பாக திருப்பங்களில் இந்த காரை எளிதாக திருப்ப முடிகிறது. நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்த காரில் வேகமாக பயணித்தால் சிறப்பாக இருக்கும்.

இந்த காரில் உள்ள பிரச்சனை என்றால் இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருக்கும். இதனால் பள்ளமேடுகள் நிறைந்த சாலையில் இந்த காரை ஓட்டி செல்வது சிரமமாக இருக்கும். அதே நேரம் இந்த காரின் பூட் பகுதியில் ஸ்பேர் வீல் அதிகமான இடத்தை பிடித்துக் கொள்வதால் அதிக பொருட்களை ஏற்றி சொல்ல முடியாது. அதே நேரம் இந்த காரின் விலையும் சற்று அதிகம் தான்.

adhik ravichandran bmw 3 series

தற்போது தயாரிப்பாளர், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வழங்கியுள்ள இந்த பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் என்பது மட்டும்தான் நமக்குத் தெரிகிறது. அதில் எந்த வேரியண்ட் காரை அவர் வழங்கியுள்ளார் என்ற தகவல் நமக்கு தெரியவில்லை. வேரியண்ட்டை பொறுத்துதான் காரின் விலை என்ன என தெரியவரும். நமக்கு தெரிந்தவரை இது 320டி லக்ஸரி எடிஷன் காராக இருக்க வாய்ப்புள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 50.88 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு திரைப்படம் வெற்றி பெற்று விட்டால் அதன் இயக்குனர் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் புதிதாக கார் ஒன்றை வாங்கி பரிசாக அளிப்பது டிரெண்டாகி வருகிறது. அதன் அடிப்படையில் தான் தற்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த கார் பரிசு அவரை ஊக்குவித்து அவரது அடுத்த படத்தை நிச்சயம் மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 12:53 [IST]
English summary
Adhik ravichandran was gifted a bmw car by mark antonys producer to celebrate the massive success
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X